NPP போராட்டத்தின் போது காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதி

தேசிய மக்கள் சக்தியினால் இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது காயமடைந்த சுமார் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, இப்பன்வல சந்தியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்தனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தாமதப்படுத்துவதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் போராட்டக்காரர்கள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்தனர்.

எவ்வாறாயினும், போராட்டக்காரர்கள் பொலிஸ் எல்லையை மீறி முன்னேற முயற்சித்ததால், குழுவை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர் பீரங்கி பயன்படுத்தப்பட்டது.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டபத்தை அண்மித்த பல வீதிகள் தடைப்பட்டுள்ளன.

இதன்படி, நகரசபையை அண்மித்துள்ள வீதிகள் மற்றும் அதனை அண்மித்துள்ள பல வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேர் கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தீவு மற்றும் கொழும்பு கோட்டை பிரதேசங்களிலும் வைத்தியசாலை சதுக்கத்திலும் எதிர்ப்பு பேரணிகளை நடத்துவதற்கு முன்னதாக இரண்டு நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles