அமெரிக்காவும் ஈரானும் தங்களது பரஸ்பரத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதைத் தொடர்ந்து, திங்களன்று கச்சா எண்ணெய் விலைகள் 5 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்தன.
இந்தத் தற்காலிக போர் நிறுத்தம், தூதரகப் பேச்சுவார்த்தைகள் மூலம் மோதலைத் தணித்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகக் கப்பல் போக்குவரத்தைச் சீரமைக்க உதவும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 27 அன்று கச்சா எண்ணெய் விலை
ப்ரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) எதிர்கால ஒப்பந்தங்களின் விலை $4.89 (5.05%) குறைந்து, ஒரு பேரல் $91.89 ஆக வீழ்ச்சியடைந்தது.
வர்த்தகத்தின் தொடக்கத்தில் இது முக்கிய ஆதரவு நிலையான $90-க்கும் கீழே சரிந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ (WTI) கச்சா எண்ணெய் விலை $4.67 (5.23%) குறைந்து, ஒரு பேரல் $84.64 ஆக நிலைபெற்றது. கடந்த வாரம் கச்சா எண்ணெய் விலை 10% வரை உயர்ந்திருந்த நிலையில், தற்போது இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று வாரங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த இரு சர்வதேசக் கச்சா எண்ணெய் விலைகளும், தற்போது கடந்த ஒரு வார காலத்தில் இல்லாத அளவிற்குக் குறைந்த பட்ச நிலையை எட்டியுள்ளன.
