“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணத்தை முடக்கக் கூடாது. ஊழல் மற்றும் மோசடியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஊழல் மற்றும் மோசடியாளர்களுக்கு எதிராகச் சட்டத்தை அமல்படுத்தி வருகிறது. எனவே, இந்த அரசாங்கத்திற்கு எமது ஆசீர்வாதம் இருக்கும்.
சட்டம் அமுலாகும் போது சில இடங்களில் தாமதம் இருந்தாலும், இதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சி வரவேற்கத்தக்கது. எனவே, இந்த அரசாங்கத்தை அதன் ஆயுள்காலம் முடியும் வரை பாதுகாக்க வேண்டும். எமக்கு எந்தப் பதவிகளும் தேவையில்லை” என்றும் பொன்சேகா குறிப்பிட்டார்.










