முதியோர் இல்ல தீ விபத்து: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு: பணிப்பாளர் கைது!

ஹெரணை, அங்குருவாதொட்ட, பட்டகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

எரிகாயங்களுக்கு உள்ளான 07 பேர் ஹெரனை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். மேலும் மூவரைக் காணவில்லை.

தீ விபத்து ஏற்பட்டவேளை அங்கு சுமார் 72 பேர்வரை இருந்துள்ளனர் என தெரியவருகின்றது.

அதேவேளை, இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக, முதியோர் இல்லத்தின் பணிப்பாளர் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை இன்று (04) ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை. விசாரணை இடம்பெற்றுவருகின்றது.

Related Articles

Latest Articles