கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சார்த்திகளுக்காக, ஆட்பதிவு திணைக்களம் நாளை (04) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம், காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய அலுவலகங்கள் நாளை காலை 08.30 முதல் 01.00 மணி வரை திறந்திருக்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு மாத்திரம் நாளை சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் இதுவரை அடையாளஅட்டையை பெற்றுக் கொள்ளவில்லை என்றால், உரிய ஆவணங்களுடன் அதிபர் அல்லது கிராம அலுவலரின் கையொப்பத்துடன் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள என்ற www.drp.gov.lk ஆட்பதிவு திணைக்களத்தின் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்குமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.
