புலம்பெயர் இலங்கையர்களுடன் மெல்பேர்னில் சந்திப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையர்களால் ஸ்பிரிங்வேல் நகர மண்டபத்தில் இதற்குரிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அமைச்சர் இதன்போது கேட்டறிந்து கொண்டார்.

தற்போதைய அரசாங்கத்தினால் அதற்காக எடுக்கப்பட்டுள்ள முற்போக்கான தீர்மானங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

புதிய அரசாங்கத்தின் மீது புலம்பெயர் இலங்கையர்கள் வைத்துள்ள தளராத நம்பிக்கைக்காக அமைச்சர் நன்றி தெரிவித்ததுடன், அந்த நம்பிக்கைக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பங்கம் ஏற்படாத வகையில் அரசாங்கம் செயற்படும் எனவும் உறுதியளித்தார்.

Related Articles

Latest Articles