2026 ஜனவரி முதல் ஜுன் வரையான காலப்பகுதிக்குள் 11 லட்சத்து 4 ஆயிரத்து 354 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரச்சபையின் தரவு பட்டியலில் மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 281,418 பேரும், பிரித்தானியாவில் இருந்து 104,754 பேரும், ரஷ்யாவில் இருந்து 76,963 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
குறித்த நாடுகளே முதல் மூன்று இடங்களில் உள்ளன. சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா, போலந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் அடுத்த இடங்களில் உள்ளன.
அதேவேளை, ஜுன் முதலாம் திகதி முதல் 21 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் மட்டும் 82.332 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர்.
