Home Blog Page 107

மலையக மக்களுக்கான சம்பள உயர்வை எதிர்க்கவில்லை: காணி உரிமையும் வழங்குக!

“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறு தோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ மலையக மக்களுக்கு ஆயிரத்து 750 ரூபா வழங்குவதற்கு நாம் எதிர்ப்பு இல்லை. எமது உறுப்பினர்களும் எதிர்க்கவில்லை. இதனை பொறுப்புடனேயே கூறுகின்றேன்.

ஆயிரத்து 750 ரூபாவுடன் நின்றுவிடாது, தரிசு நிலங்களையும் அவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். அம்மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆயிரத்து 750 ரூபா வழங்குவது நல்ல விடயம். அதேபோல காணியும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டம்.” – என்றார் சஜித் பிரேமதாச.

மத்திய மலைநாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு நிறுவப்படும்!

நிர்மாணம் மற்றும் நிலப் பயன்பாடு, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பற்ற தனித்தனியான செயல்பாடு, டித்வா சூறாவளியால் அழிவடைந்த மத்திய மலைநாட்டை மீட்டெடுப்பதில் தடையாக உள்ளதாகவும், மத்திய மலைநாட்டை விரைவாகப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் புதிய கட்டமைப்பை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதுடன், காடுகளை மீண்டும் வளர்க்கும் திட்டம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) மற்றும் குறித்த அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

டித்வா சூறாவளி காரணமாக மத்திய மலைநாட்டில் சுமார் 4,000 மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், நீண்டகாலமாக இடம்பெற்ற முறையற்ற நிர்மாணம், பயிர்ச்செய்கை மற்றும் பராமரிப்பு இல்லாததால் இது ஏற்பட்டுள்ளதாகவும் இங்கு வலியுறுத்தப்பட்டதுடன், மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்ல விரைவான தேசியக் கொள்கையின் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

தொடர்புடைய சட்டத்தின் மூலம் வலுப்படுத்தப்பட்ட அதிகார சபையின் தேவை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்த நடவடிக்கைகளுக்கு நிதியமொன்றை பேண வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதிகள், மத்திய மலைநாட்டை மீட்டெடுக்க இலங்கைக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இந்நாட்டு பணிப்பாளர் அலுவலகப் பிரதானி Cholpon Mambetova, அதன் விவசாயம் மற்றும் இயற்கை வள சிரேஷ்ட நிபுணர் Sumith Pokhrel, உதவி திட்ட அதிகாரி கிருஷாந்தி தாபரே ஆகியோருடன்,

ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Azusa Kubota, அந்த திட்டத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி வகீஷா குணசேகர,சுகந்தி சமரசிங்க, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர், பெருந்தொட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியலாளர் எல். குமுது லால் போகஹவத்த மற்றும் துறைசார் அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ICC T20 உலகக்கிண்ண கோப்பையை இலங்கையில் காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் ஆரம்பம்!

ICC T20 உலகக்கிண்ணப் போட்டியில் வழங்கப்படும் கோப்பையை, இந்நாட்டில் காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் ஜனாதிபதியின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

2026 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் கோப்பையை இந்நாட்டில் காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இன்று (21) முதல் 24 வரை நான்கு நாட்களுக்கு நாட்டின் பல பிரதான நகரங்களில் இது காட்சிப்படுத்தப்படுவதோடு, கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இலங்கை-இங்கிலாந்து ஒருநாள் போட்டியின் போது விளையாட்டு ரசிகர்கள் இந்த தங்கக் கோப்பையை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

அதன் பின்னர், கோப்பையை கண்டி, தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதுடன், அங்கு அந்தப் பகுதிகளில் வசிக்கும் விளையாட்டு ரசிகர்கள் உலகக் கோப்பையுடன் நினைவுப் புகைப்படங்களை எடுக்கவும் அதைப் பார்க்கும் வாய்ப்பும் வழங்கப்படும். இந்த நாட்டில் உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்படுவதற்கு முன்பு அதற்கான ஆர்வத்தையும் பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்ப்பதே இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளை பெப்ரவரி 07 முதல் மார்ச் 08 வரை இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

2012 இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிகளுக்குப் பிறகு இலங்கையில் நடத்தப்படும் மாபெரும் போட்டி, இந்த உலகக்கிண்ணப் போட்டியாகும்.

கிரிக்கெட் உலகக்கிண்ண போட்டிகளுக்கான அட்டவணை 2025 நவம்பர் 25 ஆம் திகதி இந்தியாவில் வெளியிடப்பட்டதுடன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானம், பல்லேகலே சர்வதேச மைதானம் மற்றும் கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி. மைதானம் ஆகியவற்றை இலங்கையில் நடத்தப்படும் போட்டிகளுக்கான இடங்களாகத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, 8 போட்டிகள் ஆர். பிரேமதாச மைதானத்திலும், 5 போட்டிகள் எஸ்.எஸ்.சி. மைதானத்திலும், 7 போட்டிகள் பல்லேகலே சர்வதேச மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

இம்முறை, 20 நாடுகள் போட்டியில் பங்கேற்க உள்ளதுடன், அதில் 20 போட்டிகள் இலங்கையில் நடைபெற உள்ளன. மேலும் பாகிஸ்தான் அணி போட்டியிடவுள்ள அனைத்துப் போட்டிகளும் இலங்கையில் நடைபெறும். அதேபோன்று, பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தால், அந்த இரண்டு போட்டிகளும் இலங்கையில் நடத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு நடந்தால், இறுதிப் போட்டி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறுவதோடு, இதன் மூலம் இலங்கையில் நடைபெறும் மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிக்கும்.

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் போட்டிகள் நடைபெறுவதோடு, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ், அயர்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளின் கிரிக்கட் அணிகள் இதில் அடங்கும். மேலும், அமெரிக்கா, கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நெமீபியா, நேபாளம், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளும் இந்த ஆண்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளன.

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையில் நடைபெறும் இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டிகள், நாட்டின் பொருளாதாரம், சுற்றுலாத் துறை, விளையாட்டு மேம்பாடு, சர்வதேச விளம்பரம் மற்றும் நாடு தொடர்பில் சாதகமாக நன்மதிப்பை பெறுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதலாம்.

குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு அணிகள், ஊடகக் குழுக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இலங்கைக்கு வருகை தருவதன் மூலம் நாட்டிற்கு அதிக அளவு அந்நியச் செலாவணி வருமானம் கிடைக்கும். மேலும், இதன் ஊடாக ஹோட்டல்கள் மற்றும் உணவு வர்த்தகங்கள், போக்குவரத்து சேவைகள், தொழில்நுட்ப மற்றும் நிர்வாக சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறுகிய மற்றும் நீண்ட கால வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் இந்தப் போட்டிகளை நடத்துவதன் மூலம், இலங்கையை ஒரு சுற்றுலாத் தலமாக உலகம் இனங்காண்பதுடன், அதன் ஊடாக புதிய முதலீடுகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

மேலும், வருடத்தின் ஒவ்வொரு மாதமும் இலங்கையை ஒரு விளையாட்டு சுற்றுலா மையமாக அடையாளம் காணுதல் மற்றும் நாட்டின் சர்வதேச பின்னணியை வலுப்படுத்தி, அதன் மூலம் இலங்கையின் மதிப்பை அதிகரிப்பது போன்ற நீண்டகால நன்மைகளையும் இதன் மூலம் பெற்றுத்தரும்.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் கமகே, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உட்பட நிறைவேற்றுக் குழு மற்றும் இலங்கை T20 உலகக்கிண்ண அணியின் தலைவர் தசுன் ஷானக்க, பிரதான பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

யானையைத் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி என்ற யானையை அவர் தத்தெடுத்து உள்ளார். இந்த யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை 6 மாதங்களுக்கு அவர் வழங்குவார் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் இதற்கு முன் வண்டலூர் பூங்காவிலிருந்து ஒரு சிங்கத்தையும், புலியையும் தத்தெடுத்திருந்தார்.

குளவிக் கொட்டு: ஐந்து தொழிலாளர்கள் பாதிப்பு!

குளவிக்கொட்டுக்கு இலக்கான ஐவர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா, புரவுன்லோ தோட்ட பிரிவில் தொழில் செய்து கொண்டிருந்த ஐந்து ஆண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

31 மற்றும் 55 வயதுக்கிடைப்பட்ட தொழிலாளர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா நிருபர்

வடக்கில் முதலீடு செய்ய பாதுகாப்பான சூழல் : ஆளுநர் அழைப்பு!

” கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் முதலீடுகளைச் செய்ய வந்தவர்கள், சாதகமற்ற சூழல் காரணமாகத் திரும்பிச் சென்றதே வரலாறாக இருந்தது.

ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியிருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ நடைபெறுகின்றமை மிகப் பொருத்தமானது.

இதனைப் பயன்படுத்திக் கொண்டு, தேசிய மொத்த உற்பத்திக்கான வடக்கின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்,.”

இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண வரலாற்றில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘வடக்கு (Northern Investment Summit – NIS26), யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று புதன்கிழமை (21.01.2026) காலை மிகப் பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த மாநாட்டை ‘த மனேஜ்மன்ட் கிளப்’ இலங்கை ஒழுங்கமைத்திருந்தது.

மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர்:

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாண மாநகரில் நடைபெறும் இந்த நிகழ்வானது வெறும் ஒரு மாநாடு மட்டுமல்ல, வடக்கு மாகாணத்தின் ஒரு தீர்க்கமான மற்றும் மூலோபாயத் திருப்புமுனையை நாம் அனைவரும் ஒன்றுகூடிச் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இயற்கை வளங்கள், மீளெழும் வல்லமை கொண்ட மனித மூலதனம் மற்றும் ஆழமான கலாசாரப் பாரம்பரியம் ஆகியவற்றைக் கொண்டுள்ள போதிலும், நீண்ட காலமாக இம்மாகாணம் எமது நாட்டின் தேசிய மொத்த உற்பத்தியில் மிகக் குறைந்தளவான பங்களிப்பையே வழங்கி வந்துள்ளது.

இன்று, ‘வளர்ச்சியை வலுவூட்டல், நுண்ணறிவுமிக்க புத்தாக்கங்கள்’ (Empowering Growth, Insightful Innovations) என்ற தொனிப்பொருளின் கீழ், அந்த வரலாற்றை மாற்றியமைக்கும் பணியை நாம் ஆரம்பிக்கின்றோம்.

இலங்கை, பொருளாதார மீட்சியிலிருந்து நீண்டகால நிலையான வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கத் தயாராகும் இத்தருணத்தில், இந்நிகழ்வானது மிகச் சரியான நேரத்தில் நடைபெறுகின்றது. எந்தவொரு மாகாணமும் பின்தங்கிவிடக் கூடாது என்ற அடிப்படையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ‘அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரம்’ என்ற தூரநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழேயே இம்முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது.

எமது வரலாற்றைத் திரும்பிப் பார்க்கையில், வடக்கு மாகாணமானது எப்போதும் ‘சிறப்புக்கான ஒரு நுழைவாயிலாக’ திகழ்ந்து வந்துள்ளது. அந்தப் பெருமையை மீட்டெடுப்பதே இந்த உச்சிமாநாட்டின் நோக்கமாகும்.

விவசாயம் மற்றும் கடற்றொழில், சுற்றுலாத்துறை, கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம், மற்றும் வலுசக்தி ஆகிய நான்கு மூலோபாயத் தூண்களில் கவனம் செலுத்துவதன் மூலம், எமது இளைய சமூகத்தின் திறமையையும், மூத்தவர்களின் அனுபவத்தையும், சர்வதேச மூலதனம் மற்றும் புத்தாக்கங்களுடன் இணைப்பதற்கான ஒரு வரைபடத்தை நாம் உருவாக்குகின்றோம்.

இன்று மேற்கொள்ளப்படும் முதலீடுகள், வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு பிரஜைக்கும் நிலையான வேலைவாய்ப்புகள், துடிப்பான தொழில் முயற்சிகள் மற்றும் செழிப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்குவதை உறுதி செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம், என்றார் ஆளுநர்.

வெனிசுலா, கனடா, கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடத்தை வெளியிட்டார் ட்ரம்ப்!

வெனிசுலா, கனடா மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்கப் பகுதிகளாகக் காட்டும் செயற்கை நுண்ணறிவு வரைபடத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று வெளியிட்டுள்ளார்.

உலகின் அதிக எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கப் படைகள், அந்நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை சிறைப் பிடித்து சென்றது.

மேலும், அந்நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியாக விளங்கும் கிரீன்லாந்தை முழுவதுமாக அமெரிக்கா ஆக்கிரமிக்க வேண்டும் என ட்ரம்ப் கூறி வருகிறார்.

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிகவும் முக்கியம். நாங்கள் இந்த கிரீன்லாந்தை கைப்பற்றாவிட்டால் சீனா அல்லது ரஷ்யா கைப்பற்றிவிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ட்ரம்ப் அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவுக்கு, டென்மார்க் மற்றும் ஏராளமான ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வெனிசுலா, கனடா நாடுகள் மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்காவின் பகுதிகளாகக் குறிப்பிட்டு செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட வரைபடத்தை அதிபர் ட்ரம்ப் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் – பிரதமர் ஹரிணி சுவிஸில் சந்திப்பு!

சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்துடன், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பேச்சு நடத்தியுள்ளார்.

உலகப் பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டிற்குச் சமாந்தரமாக மேற்படி சந்திப்பை அவர் நடத்தியுள்ளார்.

” இச்சந்திப்பின்போது, ‘திட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்குச் சிங்கப்பூர் வழங்கிய உதவிகளுக்காக நன்றியைத் தெரிவித்ததோடு இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடினேன்.” – என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நானுஓயாவில் மாணவிகளுக்கு ஆபாச காணொளி காண்பித்தவர் கைது!

பாடசாலை மாணவிகளுக்கு பல சந்தர்ப்பங்களில் ஆபாச காணொளிகளை காண்பித்தார் எனக் கூறப்படும் நபர் நேற்று (20) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை செல்லும் 11-14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு சந்தேக நபர் ஆபாச காணொளிகளை காண்பித்துள்ளார் என நானுஓயா பகுதியில் உள்ள மாணவிகள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

56 வயது சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை (21) இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்த 06 மாணவிகள் தடயவியல் மருத்துவ அறிக்கையைப் பெறுவதற்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் பரிசோதனைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸ் நிலையத்தில் பெண்கள் சிறுவர்கள் பிரிவினர் மேற் கொண்டுவருகின்றனர்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ட்ரம்புடன் விவாதிக்க விரும்பவில்லை: திருத்தந்தை பதில்!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தான் விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை என கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை Pope Leo தெரிவித்தார். மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் தொடர்பான திருத்தந்தை லியோவின் கருத்துக்களை...

ஈரான் துறைமுகங்கள் முற்றுகை: ட்ரம்பின் திட்டத்துக்கு பிரிட்டன் எதிர்ப்பு!

0
ஹார்முஸ் நீரிணை பகுதியில் உள்ள ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிடும் அமெரிக்காவின் திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்காக ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும்...

நாகரிகம் அழியும் என்ற எனது கருத்தே ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்தது”

0
"நாகரிகம் அழியும்" என்ற எனது கருத்துதான் ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்தது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். புளோரிடாவிலிருந்து மேரிலாந்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாகரிகம்...