அரசின் ஊழல்களை மூடிமறைக்கவே 22: நாமல் குற்றச்சாட்டு

“அரசாங்கம் தனது ஊழல் மோசடிகளை மூடி மறைப்பதற்கானதொரு அரசியல் ஆயுதமாகவே 22-ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்தைப் பயன்படுத்துகின்றது” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

“அரசாங்கத்தின் நிலக்கரி மோசடி, பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை மற்றும் ஹோக்கர்களின் நிதிக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை மூடிமறைப்பதற்கே அரசாங்கம் முற்படுகின்றது. 22-ஆவது திருத்தச்சட்டமூலத்தின் பின்னணியிலுள்ள முதன்மை நோக்கமும் இதுவேயாகும்.

இதன் காரணமாகவே, நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்குமாறு அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். எமக்கு எவ்வித தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலும் கிடையாது; மக்களுக்காகவே நாம் தொடர்ந்து குரல்கொடுப்போம். எமது குரல்களை நசுக்க ஆளுந்தரப்பு முற்பட்டாலும், மக்களுக்காக களமிறங்கிப் போராட நாம் தயங்கமாட்டோம்.

அரசாங்கம் எந்தவொரு தேர்தலை நடத்தினாலும், அதனைச் சந்திக்க எமது கட்சி முழுமையான தயார்நிலையிலேயே உள்ளது” என்றார் நாமல் ராஜபக்ச.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles