கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போத்தலாப்பிட்டிய பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், உடனடியாகக் கம்பளை பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உடலைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணைகளைத் தொடங்கினர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் நாவலப்பிட்டி, சேலம்பிரிட்ஜ் (Selambridge) பகுதியைச் சேர்ந்த சுமார் 48 வயதுடைய ஆண் என்பது தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனைகளுக்காகச் சடலம் தற்போது கம்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: க. யோகா
