இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , அமெரிக்காவில் இருக்கும்போது எந்த வகையிலும், எந்தச் சூழலிலும் கைது செய்யப்பட மாட்டார் என்று ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க , நெதன்யாகு நியூயார்க் வந்தால், அவரைக் கைது செய்வதா என்பது குறித்துத் தனது நிர்வாகம் இன்னும் ஆலோசித்து வருவதாக நியூயார்க் மேயர் மம்தானி தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே ட்ரம்ப் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப், மம்தானியின் பெயரைக் நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும், அவரை இலக்கு வைத்தே மேற்படி கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு இஸ்ரேல் உதவி செய்து வருகின்றது எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.










