Home Blog Page 106

நாமல் தலைமையிலான மொட்டு கட்சி குழு இந்தியா பயணம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தலைமையிலான, அக்கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று இந்தியாவின் குடியரசு தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஒடிசாவிற்கு விஜயம் மேற்கொள்கின்றது.

ஜனவரி 26 ஆம் நாள் நடைபெறவுள்ள இந்திய குடியரசு தின நிகழ்வில் பங்கேற்பதற்கு, இந்திய அரசாங்கம், இலங்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அழைப்பை ஏற்று, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, இந்திக அனுருத்த, சஞ்சீவ எதிரிமன்ன , சம்பத் அதுகோரள மற்றும் பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மிலிந்த ராஜபக்ச உள்ளிட்டோரே இந்தியா செல்லவுள்ளனர்.

இந்த பயணத்தின் போது, உலகின் முன்னணி பேரிடர் முகாமைத்துவ நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒடிசா பேரிடர் முகாமைத்துவ மையத்திற்கும், இந்தக் குழு கண்காணிப்பு பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

அசோக மன்னர் காலத்தைச் சேர்ந்த பௌத்த தொல்பொருள்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்திற்கு முன்னதாக, இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவை, அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பொதுஜன பெரமுன குழுவினர், சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

வெற்றி வாகை சூடுமா இலங்கை அணி?

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, முதலாவது ஒருநாள் போட்டியை இன்று எதிர்கொள்கின்றது.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் போட்டி ஆரம்பமாகும்.

இப்போட்டியில் இலங்கை வெற்றிபெறும் என இலங்கை அணி இரசிகர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 2ஆவது ஒருநாள் போட்டி ஜனவரி 24 ஆம் திகதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜனவரி 27 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.

5 புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம்

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கட்சிகளை பதிவு செய்து கொள்வதற்கான சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை ஆராய்ந்து, 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 7(4)(b) இன் கீழ், அங்கீகரிக்கப்பட்ட 5 அரசியல் கட்சிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல் அரங்கம், சமத்துவ கட்சி, புரட்சிகர மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கே புதிதாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து,  இலங்கையில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை, 85 ஆக அதிகரித்துள்ளது.

ஊர்​வசி​யின் சகோ​தரர் நடிகர் கமல் ராய் காலமானார்

நடிகைகள் ஊர்​வசி, கல்​ப​னா, கலாரஞ்​சனி ஆகியோரின் சகோ​தரரும் நடிகருமான கமல் ராய் (64) உடல் நலக்குறைவால் சென்​னை​யில் கால​மா​னார். ‘புதுசா படிக்கிறேன் பாட்​டு’ என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் கமல் ராய்.

தொடர்ந்​து, மலை​யாளத்​தில் வெளி​யான சயுஜ்​யம், அந்​தப்​புரம், மஞ்​சு, கிங்​கினி, கல்யாண சவு​கந்​தி​கம், வச்​சலம், ஷோபனம், தி கிங் மேக்கர், லீடர் உள்பட பல படங்​களில் அவர் சிறந்த நடிப்பை வெளிப்​படுத்​தி​யுள்ளார்.

மலை​யாள சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்து வந்​தார். சென்​னை​யில் வசித்து வந்த அவர், உடல் நலக்​குறை​வால் செவ்​வாய்க்​கிழமை கால​மா​னார். அவருடைய இறு​திச் சடங்கு சென்​னை​யில் நடை​பெறுகிறது. அவர் மறைவுக்கு திரைத்​துறை​யினர் இரங்​கல் தெரி​வித்​து உள்​ளனர்​.

ஈரான் அழிக்கப்படும்: ட்ரம்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி!

எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த ஈரான் முயன்றால், அந்த நாட்டை உலக வரைபடத்தில் இருந்தே அமெரிக்கா அழித்துவிடும்’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளாா்.

” ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து எனது ஆலோசகா்களுக்கு மிகத் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்.

எனக்கு ஏதாவது நோ்ந்தால், ஈரான் என்ற ஒரு நாடு இந்த பூமியில் இருந்ததற்கான அடையாளம் இல்லாதபடி ஒட்டுமொத்தமாகத் துடைத்தெறியப்படும்’ என்றாா்.

டிரம்பின் இந்தக் கருத்துக்கு ஈரான் ஆயுதப் படைகளின் செய்தித் தொடா்பாளா் ஜெனரல் அபுல் பாஸல் ஷெகாா்ச்சி அளித்த பதிலில்,

” எங்கள் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக அமெரிக்கா ஏதேனும் அத்துமீறலில் ஈடுபட்டால், அந்த கையை நாங்கள் வெட்டுவது மட்டுமல்லாமல், அமெரிக்காவின் உலகத்தையே தீக்கிரையாக்குவோம்’ என்று எச்சரித்துள்ளாா்.

ஈரானில் தற்போதைய மதசாா்பு ஆட்சிக்கு எதிராக நடந்து வரும் உள்நாட்டுப் போராட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவதால், இருநாட்டுக்கிடையே பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிவுல் ஓயாத் திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம்! – ரவிகரன் எம்.பி. திட்டவட்டம்

தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் வடிவமான கிவுல் ஓயா திட்டத்தைச் செயற்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நாளை 23ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

அந்தக் கலந்துரையாடலில் இந்தத் திட்டத்துக்கு எதிராகத் தம்மால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் கிவுல் ஓயா நீர்ப்பாசனக் கட்டுமானத் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் நாளை கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், அந்தக் கலந்துரையாடலில் அந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்குமாறும் அமைச்சர் கே.டீ.லால்காந்த இதன்போது தெரிவித்தார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேற்று கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவிருக்கின்ற கிவுல் ஓயா நீர்த்தேக்கக் கட்டுமானத் திட்டத்துக்கு 2.5பில்லியன் ரூபா நிதி இந்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் இந்தக் கிவுல் ஓயாத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

கிவுல் ஓயா திட்டத்தைச் செயற்படுத்தினால் வவுனியா வடக்கு பிரதேசத்திலுள்ள பூர்வீகத் தமிழ் மக்களின் பல சிறிய நீர்பாசனக்குளங்களும், அவற்றின் கீழான வயல் நிலங்களும், பழந்தமிழ் கிராமங்களும் பறிபோகும் அபாயம் ஏற்படும் என்பதைக் கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் அமைச்சர் லால்காந்தவின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன்.

குறிப்பாக இராமன்குளம், கொட்டோடைக்குளம், ஒயாமடுக்குளம், வெள்ளான்குளம், பெரியகட்டுக்குளம், பனிக்கல்மடுக்குளம், சன்னமுற்றமடுக்குளம், கம்மாஞ்சிக்குளம், குறிஞ்சாக்குளம், புலிக்குட்டிக்குளம், திரிவைச்சகுளம் முதலான சிறிய நீர்ப்பாசனக்குளங்களும், வெடிவைச்சகல்லு குளத்தின் கீழ் வரும் வயல்காணிகள் பகுதியளவிலும், நாவலர்பாம், கல்லாற்றுக்குளம், ஈச்சன்குளம், கூழாங்குளம் வயற்காணிகளும் வவுனியா வடக்கிலுள்ள பழந்தமிழ் கிராமங்களான காட்டுப்பூவரசங்குளம் கிராமம், காஞ்சூரமோட்டை கிராமம், மருதோடைக் கிராமத்தின் ஒருபகுதி உள்ளிட்ட பகுதிகள் குறித்த நீர்ப்பாசன அணைக்கட்டின் நீரேந்துப்பகுதிகளாக மாறும் அபாயம் ஏற்படும் என்பதை இதன்போது அமைச்சருக்குத் தெரியப்படுத்தினேன்.

இவ்வாறு தமிழ் மக்களுடைய பூர்வீக நிலங்களும், நீர்ப்பாசனக்குளங்களும் அபகரிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினேன்.

இதன்போது அமைச்சர் கே.டீ.லால்காந்த பதிலளிக்கையில், எதிர்வரும் 23ஆம் திகதி (நாளை) நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், அதன்போது இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடலாம் எனவும் தெரிவித்தார்.

எனவே எதிர்வரும் 23ஆம் திகதி (நாளை) நடைபெறவுள்ள கூட்டத்திலும் கலந்துகொண்டு, கிவுல் ஓயாத் திட்டத்தால் தமிழர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பில் சுட்டிக்காட்டுவதுடன், இந்தத் திட்டத்துக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிப்பேன்.” – என்றார்.

நாசாவில் இருந்து ஓய்வுபெற்றார் சுனிதா வில்லியம்ஸ்!

இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (60), நாசாவில் இருந்து ஓய்வுபெற்றதாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது.

நாசாவில் 27 ஆண்டுகால பணிக் காலத்தில் 608 நாள்கள் விண்வெளியில் தங்கி சுனிதா வில்லியம்ஸ் சாதனை படைத்துள்ளாா்.

அவா் கடந்த ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி முதல் முதல் ஓய்வுபெற்றதாக நாசா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள யூக்லிட் நகரில் 1965-ஆம் ஆண்டு செப்டம்பா் 19-ஆம் திகதி சுனிதா வில்லயம்ஸ் பிறந்தாா்.

அவா் தந்தை தீபக் பாண்டியா குஜராத் மாநிலம் மெஹ்சனா மாவட்டத்தில் உள்ள ஜூலாசன் பகுதியைச் சோ்ந்தவா். தாய் உா்ஸுலின் போனி பாண்டியா ஐரோப்பிய நாடானண ஸ்லோவேனியாவைச் சோ்ந்தவா்.

சுனிதா வில்லியம்ஸின் கணவா் மைக்கேல்.ஜே.வில்லியம்ஸ் அமெரிக்காவைச் சோ்ந்தவா்.

விண்வெளி ‘நாயகி’:1998-இல் சுனிதா வில்லியம்ஸை விண்வெளி வீராங்கனையாக நாசா தோ்ந்தெடுத்து பயிற்சி வழங்கத் தொடங்கியது.

2006, டிசம்பா் 9- ஆம் திகதி முதல்முறையாக அமெரிக்க விண்கலமான டிஸ்கவரியில் எஸ்டிஎஸ்-116 விண்வெளி திட்டத்தில் தனது விண்வெளி பயணத்தை தொடங்கினாா்.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட அவா் 195 நாள்களுக்குப் பின் எஸ்டிஎஸ்-117 விண்வெளி திட்டக் குழுவுடன் அட்லாண்டிஸ் விண்கலத்தில் 2007, ஜூன் 22-ஆம் திகதி அவா் பூமிக்கு திரும்பினாா்.

2012-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் திகதிகஜகஸ்தான் நாட்டில் உள்ள பைக்கானூா் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்வெளிக்கு இரண்டாவது முறையாக பயணித்த அவா், 127 நாள்கள் விண்வெளியில் தங்கினாா்.

2024, ஜூன் மாதம் அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டாா்லைனா் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோா் இருவரும் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றனா்.

8 நாள்களில் ஆய்வை மேற்கொண்டு அவா்கள் பூமிக்கு திரும்புவாா்கள் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் ஸ்டாா்லைனா் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 286 நாள்கள் விண்வெளியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருவரும் 2025, மாா்ச் மாதம் பூமிக்கு திரும்பினா்.

ஒட்டுமொத்தமாக மூன்று விண்வெளி பயணங்களையும் சோ்த்து அவா் விண்வெளியில் 62 மணி நேரம் 6 நிமிஷங்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ளாா். இது உலகளவில் விண்வெளி வீராங்கனை ஒருவா் விண்வெளியில் மேற்கொண்ட அதிகபட்ச நடைபயணமாகும்.

மரக்கறி விலைப்பட்டியல் (22.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

பழி தீர்த்தது இந்தியா: முதலாவது டி-20 போட்டியில் வெற்றி!

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 48 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி தரப்பில் அபிஷேக் சர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அதிரடியாக துடுப்பெடுத்தாடினர்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

முன்னதாக இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. இதில் 2-1 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி வென்றது.

இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தற்போது பலப்பரீட்சை மேற்கொண்டுள்ளன.

இந்த தொடரின் முதல் போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 238 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா 35 பந்துகளில் 84 ஓட்டங்கள் விளாசினார். ரிங்கு சிங் 44, சூர்யகுமார் யாதவ் 32 மற்றும் ஹர்திக் பாண்டியா 25 ஓட்டங்களைப் பெற்றனர்.

239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து அணி விரட்டியது. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 48 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

காணி உரிமையே மலையக மக்களின் தலையெழுத்தை மாற்றக்கூடிய ஆயுதம்!

“மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும். இதற்குரிய நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் (21) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ பெருந்தோட்ட நிறுவனங்களை நம்ப வேண்டாம் என நான் கூறினேன். அவர்களின் சூழ்ச்சி என்னவென்பது எமக்கு தெரியும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு , தொழிலாளர்கள் பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாள் சம்பளத்துக்கு 20 கிலோ பறிக்க வேண்டிய நிலையில் சில இடங்களில் அது 26 கிலோவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அரசாங்கத்தின் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தேன். மாறாக அச்சத்தால் அல்ல.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 2 ஆயிரத்து மேல் அடிப்படை சம்பளம் வேண்டும் என கூறிய தேசிய மக்கள் சக்தியினர், ஆட்சிக்கு வந்த பின்னர் மௌனித்துவிட்டனர்.

அதேவேளை, காணி உரிமை என்பதும், வீட்டு உரிமை என்பதும் வெவ்வேறான விடயங்களாகும். எமது மக்களுக்கு காணி உரிமையை வழங்குங்கள். அவ்வாறு வழங்கினால் சமூகத்தின் தலையெழுத்தையே மாற்ற முடியும்.” – என்றார் ஜீவன் தொண்டமான்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ட்ரம்புடன் விவாதிக்க விரும்பவில்லை: திருத்தந்தை பதில்!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தான் விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை என கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை Pope Leo தெரிவித்தார். மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் தொடர்பான திருத்தந்தை லியோவின் கருத்துக்களை...

ஈரான் துறைமுகங்கள் முற்றுகை: ட்ரம்பின் திட்டத்துக்கு பிரிட்டன் எதிர்ப்பு!

0
ஹார்முஸ் நீரிணை பகுதியில் உள்ள ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிடும் அமெரிக்காவின் திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்காக ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும்...

நாகரிகம் அழியும் என்ற எனது கருத்தே ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்தது”

0
"நாகரிகம் அழியும்" என்ற எனது கருத்துதான் ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்தது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். புளோரிடாவிலிருந்து மேரிலாந்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாகரிகம்...