ஞானசார தேரர் விவகாரத்தில் அரசமைப்பை மீறிவிட்டது என்பிபி அரசு: ரணில் சுட்டிக்காட்டு

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மத்திய சிறையில் சிறை அதிகாரியாகப் பணியாற்றிய திவ்யா சௌத்ரி (Divya Chaudhary) என்பவர், இரண்டு பெண் கைதிகளை விதிகளை மீறித் தனது சொந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டைச் சுத்தம் செய்ய வைத்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்த திவ்யா சௌத்ரியைக் கோட்டா (Kota) பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.

கடந்த ஜூலை 12-ஆம் திகதி, அஜ்மீர் மத்திய சிறையில் தனித்தனி கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கிரண் மற்றும் சனா ஆகிய இரு பெண் கைதிகளை, நீதிமன்றத்தின் அனுமதியோ சிறைப் பதிவேடுகளில் பதிவோ இன்றி, திவ்யா சௌத்ரி தனது சொந்த காரில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

தனது பிளாட்டைச் (Flat) சுத்தம் செய்ய கைதிகளைப் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் வெளியே தெரிந்ததையடுத்து, கைதிகள் மீண்டும் சிறைக்குக் கொண்டுவரப்பட்டு, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய சிறை அதிகாரி திவ்யா சௌத்ரி மற்றும் மற்றொரு பெண் ஊழியரான சோனியா ஆகிய இருவருமே பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஆகஸ்ட் 5-ஆம் திகதி அஜ்மீரின் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், இருவரும் பணிக்கு வராமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர்.

அஜ்மீர் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷவர்தன் அகர்வாலின் உத்தரவின் பேரில், சைபர் பிரிவின் உதவியோடு திவ்யா சௌத்ரியை அஜ்மீர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மற்றொரு ஊழியரான சோனியாவைத் தேடும் பணியிலும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles