Home Blog Page 164

புசல்லாவையில் சில வர்த்தக நிலையங்கள் பாதிப்பு!

புசல்லாவை நகரில் சில வர்த்த நிலையங்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. இதனால் அங்கிருந்தவர்கள் இன்று அகற்றப்பட்டு, வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

குறித்த வர்த்த நிலையங்கள் அமைந்துள்ள பகுதிக்குள் உள்நுழைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் புசல்லாவை நகரில் பழைய பஸ் தரிப்பிடத்துக்கு சற்று அருகாமையிலேயே குறித்த வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ளன.வர்த்தக நிலையங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது, தாழியங்கியதுபோலவும் காட்சியளிக்கின்றன.

“அப்பகுதியில் என்ன நடந்துள்ளது என்பது தெரியவில்லை, தண்ணீர் வருவதாகவும் கூறுகின்றனர். எனவே, உரிய ஆய்வின் பின்னரே என்னவென்பது தெரியவரும்;.” என்று புசல்லாவை நகர வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

உரிய ஆய்வுகளின் பின்னரே மேற்படி வர்த்தக நிலையங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழக முதல்வர் – பிரதி அமைச்சர் பிரதீப் சந்திப்பு!

இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று சென்னையில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது பேரிடர் காலத்தில் இலங்கைக்கு துரிதமாக உதவிய இந்திய அரசாங்கத்துக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குமான அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்த தமிழக அரசுக்கும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் சார்பில் பிரதி அமைச்சர் பிரதீப் தனது நன்றியை தமிழக முதல்வரிடம் தெரிவித்துக் கொண்டார்.

இதன் போது மலையக மாணவர்களுக்கான தமிழகத்தில் உயர் கல்வி வாய்ப்புகள் தொடர்பில் பிரதானமாக கலந்துரையாடப்பட்டது.

சபரிமலை ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தியமை தொடர்பில் தமிழக முதலமைச்சர் இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு உதவிகளை வழங்கவும் கலை, கலாச்சார கல்வி அபிவிருத்திக்கு தொடர்ந்து தமிழக அரசு உதவி மற்றும் ஒத்துழைப்புகளை நல்குவதாகவும் இதன் போது தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் சென்னையில் உள்ள இலங்கைக்கான உதவி உயரஸ்தானிகர் கலாநிதி கணேசன் கேதீஸ்வரனும் கலந்து கொண்டார்.

இலங்கையில் கடந்த 27ஆம் திகதி முதல் இரு நாட்கள் வீசிய திட்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் மலையகம் உட்பட 17 மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகிய நிலையில் குறிப்பாக இந்திய வம்சாவளி மலையக மக்கள் வாழும் பகுதிகளில் பாரிய அளவில் மண் சரிவினால் பாதிக்கப்பட்டன.

பேரிடரில் இருந்து இலங்கையை மீட்க இந்திய மத்திய அரசாங்கமும் தமிழக அரசும் எமக்கு உதவிக்கரம் நீட்டின.

காலம் உணர்ந்து செயல்பட்ட இந்திய அரசுக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாகவும் மலையக மக்களுக்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி மற்றும் பொருளாதார செயற்பாடுகள் சம்பந்தமான விளக்கத்தினை வழங்கவும் பேரிடர் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களின் அடுத்த கட்ட நகர்வுக்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் பற்றி தெளிவுபடுத்தவும் அதே நேரம் தமிழக அரசின் குறுகிய கால நீண்ட கால ஒத்துழைப்பு சம்பந்தமாக கலந்துரையாடவும் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று சென்னையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

நீண்ட நேர கலந்துரையாடலின் போது இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் மலையக மக்களின் வாழ்வு அவர்களின் எதிர்காலம் அதற்காக இலங்கை அரசாங்கம் எடுக்கும் திட்டங்கள் இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசுகளால் செயல்படுத்தக்கூடிய அபிவிருத்தி திட்டங்கள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீட்டுக்கு அங்கீகாரம்

பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான ரூ. 500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு இன்று (19) பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது.

இந்தக் குறைநிரப்பு மதிப்பீடை கௌரவ பிரதமர் நேற்று (18) பாராளுமன்றத்தில் சமர்பித்திருந்தார்.

அதற்கமைய, இன்று மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 6.10 மணி வரை இது தொடர்பான விவாதம் இடம்பெற்றதுடன், 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீடு வாக்கெடுப்பு இன்றி அங்கீகரிக்கப்பட்டது.

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் 02 பில்லியன் ரூபாவைத் தாண்டியது

 

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின் டிஜிட்டல் கட்டண தளமான GovPay ஆல் நடத்தப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 2025 ஆம் ஆண்டில் 2 பில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளது.

விரைவாக மாற்றியமைக்கும் திறன், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுதல் மற்றும் அரச நிறுவனங்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு ஆகியவற்றின் காரணமாக, GovPay 45 நாட்களில் அதன் வருமானத்தை 01 பில்லியன் ரூபாவில் இருந்து 2 பில்லியன் ரூபாவாக இரட்டிப்பாக்க முடிந்தது.

2025 பெப்ரவரி 07 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இன்றுவரை 70,178 க்கும் மேற்பட்ட GovPay டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் 221 அரச நிறுவனங்களில் 3,372 அரச சேவைகளுக்கான கட்டண வசதிகள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த விரைவான வளர்ச்சி, பொதுமக்களும் அரச நிறுவனங்களும் இந்த கட்டமைப்பின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மூலோபாய தலைமையின் கீழ், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA),LankaPay உடன் இணைந்து செயல்படுத்திய GovPay, இலங்கையின் தேசிய டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகளில் முக்கிய சேவை வழங்குநராக மாறியுள்ளது. இந்த டிஜிட்டல் தளம் அனைவருக்கும் பொதுவான, திறமையான மற்றும் வெளிப்படையான சேவையை வழங்குவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.

2025 ஏப்ரல் 10 ஆம் திகதி GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்துவதற்கான ஒன்லைன் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், இந்த கட்டமைப்பின் மூலம் 50,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து அபராதங்கள் செலுத்தப்பட்டுள்ளதுடன் அதன் ஊடாக 66 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இந்த சேவை தற்போது தெற்கு, கட்டுநாயக்க மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட மேற்கு, தெற்கு, வடக்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் முழுவதும் செயல்படுகிறது.

இது 2025 டிசம்பர் மாதத்தில் நாடு பூராகவும் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தபோதும், சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டதுடன், இலங்கை பொலிஸுடன் இணைந்து LankaPay இன் ஆதரவுடன்,2026 ஜனவரி மாதத்தில் நாடு பூராகவும் செயல்படுத்த இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) இணக்கம் தெரிவித்துள்ளது.

GovPay , பிரதேச செயலகங்கள், மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூரட்சி மன்றங்கள் ஊடாக அதன் பிரவேசத்தை விரிவுபடுத்தி பொது மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் அரசாங்க சேவைகளை அணுகுவதை குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்தியுள்ளது.

இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி வட மாகாணத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும், தென் மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் நிறுவப்பட்டுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டுக்குள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் டிஜிட்டல் மயமாக்கும் தேசிய இலக்கை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், இலங்கை பொலிஸ், தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம், மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை அணுசக்தி சபை போன்ற நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டில் GovPay க்கு அதிக பங்களிப்பு செய்த நிறுவனங்களில் அடங்குகின்றன. குறிப்பாக கல்வித் துறையில் இதற்கு நிலவுகின்ற அதிக வரவேற்பு, இளைய தலைமுறையினர் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் விருப்பத்தையும், இந்த டிஜிட்டல் தளத்தின் வியாபிப்பு மற்றும் நம்பகத்தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது.

வழக்கமான அரச சேவைகளுக்கு மேலதிகமாக, டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த நிவாரண முயற்சிகளுக்கும் GovPay ஆதரவு அளித்தது. 2025 நவம்பர் 30 ஆம் திகதி முதல், இது Rebuilding Sri Lanka அனர்த்த நிவாரண நிதியத்திற்கு டிஜிட்டல் நன்கொடைகளுக்கு வசதிகளை வழங்கியுள்ளதுடன், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் நன்கொடைகள் உட்பட 909 பரிவர்த்தனைகள் மூலம் சுமார் 14 மில்லியன் ரூபா நிதியை திரட்ட உதயுவியுள்ளது.

தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, மேலதிகமான நிறுவனங்கள் மற்றும் சேவைகளை உள்ளடக்கி, மேம்பட்ட வசதிகளுடன் கூடிய www.govpay.lk நவீனமயமாக்கும் பணியில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

முதல் ஆண்டில் 02 பில்லியன் ரூபா பெறுமதியுள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் 45 நாட்களில் 01 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியதன் மூலம், GovPay டிஜிட்டல் தளம், 2030 ஆம் ஆண்டுக்குள் 15 பில்லியன் அமெரிக்க டொலர் டிஜிட்டல் பொருளாதாரம் என்ற அரசாங்கத்தின் நோக்கத்தை யதார்த்தமாக்குவதற்கான ஒரு தனித்துவமான தொடக்கமாகக் காணலாம்.

 

காலத்தின் தேவைக்கேற்ப கட்டமைப்பில் மாற்றம் வேண்டும்: தேசிய சபை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்!

” காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாகும். இதை தவறான புரிதலுடன் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களை கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை.”

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஊடக அறிக்கையினூடாக இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது..

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகளை நிலை நாட்டுவதற்காக எமது முன்னோர்களின் தியாகங்களினால் கட்டமைக்கப்பட்ட ஸ்தாபனமாகும். இதன் பொதுச்செயலாளர் என்ற வகையில் என்னுடைய பொறுப்புகளில் இருந்து விலகுவது என்னுடைய நோக்கமல்ல.

காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாகும். இதை தவறான புரிதலுடன் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களை கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை. அந்த வகையில் ஸ்தாபனத்தை ஜனநாயக முறையில் மேலும் வலுப்படுத்துவதே எமது நோக்கம்.

இதன் அடிப்படையில் மூன்று மாதங்களுக்குள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை கூட்டப்பட்டு தேவையான மாற்றங்கள் குறித்து தீர்மானிக்கப்படும்.

மேலும், தற்போது கட்சியின் அங்கத்தவர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது. வெகு விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும். இதன்மூலம் கட்சியின் செயற்பாட்டு வேகத்தையும் மக்கள் சேவையின் தரத்தையும் அதிகரிப்பதே எமது நோக்கமாகும்.

“சமூகத்திற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் போது, ஸ்தாபனம் உறுதியுடன் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்.” என ஜீவன் தொண்டமான் அறிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உதவி தொடரும்!

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இந்திய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு இன்று (19) காலை புது டெல்லியில் நடைபெற்றது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) பாரம்பரிய மருத்துவம் குறித்த இரண்டாவது உலகளாவிய உச்சி மாநாட்டுடன் (The World Health Organization (WHO)’s Second Global Summit on Traditional Medicine) இணைந்து இந்த சந்திப்பு நடைபெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையேயான தற்போதைய ராஜதந்திர மற்றும் சுகாதார ஒத்துழைப்பு, அத்துடன் வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே இணக்கப்பாட்டினை மேலும் மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி அனுப்ரியா படேல், இந்தியாவின் அண்டை அண்டை நாடுகளின் பட்டியலின் முதன்மையாக இலங்கை உள்ளதாக தெரிவித்தார்.

டித்வா சூறாவளிக்குப் பிறகு நாட்டினை வலுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு இந்தியா இலங்கைக்கு ஆதரவளித்துள்ளது என்றும், எதிர்காலத்தில் உதவி தொடரும் என்று திருமதி படேல் தெரிவித்தார்.

இந்தியா-இலங்கை உறவுகள் வலுவானவை என்றும், சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு இலங்கை நன்றி தெரிவிப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.

நாட்டை பாதித்த பேரிடர் சூழ்நிலையின் போது இந்திய அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பை அமைச்சர் பாராட்டினார், மேலும் பேரிடர் சூழ்நிலைக்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான எதிர்கால திட்டத்திற்குத் தேவையான ஆதரவையும், நாட்டில் சுகாதார சேவையின் எதிர்காலப் பணிகளை வலுப்படுத்த தகவல் தொழில்நுட்பத் திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான ஆதரவையும் அமைச்சர் மேலும் கேட்டுக்கொண்டார்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) பாரம்பரிய மருத்துவம் குறித்த இரண்டாவது உலகளாவிய மாநாடு (17) அன்று தொடங்கி இன்று (19) நிறைவடைகிறது.

எடப்பாடி பழனிச்சாமி, சீமானுடன் தமிழ் தேசிய பேரவை சந்திப்பு

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை, தமிழ்த் தேசிய பேரவையின் அரசியல் குழுவினர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமியுடனான சந்திப்பு நேற்று அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

இரவு 10.15 மணியளவில் ஆரம்பமாகிய சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஏக்கிய ராஜ்ய அரசியலமைப்பு நிராகரிப்பு, தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை, அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படல் வேண்டும், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும் ஆகிய விடயங்கள் முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேசப்பட்ட விடயங்கள் குறித்தும், எடுத்துக் கூறப்பட்டதுடன், எழுத்து மூலமான கோரிக்கையும் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனும் கலந்து கொண்டிருந்தார்.

தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொ.ஐங்கரநேசன் , செ.கஜேந்திரன் , த.சுரேஸ் , க.சுகாஷ் , ந.காண்டீபன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானையும் தமிழ் தேசிய பேரவை அரசியல் குழுவினர் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

சீமானின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சேதமடைந்த மத, கலாசார மற்றும் தொல்பொருள் தளங்கள் விரைவாக புனரமைப்பு

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட நாட்டில் உள்ள மத, கலாசார மற்றும் தொல்பொருள் தளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனரமைப்பு பணிகள் குறித்த கலந்துரையாடல் நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தலைமையில் மூன்று நிகாயாக்களின் மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத, கலாசார மற்றும் தொல்பொருள் தளங்கள் அனர்த்தத்தினால் சேதமடைந்துள்ளதாகவும், அந்த இடங்களில் தேவையான புனரமைப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கி, அவற்றை முன்னர் இருந்த நிலைக்கு மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தெரிவித்தார்.

மரியாதைக்குரிய மகா சங்கத்தினர் மற்றும் மதத் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அந்த இடங்களின் தொன்மையை பாதுகாத்து, அனைத்து தொடர்புடைய தரப்பினரின் பங்கேற்புடன் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

புனரமைப்புப் பணிகளுக்குத் தேவையான மனித வளங்கள் மற்றும் நிதி தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அந்த தளங்கள் தொடர்பான தொழில்நுட்ப மதிப்பீடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தேவையான தொழில்நுட்ப அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர இங்கு தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளுக்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளையும், அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளையும் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.

மேலும், சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட நிதியத்திற்கு, தற்போது நன்கொடையாளர்களிடமிருந்து அதிகமான நிதி நன்கொடைகள் கிடைத்து வருவதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

நேற்று கூடிய சபை, இந்தப் புனரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடும் சர்வமதக் குழுவாகத் தொடர்ந்து செயல்படுவது குறித்தும் கவனம் செலுத்தியதுடன், அதன்படி, நிர்மாணங்களின் முன்னேற்றத்தை இந்தக் குழுவிடம் தொடர்ந்து முன்வைப்பது குறித்தும், வெளிப்படைத்தன்மையுடன் நிதியத்திற்கான, வெளிநாட்டு உதவிகள், வெளிநாட்டு அமைப்புகள் ,பௌத்த அமைப்புகள் மற்றும் மத அமைப்புகளின் உதவிகளைப் பெறும் பணியை குழுவிடம் ஒப்படைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுவரோவியப் பாதுகாவலர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களின் அறிவு தேவைப்படும் அனர்த்தத்தினால் கடுமையாக சேதமடைந்த மற்றும் சாதாரண நிர்மாணத்தின் கீழ் மீளமைக்க முடியாத 08 இடங்களை மத்திய கலாசார நிதியம் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவற்றுக்கு 500 மில்லியன் ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாட இன்த குழு மாதத்திற்கு ஒரு முறை கூடுவது என்றும் இதன்போது முடிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதிலும் அரசாங்கம் தலையிட்டதற்கு மதத் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும், இந்த விடயங்களை மிகச் சிறப்பாக நிர்வகித்ததற்காக அரசாங்கத்திற்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்தனர். மேலும், சேதமடைந்த மதத் தலங்களை மீண்டும் கட்டியெழுப்புவதில் அரசாங்கத்தின் உடனடி நடவடிக்கைக்கு அவர்கள் தங்கள் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

அஸ்கிரி மகா விகாரை தரப்பின் பதிவாளர் கலாநிதி வண, மெதகம தம்மானந்த நாயக்க தேரர்,அமரபுர சிறி சத்தம்மவங்ச தரப்பின் பதிவாளர் ராஜகீய பண்டித, வண, பலபிட்டியே சிறி சீவலி நாயக்க தேரர், இலங்கை ராமன்ஞ மகா நிகாயவின் பதிவாளர் வண, அத்தங்கனே சாசனரதன நாயக்க தேரர், அகில இலங்கை சாசனரக்ஷக சபையின் பிரதம பதிவாளர் பேராசிரியர் வண, முகுனுவெல அனுருத்த நாயக்க தேரர்,தேசிய பிக்கு முன்னணியின் தலைவரான வண, வகமுல்லே உதித தேரர் தலைமையிலான மூன்று நிகாயாக்களின் மகா சங்கத்தினர், ஸ்ரீமத் ஸ்வாமி அக்ஷரத்மானந்தா உட்பட இந்து மத குருக்கள், அருட்தந்தை அலெக் ரோய் சமந்த பெர்னாண்டோ உட்பட கத்தோலிக்க சபை மற்றும் தேசிய கிறிஸ்தவ பேரவையின் ஆயர்மார், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் மௌலவி உள்ளிட்ட முஸ்லிம் மதத் தலைவர்கள் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முகமது முனீர் மற்றும் புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வைத்தியரை பணி இடைநீக்கம் செய்தமை அநீதி!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன பணி இடைநீக்கம் செய்யப்பட்டது அநீதியான நடவடிக்கை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (19) கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மேலும் கூறியவை வருமாறு,

“புதிய அரசமைப்பு இயற்றப்படும்போது கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் அவசியம்.

ஏனெனில் மருந்து மாபியா உட்பட சுகாதார சேவையில் நிலவும் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தும் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கினார் என்பதற்காகவே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது. அநீதியான நடவடிக்கையாகும்.

தரம் குறைவான மருந்து மற்றும் சுகாதாரத்துறையில் நடக்கும் ஊழல், மோசடிகள் தொடர்பில் கருத்து வெளியிடும் சுதந்திரம் அவருக்கு இல்லையா?

தரம் குறைவான ஊசி பயன்பாட்டால் இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் வாழும் உரிமை பறிபோய் உள்ளது. இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்றார் எதிர்கட்சி தலைவர்.

இதற்கு பதிலளித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

“ இரு மரணங்கள் தொடர்பில் கவலை அடைகின்றோம். அது தொடர்பில் விசாரணை நடக்கின்றது. விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னரே மேலதிக தகவல்கள் தெரியவரும்.” – என்றார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

அமைதி பேச்சுக்கு ஈரான் நிபந்தனை விதிப்பு!

0
பொருளாதாரத் தடைகள் மற்றும் முற்றுகையை அமெரிக்கா விலக்கிக் கொண்டால் மட்டுமே, அமைதி பேச்சில் ஈரான் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவுக்கான ஈரானின் தூதுவர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமைதியான அரசியல் தீர்வு அல்லது போர்ச் சூழல்...

எல்ல நகரில் கஜமுத்துடன் இளைஞன் கைது!

0
எல்ல நகரில், 2 கோடி ரூபா மதிப்பில் விற்கத் தயாராக இருந்த “கஜமுத்து” (யானை முத்து) ஒன்றுடன் ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார் ஹப்புத்தலை விசேட அதிடிப்படைனருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் எல்ல...