“எங்கள் காலம் முடிந்துவிட்டது; தலைமையேற்க முன்வாருங்கள்” – இளைஞர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு

“எமது பரம்பரையில் நாங்கள் செய்ய வேண்டியவற்றைச் செய்து முடித்துவிட்டோம். இனிவரும் காலம் உங்கள் பரம்பரையிடமே உள்ளது. நீங்கள் தலைமையேற்பதற்கு, நாங்கள் இருக்கும் வரை ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும். அவ்வாறு பொறுப்பேற்கக் கூடியவர்கள் முன்வந்தால், அவர்களுக்கு நான் முழுமையான ஆதரவை வழங்குவேன்.”

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இளைஞர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்:

“ஜென்-சி (Gen Z) தலைமுறை பற்றி உங்களுக்குத்தான் தெரியுமே தவிர, எனக்குத் தெரியாது. ஏனெனில், எங்களது காலத்தில் எங்களுடைய கருத்துகளை எமது பெற்றோர் அறிந்து வைத்திருக்கவில்லை.

புதிய உலகை நோக்கிச் செல்ல வேண்டுமானால், அங்கு வாழும் விதம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

ஜே.ஆர். ஜெயவர்தன அவர்களின் காலத்தில் இளைஞர்களாக இருந்த எங்களுக்குச் சுதந்திரமாக – எமது சிந்தனைக்கேற்பச் செயல்பட இடமளிக்கப்பட்டது. நாமும் அதன் மூலம் முன்னேறினோம். எனவே, தற்போதைய நவீன உலகிற்குத் தலைமையேற்க இளைஞர்கள் துணிச்சலுடன் முன்வர வேண்டும்,” என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles