“ தலைவர்களை மக்களே உருவாக்குகின்றனர். அவ்வாறு மக்கள் கோரும் தலைவர்தான் நாமல் ராஜபக்ச. அந்த தலைவர் தற்போது சிறையில் உள்ளார். அவர் பல தலைவர்களை உருவாக்கியுள்ளார். அவர்கள் தற்போது வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றனர்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிசி சானக தெரிவித்தார்.
2029 ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி தேர்தலில் வெல்லக் கூடியவர்களை சிறையில் தள்ளுவதற்கு சூழ்ச்சி நடக்கின்றது. எமக்கு நிதிமன்றம்மீது நம்பிக்கை உள்ளது. எனவே, அந்த சூழ்ச்சியை தோற்கடிப்போம் எனவும் அவர் கூறினார்.
