கத்தாரின் தந்தை முன்னாள் அமீரின் (Father Emir of Qatar) மறைவுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் நாட்டு மக்கள் சார்பாக இரங்கலைத் தெரிவிப்பதற்காகக் கத்தாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (16) இலங்கை திரும்பியுள்ளார்.
கத்தார் விஜயத்தின் போது, லுசைல் அரண்மனையில் (Lusail Palace) கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியைச் (Sheikh Tamim bin Hamad Al Thani) சந்தித்த பிரதமர், அரச குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அல் வஜ்பா அரண்மனைக்குச் (Al Wajba Palace) சென்ற பிரதமர், கத்தார் அமீரின் தாயாரும், கத்தார் அறக்கட்டளையின் (Qatar Foundation) தலைவருமான ஷேக்கா மோசா பின்ட் நாசர் (Sheikha Moza bint Nasser) அவர்களிடம் இலங்கை சார்பாக இரங்கலைத் தெரிவித்தார்.
