Home Blog Page 110

மூவர் சுட்டுக்கொலை: ஆஸ்திரேலியாவில் பயங்கரம்

ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லேக் கார்ஜெலிகோ Lake Cargelligo நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

துப்பாக்கிதாரி தலைமறைவாகியுள்ள நிலையில் தேடுதல் வேட்டை இடம்பெறுகின்றது.

ஆஸ்திரேலிய நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 4.20 மணியளவில், வாகனமொன்றின்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இது தொடர்பில் அறிந்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்தனர். இரு பெண்களும், ஆணொருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் Lake Cargelligoபகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

இச்சம்பவத்தையடுத்து நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

நகரம் என்பது சிட்னியில் இருந்து 600 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அங்கு ஆயிரத்து 169 பேர் வாழ்கின்றனர்.
துப்பாக்கிதாரி இன்னும் அடையாளம் காணப்படவில்லை. விசாரணை வேட்டை தொடர்கின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை கோரினார் பிரதமர்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தயார்நிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவத்திற்கான ஆணையாளர் ஹட்ஜா லாபிப்புடன் (Hadja Lahbib) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பேச்சு நடத்தியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, சர்வதேச அமைப்புகளின் பிரதானிகளுடனும் பேச்சு நடத்திவருகின்றார்.
இதன்ஓர் அங்கமாகவே மேற்படி சந்திப்பு நடைபெற்றது.

இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ள பதிவு வருமாறு,

” ஹட்ஜா லாபிப்பை ஜனவரி 21ஆம் திகதி டாவோஸில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினேன்.

இச்சந்திப்பின்போது, ‘திட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் இலங்கைக்கு வழங்கிய ஆதரவுகளுக்காக எனது நன்றியைத் தெரிவித்தேன்.

இலங்கையின் அனர்த்தத் தயார்நிலை மற்றும் மீட்சிச் செயற்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ச்சியான ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொண்டேன்.

நுவரெலியாவில் கடும் குளிர் காலநிலை!

நுவரெலியாவில் ஆகக் குறைந்த வெப்பநிலையான 3.5 பாகை செல்சியஸ் மற்றும் பூமியின் வெப்பம் தரைமட்டத்தில் மறை (-1.2) ஆகவும் இன்று 22.01.2026 பதிவாகியுளளதாக நுவரெலியா காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே நுவரெலியாவின் வெப்பநிலை சடுதியாக குறைவடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.கடும் குளிருடனான காலநிலையே நிலவுகின்றது.

நுவரெலியாவில் காலையில் சுமார் 7.30 மணிவரை கடுமையான குளிருடனான காலநிலை நிலவுகின்றது.

இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழிலுக்கு செல்கின்றவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

எனினும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த காலநிலையை பெரிதும் விரும்புகின்றார்கள்.

டிசம்பர் ஜனவரி மாதங்களில் இந்த காலநிலை இடை இடையே நிலவுகின்றது.

நுவரெலியாவின் காலநிலை 3.5 பாதை செல்சியஸ் என்பது பூமியில் இருந்து 4 நான்கு அடிக்கு மேல் நிலவுகின்ற வெப்பநிலையையே குறிப்பிடப்படுகின்றது.ஆனால் தரைமட்டத்தின் வெப்பநிலையானது மறை (-1.2) ஆக இருக்கின்றது.

இதன் காரணமாகவே நுவரெலியாவின் பல பகுதிகளிலும் பூம்பணி நிலவுகின்றது.பொதுவாகவே காலநிலை அவதான நிலையம் இந்த தறை மட்டத்திலான வெப்பநிலையை செய்திகளின் ஊடாக வெளியிடுவது என்பது மிகவும் குறைவாகவே இருக்கின்றது.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

கிரீன்லாந்தை கைப்பற்ற இராணுவத்தை களமிறக்கமாட்டோம்: ட்ரம்ப் உறுதி!

கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ள எவ்வித ராணுவ பலத்தையும் பயன்படுத்தப் போவதில்லை என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் உரையாற்றுகையிலேயே ட்ரம்ப் இவ்வாறு கூறினார்.

“ அமெரிக்கப் பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் சரியான திசையில் பயணிக்கவில்லை.

கிரீன்லாந்தை நிர்வகிப்பதற்கும், அதனை பாதுகாப்பதற்கும் அமெரிக்காவால் மட்டுமே முடியும். உலகப் பாதுகாப்பிற்காக எங்களுக்கு கிரீன்லாந்து என்ற அந்தப் பனிப்பாறைத் தீவு தேவைப்படுகிறது.” – எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

நீங்கள் அதனை தர சம்மதித்தால் அதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். மறுத்தால் அதனை நாங்கள் நினைவில் கொள்வோம். இந்த விவகாரத்தில் நேட்டோ நாடுகள் நியாயமற்ற வகையில் நடந்துகொள்கின்றன.

டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தை வாங்குவது குறித்து உடனடிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

இரண்டாம் உலகப் போரின்போது ஆர்க்டிக் தீவுகளுக்கு அமெரிக்கா அளித்த பாதுகாப்பை மறந்துவிட்டு, டென்மார்க் நன்றியுணர்வின்றி நடந்து கொள்கிறது.

உண்மையில் இந்த மிகப்பெரிய பாதுகாப்பற்ற தீவு வட அமெரிக்காவின் ஒரு பகுதியாகும். அது எங்கள் பிராந்தியம்.

அங்குள்ள கனிம வளங்களை வெட்டியெடுப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான அடி ஆழப் பனியைத் தோண்ட வேண்டியுள்ளது.

ஆனால் அந்த வளங்களுக்காக மட்டும் நாங்கள் அதைக் கேட்கவில்லை; தேசிய பாதுகாப்பிற்காக அது தேவைப்படுகிறது.
கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவ பலத்தை பிரயோகிக்கும் எண்ணமில்லை. டென்மார்க்கிடம் பேச்சுவார்த்தை மூலமாகவே சுமூக முடிவை எட்ட விரும்புகிறோம்.” எனவும் ட்ரம்ப் மேலும் கூறினார்.

நாமல் தலைமையிலான மொட்டு கட்சி குழு இந்தியா பயணம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தலைமையிலான, அக்கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று இந்தியாவின் குடியரசு தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஒடிசாவிற்கு விஜயம் மேற்கொள்கின்றது.

ஜனவரி 26 ஆம் நாள் நடைபெறவுள்ள இந்திய குடியரசு தின நிகழ்வில் பங்கேற்பதற்கு, இந்திய அரசாங்கம், இலங்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அழைப்பை ஏற்று, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, இந்திக அனுருத்த, சஞ்சீவ எதிரிமன்ன , சம்பத் அதுகோரள மற்றும் பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மிலிந்த ராஜபக்ச உள்ளிட்டோரே இந்தியா செல்லவுள்ளனர்.

இந்த பயணத்தின் போது, உலகின் முன்னணி பேரிடர் முகாமைத்துவ நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒடிசா பேரிடர் முகாமைத்துவ மையத்திற்கும், இந்தக் குழு கண்காணிப்பு பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

அசோக மன்னர் காலத்தைச் சேர்ந்த பௌத்த தொல்பொருள்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்திற்கு முன்னதாக, இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவை, அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பொதுஜன பெரமுன குழுவினர், சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

வெற்றி வாகை சூடுமா இலங்கை அணி?

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, முதலாவது ஒருநாள் போட்டியை இன்று எதிர்கொள்கின்றது.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் போட்டி ஆரம்பமாகும்.

இப்போட்டியில் இலங்கை வெற்றிபெறும் என இலங்கை அணி இரசிகர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 2ஆவது ஒருநாள் போட்டி ஜனவரி 24 ஆம் திகதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜனவரி 27 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.

5 புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம்

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கட்சிகளை பதிவு செய்து கொள்வதற்கான சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை ஆராய்ந்து, 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 7(4)(b) இன் கீழ், அங்கீகரிக்கப்பட்ட 5 அரசியல் கட்சிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல் அரங்கம், சமத்துவ கட்சி, புரட்சிகர மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கே புதிதாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து,  இலங்கையில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை, 85 ஆக அதிகரித்துள்ளது.

ஊர்​வசி​யின் சகோ​தரர் நடிகர் கமல் ராய் காலமானார்

நடிகைகள் ஊர்​வசி, கல்​ப​னா, கலாரஞ்​சனி ஆகியோரின் சகோ​தரரும் நடிகருமான கமல் ராய் (64) உடல் நலக்குறைவால் சென்​னை​யில் கால​மா​னார். ‘புதுசா படிக்கிறேன் பாட்​டு’ என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் கமல் ராய்.

தொடர்ந்​து, மலை​யாளத்​தில் வெளி​யான சயுஜ்​யம், அந்​தப்​புரம், மஞ்​சு, கிங்​கினி, கல்யாண சவு​கந்​தி​கம், வச்​சலம், ஷோபனம், தி கிங் மேக்கர், லீடர் உள்பட பல படங்​களில் அவர் சிறந்த நடிப்பை வெளிப்​படுத்​தி​யுள்ளார்.

மலை​யாள சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்து வந்​தார். சென்​னை​யில் வசித்து வந்த அவர், உடல் நலக்​குறை​வால் செவ்​வாய்க்​கிழமை கால​மா​னார். அவருடைய இறு​திச் சடங்கு சென்​னை​யில் நடை​பெறுகிறது. அவர் மறைவுக்கு திரைத்​துறை​யினர் இரங்​கல் தெரி​வித்​து உள்​ளனர்​.

ஈரான் அழிக்கப்படும்: ட்ரம்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி!

எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த ஈரான் முயன்றால், அந்த நாட்டை உலக வரைபடத்தில் இருந்தே அமெரிக்கா அழித்துவிடும்’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளாா்.

” ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து எனது ஆலோசகா்களுக்கு மிகத் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்.

எனக்கு ஏதாவது நோ்ந்தால், ஈரான் என்ற ஒரு நாடு இந்த பூமியில் இருந்ததற்கான அடையாளம் இல்லாதபடி ஒட்டுமொத்தமாகத் துடைத்தெறியப்படும்’ என்றாா்.

டிரம்பின் இந்தக் கருத்துக்கு ஈரான் ஆயுதப் படைகளின் செய்தித் தொடா்பாளா் ஜெனரல் அபுல் பாஸல் ஷெகாா்ச்சி அளித்த பதிலில்,

” எங்கள் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக அமெரிக்கா ஏதேனும் அத்துமீறலில் ஈடுபட்டால், அந்த கையை நாங்கள் வெட்டுவது மட்டுமல்லாமல், அமெரிக்காவின் உலகத்தையே தீக்கிரையாக்குவோம்’ என்று எச்சரித்துள்ளாா்.

ஈரானில் தற்போதைய மதசாா்பு ஆட்சிக்கு எதிராக நடந்து வரும் உள்நாட்டுப் போராட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவதால், இருநாட்டுக்கிடையே பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிவுல் ஓயாத் திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம்! – ரவிகரன் எம்.பி. திட்டவட்டம்

தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் வடிவமான கிவுல் ஓயா திட்டத்தைச் செயற்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நாளை 23ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

அந்தக் கலந்துரையாடலில் இந்தத் திட்டத்துக்கு எதிராகத் தம்மால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் கிவுல் ஓயா நீர்ப்பாசனக் கட்டுமானத் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் நாளை கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், அந்தக் கலந்துரையாடலில் அந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்குமாறும் அமைச்சர் கே.டீ.லால்காந்த இதன்போது தெரிவித்தார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேற்று கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவிருக்கின்ற கிவுல் ஓயா நீர்த்தேக்கக் கட்டுமானத் திட்டத்துக்கு 2.5பில்லியன் ரூபா நிதி இந்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் இந்தக் கிவுல் ஓயாத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

கிவுல் ஓயா திட்டத்தைச் செயற்படுத்தினால் வவுனியா வடக்கு பிரதேசத்திலுள்ள பூர்வீகத் தமிழ் மக்களின் பல சிறிய நீர்பாசனக்குளங்களும், அவற்றின் கீழான வயல் நிலங்களும், பழந்தமிழ் கிராமங்களும் பறிபோகும் அபாயம் ஏற்படும் என்பதைக் கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் அமைச்சர் லால்காந்தவின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன்.

குறிப்பாக இராமன்குளம், கொட்டோடைக்குளம், ஒயாமடுக்குளம், வெள்ளான்குளம், பெரியகட்டுக்குளம், பனிக்கல்மடுக்குளம், சன்னமுற்றமடுக்குளம், கம்மாஞ்சிக்குளம், குறிஞ்சாக்குளம், புலிக்குட்டிக்குளம், திரிவைச்சகுளம் முதலான சிறிய நீர்ப்பாசனக்குளங்களும், வெடிவைச்சகல்லு குளத்தின் கீழ் வரும் வயல்காணிகள் பகுதியளவிலும், நாவலர்பாம், கல்லாற்றுக்குளம், ஈச்சன்குளம், கூழாங்குளம் வயற்காணிகளும் வவுனியா வடக்கிலுள்ள பழந்தமிழ் கிராமங்களான காட்டுப்பூவரசங்குளம் கிராமம், காஞ்சூரமோட்டை கிராமம், மருதோடைக் கிராமத்தின் ஒருபகுதி உள்ளிட்ட பகுதிகள் குறித்த நீர்ப்பாசன அணைக்கட்டின் நீரேந்துப்பகுதிகளாக மாறும் அபாயம் ஏற்படும் என்பதை இதன்போது அமைச்சருக்குத் தெரியப்படுத்தினேன்.

இவ்வாறு தமிழ் மக்களுடைய பூர்வீக நிலங்களும், நீர்ப்பாசனக்குளங்களும் அபகரிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினேன்.

இதன்போது அமைச்சர் கே.டீ.லால்காந்த பதிலளிக்கையில், எதிர்வரும் 23ஆம் திகதி (நாளை) நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், அதன்போது இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடலாம் எனவும் தெரிவித்தார்.

எனவே எதிர்வரும் 23ஆம் திகதி (நாளை) நடைபெறவுள்ள கூட்டத்திலும் கலந்துகொண்டு, கிவுல் ஓயாத் திட்டத்தால் தமிழர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பில் சுட்டிக்காட்டுவதுடன், இந்தத் திட்டத்துக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிப்பேன்.” – என்றார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

மவுண்ட்வேர்ணன் தமிழ் வித்தியாலய பழைய மாணவர்களின் கிரிக்கெட் திருவிழா!

0
கொட்டகலை /மவுண்ட்வேர்ணன் தமிழ் வித்தியாலயத்தின் 1999ஆம் ஆண்டு பழைய மாணவர் தொகுதியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர்களுக்கிடையிலான மாபெரும் சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியும், ஒன்று கூடல் நிகழ்வும் கடந்த 2026.04.16 அன்று பாடசாலை...

சுயாதீன விசாரணைக்கு இடமளித்தே அமைச்சர் ராஜினாமா!

0
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இராஜினாமா கடிதங்களை கையளித்து தமது பதவிகளில் இருந்து...

அனல் பறக்கும் நிலக்கரி கொள்வனவு: வலுசக்தி அமைச்சர் ராஜினாமா!

0
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் பதவி விலகியுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. நிலக்கரி இறக்குமதி தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும்...