பதுளை உட்பட் 7 மாவட்டங்களில் வறட்சி: 80 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 7 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 26,457 குடும்பங்களைச் சேர்ந்த 84,545 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வறட்சி காரணமாக அம்பாறை மாவட்டத்தில் 8,847 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28,523 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 35,639 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 2,646 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில்7,876 பேரும் , அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 515 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த மாவட்டங்களில் உள்ள ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிவேகமாகக் குறைவடைந்துள்ளது.

இதனால் விவசாய நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏராளமான குடும்பங்கள் குடிநீரைப் பெறுவதிலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டைக் போக்கும் வகையில், 20 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குப் குடிநீரை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

இதன்படி, 24,144 குடும்பங்களைச் சேர்ந்த 75,734 பேருக்கு தற்போது குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

 

Related Articles

Latest Articles