Home Blog Page 165

சேதமடைந்த மத, கலாசார மற்றும் தொல்பொருள் தளங்கள் விரைவாக புனரமைப்பு

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட நாட்டில் உள்ள மத, கலாசார மற்றும் தொல்பொருள் தளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனரமைப்பு பணிகள் குறித்த கலந்துரையாடல் நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தலைமையில் மூன்று நிகாயாக்களின் மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத, கலாசார மற்றும் தொல்பொருள் தளங்கள் அனர்த்தத்தினால் சேதமடைந்துள்ளதாகவும், அந்த இடங்களில் தேவையான புனரமைப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கி, அவற்றை முன்னர் இருந்த நிலைக்கு மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தெரிவித்தார்.

மரியாதைக்குரிய மகா சங்கத்தினர் மற்றும் மதத் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அந்த இடங்களின் தொன்மையை பாதுகாத்து, அனைத்து தொடர்புடைய தரப்பினரின் பங்கேற்புடன் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

புனரமைப்புப் பணிகளுக்குத் தேவையான மனித வளங்கள் மற்றும் நிதி தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அந்த தளங்கள் தொடர்பான தொழில்நுட்ப மதிப்பீடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தேவையான தொழில்நுட்ப அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர இங்கு தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளுக்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளையும், அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளையும் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.

மேலும், சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட நிதியத்திற்கு, தற்போது நன்கொடையாளர்களிடமிருந்து அதிகமான நிதி நன்கொடைகள் கிடைத்து வருவதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

நேற்று கூடிய சபை, இந்தப் புனரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடும் சர்வமதக் குழுவாகத் தொடர்ந்து செயல்படுவது குறித்தும் கவனம் செலுத்தியதுடன், அதன்படி, நிர்மாணங்களின் முன்னேற்றத்தை இந்தக் குழுவிடம் தொடர்ந்து முன்வைப்பது குறித்தும், வெளிப்படைத்தன்மையுடன் நிதியத்திற்கான, வெளிநாட்டு உதவிகள், வெளிநாட்டு அமைப்புகள் ,பௌத்த அமைப்புகள் மற்றும் மத அமைப்புகளின் உதவிகளைப் பெறும் பணியை குழுவிடம் ஒப்படைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுவரோவியப் பாதுகாவலர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களின் அறிவு தேவைப்படும் அனர்த்தத்தினால் கடுமையாக சேதமடைந்த மற்றும் சாதாரண நிர்மாணத்தின் கீழ் மீளமைக்க முடியாத 08 இடங்களை மத்திய கலாசார நிதியம் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவற்றுக்கு 500 மில்லியன் ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாட இன்த குழு மாதத்திற்கு ஒரு முறை கூடுவது என்றும் இதன்போது முடிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதிலும் அரசாங்கம் தலையிட்டதற்கு மதத் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும், இந்த விடயங்களை மிகச் சிறப்பாக நிர்வகித்ததற்காக அரசாங்கத்திற்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்தனர். மேலும், சேதமடைந்த மதத் தலங்களை மீண்டும் கட்டியெழுப்புவதில் அரசாங்கத்தின் உடனடி நடவடிக்கைக்கு அவர்கள் தங்கள் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

அஸ்கிரி மகா விகாரை தரப்பின் பதிவாளர் கலாநிதி வண, மெதகம தம்மானந்த நாயக்க தேரர்,அமரபுர சிறி சத்தம்மவங்ச தரப்பின் பதிவாளர் ராஜகீய பண்டித, வண, பலபிட்டியே சிறி சீவலி நாயக்க தேரர், இலங்கை ராமன்ஞ மகா நிகாயவின் பதிவாளர் வண, அத்தங்கனே சாசனரதன நாயக்க தேரர், அகில இலங்கை சாசனரக்ஷக சபையின் பிரதம பதிவாளர் பேராசிரியர் வண, முகுனுவெல அனுருத்த நாயக்க தேரர்,தேசிய பிக்கு முன்னணியின் தலைவரான வண, வகமுல்லே உதித தேரர் தலைமையிலான மூன்று நிகாயாக்களின் மகா சங்கத்தினர், ஸ்ரீமத் ஸ்வாமி அக்ஷரத்மானந்தா உட்பட இந்து மத குருக்கள், அருட்தந்தை அலெக் ரோய் சமந்த பெர்னாண்டோ உட்பட கத்தோலிக்க சபை மற்றும் தேசிய கிறிஸ்தவ பேரவையின் ஆயர்மார், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் மௌலவி உள்ளிட்ட முஸ்லிம் மதத் தலைவர்கள் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முகமது முனீர் மற்றும் புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வைத்தியரை பணி இடைநீக்கம் செய்தமை அநீதி!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன பணி இடைநீக்கம் செய்யப்பட்டது அநீதியான நடவடிக்கை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (19) கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மேலும் கூறியவை வருமாறு,

“புதிய அரசமைப்பு இயற்றப்படும்போது கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் அவசியம்.

ஏனெனில் மருந்து மாபியா உட்பட சுகாதார சேவையில் நிலவும் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தும் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கினார் என்பதற்காகவே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது. அநீதியான நடவடிக்கையாகும்.

தரம் குறைவான மருந்து மற்றும் சுகாதாரத்துறையில் நடக்கும் ஊழல், மோசடிகள் தொடர்பில் கருத்து வெளியிடும் சுதந்திரம் அவருக்கு இல்லையா?

தரம் குறைவான ஊசி பயன்பாட்டால் இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் வாழும் உரிமை பறிபோய் உள்ளது. இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்றார் எதிர்கட்சி தலைவர்.

இதற்கு பதிலளித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

“ இரு மரணங்கள் தொடர்பில் கவலை அடைகின்றோம். அது தொடர்பில் விசாரணை நடக்கின்றது. விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னரே மேலதிக தகவல்கள் தெரியவரும்.” – என்றார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பணி இடைநீக்கம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சால் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பொறுப்புமிக்க பதவியில் உள்ள ஒரு அரசு வைத்திய அதிகாரியாக இருந்து கொண்டு, உரிய அனுமதி அல்லது ஒப்புதல் இன்றிப் பல்வேறு ஊடகங்களுக்கு கருத்துகள் மற்றும் அறிக்கைகள் வழங்கியதாக வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கருத்துகள் மற்றும் ஊடகப் பேச்சுகள், நாட்டில் சர்ச்சைக்குரிய சூழ்நிலையை உருவாக்கியதாகவும், பொதுமக்களிடையே அமைதியின்மை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் எதிர்காலத்தில் உரிய மற்றும் முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

 பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமானில் மிக உயரிய விருது

ஓமான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்த நாட்டின் மிக உயரிய, ‘ஆர்டர் ஆப் ஓமான்’ விருதை மன்னர் சுல்தான் ஹைதம் பின் தரிக் வழங்கி கௌரவித்தார்.

ஜோர்தான், எத்தியோப்பியா மற்றும் ஓமான் ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் எத்தியோப்பியா சென்ற அவருக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து நேற்று ஓமான் சென்ற பிரதமர் மோடிக்கு, அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் தலைநகர் மஸ்கட்டில் நடந்த விழாவில் அந்நாட்டின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் ஓமான், மன்னர் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கால் பிர தமர் மோடிக்கு வழங்கப்பட்டது
.
இது, பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 29வது சர்வதேச விருது.

இந்த விருதை இரண்டாம் எலிசபெத் ராணி, நெதர்லாந்தின் ராணி மேக்சிமா, ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ, தென்னாப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோர் ஏற்கனவே பெற்றுள்ளனர்.

துப்பாக்கிகளை மீளப்பெறுகிறது ஆஸ்திரேலியா! 

துப்பாக்கிகளை மீளப்பெறும் தேசிய வேலைத்திட்டத்தை ஆஸ்திரேலியா முன்னெடுக்கவுள்ளது. பிரதமர் அந்தோனி அல்பானீஸி இன்று (19) இந்த தகவலை வெளியிட்டார்.

சிட்னி, போண்டியில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் ஆஸ்திரேலியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

யூத சமூகம் உட்பட நாட்டில் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதற்கமைய துப்பாக்கிச்சட்டங்களும் கடுமையாக்கப்படவுள்ளன. இதற்குரிய சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு தேசிய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மாநில அரசாங்கங்களும் சட்ட திருத்தத்துக்கு தயாராகிவருகின்றன. இதன்ஓர் அங்கமாகவே துப்பாக்கிகளை மீளப்பெறும் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சமூகத்தில் உள்ள மேலதிக துப்பாக்கிகள், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இலக்கு வைத்தே குறித்த தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

1996 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த போர்ட் ஆர்தர் ( Port Arthur) படுகொலை சம்பவத்தையடுத்து துப்பாக்கிச்சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. துப்பாக்கிகள் மீளப்பெறப்பட்டன.

அதன்பின்னர் 29 ஆண்டுகளுக்கு பிறகு துப்பாக்கிகளை மீளப்பெறும் தேசிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இத்திட்டம்மூலம் லட்சக்கணக்கான ஆயுதங்கள் அழிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெடரல் எனப்படுகின்ற கூட்டாட்சி நாடாளுமன்றம் அடுத்த வாரம் கூடவுள்ளது. இதன்போது துப்பாக்கி சீர்திருத்த சட்டம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன்பின்னர் இதற்குரிய நிதி ஒதுக்கீடு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீள் கொள்வனவுக்குரிய செலவை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் சரிபாதியாக பொறுப்பேற்க வேண்டும்.

மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களிடம் ஆயுதங்களை கையளிக்கலாம். அவற்றை ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் கண்காணிப்பு செய்வார்கள்.

போண்டி பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இதற்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) ஆஸ்திரேலியாவில் துக்கம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 4 மில்லியனுக்கு அதிகமான சட்டப்பூர்வ துப்பாக்கிகள் உள்ளன என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

போண்டியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரியிடம் மாத்திரம் 6 துப்பாக்கி உரிமங்கள் இருந்துள்ளன.

1996 ஏப்ரல் 28 ஆம் திகதி ஆஸ்திரேலியா தென்கிழக்கு டாஸ்மேனியாவில் வரலாற்று சிறப்புமிக்க போர்ட் ஆர்தர் சுற்றுலாப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர். அதுவே போர்ட் ஆர்தர் ( Port Arthur) படுகொலை எனப்படுகின்றது.

மரக்கறி விலைப்பட்டியல் (19.12.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

விவேக் எழுதியுள்ள இப்பாடலில் இடம்பெற்றுள்ள “ஒரு பேரே வரலாறு.. அந்தப் பேரைச் சொன்னால் அதிரும் ஊரு” போன்ற வரிகள் விஜய்யின் மாஸ் அந்தஸ்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன.

”நம்ம மக்கள் நினைக்காம, ஒரு மாற்றம் பிறக்காது” என்ற வரி விஜய்யின் அரசியலை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளன. விஜய்யின் அடுத்தடுத்த பிரச்சாரக் கூட்டங்களில் இந்த பாடலை எதிர்பார்க்கும் அளவுக்கு வரிகளில் ‘அரசியல்’ தெறிக்கிறது.

ஏற்கனவே விஜய் – அனிருத் கூட்டணி ‘கத்தி’, ‘மாஸ்டர்’, ‘லியோ’ எனப் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ள நிலையில், மீண்டும் ‘ஜனநாயகன்’ மூலம் அதே மேஜிக்கை நிகழ்த்தியுள்ளதா என்பது மீதமிருக்கும் பாடல்களும் வெளியான பிறகு தெரியும்.

சர்வதேச கொடையாளர் மாநாட்டை உடன் கூட்டவும்!

“போர் முடிவடைந்த பின்னர் சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்தவிருந்த வாய்ப்பு நழுவவிடப்பட்டது. அந்த தவறை மீண்டும் இழைத்துவிடக்கூடாது.”

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இந்த வலியுறுத்தலை விடுத்திருந்தார்.

“பேரிடரால் சர்வதேச சமூகத்தின் பார்வை இலங்கை பக்கம் திரும்பியுள்ளது. இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள முற்பட வேண்டும்.

சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. எனினும், அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றதாக தெரியவில்லை.

எனவே, சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை விரைவில் நடத்த ஏற்பாடுகள் இடம்பெறவேண்டும்.” எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.

அத்துடன், அமெரிக்க ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி, பேரிடர் நிலைமையை காண்பித்து 20 சதவீத வரியை மேலும் குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்; எனவும் சஜித் மேலும் கூறினார்.

அதேவேளை, சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவதற்குரிய நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாமல்தான் ஜனாதிபதி வேட்பாளர்: இதுவே பொது கருத்து என்கிறார் சாகர!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவே தமது கட்சி வேட்பாளராக களமிறங்கக்கூடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடு இதுவாகவே இருக்கின்றது எனவும் அவர் கூறினார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சாகர காரியவசம் மேற்படி தகவலை வெளியிட்டார்.

“ அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவே தற்போது கட்சிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. கட்சியின் அரசியல் குழு கூடியே இறுதியான – உறுதியான முடிவை எடுக்கும்.” எனவும் அவர் கூறினார்.

2024 ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் நாமல் ராஜபக்ச களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச என அக்கட்சி உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

ரூ. 500 மில்லியன்: குறைநிரப்பு பிரேரணை தொடர்பில் இன்று விவாதம்!

 

500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அது தொடர்பில் இன்று விவாதம் நடத்தப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது.

இதன்போதே டித்வா புயல் தொடர்பான நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அவசர நிதியை பெறும் வகையில் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

அதன்பின்னர் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அனுப்பட்டு, அக்குழுவின் அனுமதி பெறப்படவுள்ளது.

குறைநிரப்பு பிரேரணைமீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்று, வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன்போது அதற்கு ஆதரவாக எதிரணிகள் வாக்களிக்கக்கூடும்.

இதனால் 500 பில்லியனை பெறுவதற்குரிய குறைநிரப்பு பிரேரணைக்கு நாடாளுமன்றம் ஏகமனதாக ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

தோட்ட தொழிலாளியின் வீட்டை அடித்து நொறுக்கிய கறுப்பு ஆடை கும்பல்!

0
இரத்தினபுரி காவத்தை நீலகாமம் இல 01 பிரிவில், தோட்டத் தொழிலாளி ஒருவரின் வீடு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் 22.04.2026 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. தோட்டங்களில் பாதுகாப்பு கடமைகளுக்கு என பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் என கூறிக்கொண்டு...

பிரேமலால் ஜயசேகரவுக்கு பிணை: வெளிநாடு செல்லத் தடை!

0
டி.சந்ரு நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நுவரெலியாவில் நபரொருவருக்கு துப்பாக்கி முனையில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாக, நுவரெலியா காவல்துறையினரால்...

அமைதி பேச்சுக்கு ஈரான் நிபந்தனை விதிப்பு!

0
பொருளாதாரத் தடைகள் மற்றும் முற்றுகையை அமெரிக்கா விலக்கிக் கொண்டால் மட்டுமே, அமைதி பேச்சில் ஈரான் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவுக்கான ஈரானின் தூதுவர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமைதியான அரசியல் தீர்வு அல்லது போர்ச் சூழல்...