Home Blog Page 166

நாமல்தான் ஜனாதிபதி வேட்பாளர்: இதுவே பொது கருத்து என்கிறார் சாகர!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவே தமது கட்சி வேட்பாளராக களமிறங்கக்கூடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடு இதுவாகவே இருக்கின்றது எனவும் அவர் கூறினார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சாகர காரியவசம் மேற்படி தகவலை வெளியிட்டார்.

“ அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவே தற்போது கட்சிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. கட்சியின் அரசியல் குழு கூடியே இறுதியான – உறுதியான முடிவை எடுக்கும்.” எனவும் அவர் கூறினார்.

2024 ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் நாமல் ராஜபக்ச களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச என அக்கட்சி உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

ரூ. 500 மில்லியன்: குறைநிரப்பு பிரேரணை தொடர்பில் இன்று விவாதம்!

 

500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அது தொடர்பில் இன்று விவாதம் நடத்தப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது.

இதன்போதே டித்வா புயல் தொடர்பான நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அவசர நிதியை பெறும் வகையில் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

அதன்பின்னர் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அனுப்பட்டு, அக்குழுவின் அனுமதி பெறப்படவுள்ளது.

குறைநிரப்பு பிரேரணைமீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்று, வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன்போது அதற்கு ஆதரவாக எதிரணிகள் வாக்களிக்கக்கூடும்.

இதனால் 500 பில்லியனை பெறுவதற்குரிய குறைநிரப்பு பிரேரணைக்கு நாடாளுமன்றம் ஏகமனதாக ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மலையகம்தான் எங்கள் தாயகம்: வடக்கில் குடியேற வரமாட்டோம்!

“மலையகம்தான் எங்கள் தாயகம். எனவே, எக்காரணம் கொண்டும் வடக்கு, கிழக்கில் குடியேற வரப்போவதில்லை.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஸ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அதிகம் பேசினார்கள். அப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட்டு, அவர்கள் எமது பகுதியிலேயே குடியமர்த்தப்பட வேண்டும்.

மலையகம்தான் எங்கள் தாயம். எனவே, வடக்கு, கிழக்குக்கு சென்று குடியேறப்போவதில்லை. “ –என்றார்.

இலங்கை மக்கள் வெளிப்படுத்திய தேசிய ஒற்றுமைக்கு ஐ.நா. பாராட்டு!

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (டிசம்பர் 17) இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Francheவை தனது அலுவலகத்தில் சந்தித்து, தற்போதைய அனர்த்த நிவாரண நடவடிக்கைகள், நிறுவன மறுசீரமைப்புகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான நிவாரண உதவிகளின் ஒருங்கிணைப்பு தொடர்பில் கலந்துரையாடினார்.

அனர்த்தத்தின் போது இலங்கை மக்கள் வெளிப்படுத்திய தேசிய ஒற்றுமையும் மற்றும் தாங்கும் ஆற்றலும் பாராட்டத்தக்கவை என ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர், தற்போதைய நிவாரண நடவடிக்கைகள், கடந்த கால குறைபாடுகளிலிருந்து தெளிவான மாற்றத்தை பிரதிபலிப்பதுடன், ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த அணுகுமுறைக்கான முக்கிய திருப்புமுனையாக அமைகின்றது என குறிப்பிட்டார்.

அனர்த்த முகாமைத்துவத்தை வலுப்படுத்தும் முக்கிய மறுசீரமைப்புகளான, அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை தேசிய பாதுகாப்பின் ஒரு அங்கமாக அங்கீகரித்தல் ஆகியவற்றை பாதுகாப்பு பிரதி அமைச்சர் விளக்கினார்.

மேலும், வெளிநாட்டு நிவாரண உதவிகளை கண்காணித்து ஒழுங்குபடுத்துவதிலும், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதிலும் வெளிநாட்டு மனிதாபிமான உதவி (விநியோகப் பொருட்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்ட குழு (HL-FRAC) வின் செயல்பாடுகள் குறித்தும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு விளக்கமளித்தார்.

விநியோக மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட களஞ்சிய வசதிகள் ஆகிய விடயங்கள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டு , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை (DMC) பொருற்களை பெறுநராக நியமிப்பதன் மூலம் நடைமுறைகளை எளிமைப்படுத்தல் மற்றும் மையப்படுத்தப்பட்ட விநியோக ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் போன்ற முன்மொழிவுகள் இதன் போது முன்வைக்கப்பட்டன.

இலங்கை ஜனாதிபதி மற்றும் மக்கள் சார்பில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஐக்கிய நாடுகள் அமைப்பு, சர்வதேச பங்குதாரர்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளின் தொடர்ச்சியான ஆதரவுக்கு மனமார்ந்த பாராட்டையும் தெரிவித்துக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர், ஐ.நா. அமைப்பின் தொடர்ச்சியான உதவிகளை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், சிறந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் கொண்ட ஒருங்கிணைந்த கட்டமைப் பொன்றை முன்மாதிரியாக எடுத்துக்காட்டினார்.

மேலும், மனிதாபிமான நிவாரண உதவிகளின் சுங்கச் செயல்முறையை விரைவுபடுத்த விமான நிலையம் மற்றும் துறைமுகத்தில் தற்காலிக ஒரே இட சேவை மையம் ஒன்றை அமைப்பதையும் முன்மொழிந்தார்.

இச்சந்திப்பு, இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஒத்துழைப்பும் தேவையான மறுசீரமைப்புகளும் மேற்கொள்ளப்படும் என உறுதிப்படுத்தலுடன் நிறைவடைந்தது.

டித்வா புயல்: தெரிவுக்குழு அமைக்ககோரி கடிதம் கையளிப்பு!

டித்வா புயலால் ஏற்படும் தாக்கங்களை எதிர்கொள்வதற்குரிய முன்னாயத்த நடவடிக்கைகள் இடம்பெறாமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்குமாறுகோரும் கடிதம் சபாநாயகரிடம் இன்று (18) கையளிக்கப்பட்டுள்ளது.

எதிரணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன இக்கடிதத்தை எழுதியுள்ளார்.

அதனை சபாநாயகரிடம் கையளிப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட எதிரணி எம்.பிக்களையும் அவர் அழைத்துச் சென்றுள்ளார். சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,

“ டித்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிர் இழப்புகள், சொத்துச் சேதங்கள் மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக இன்னும் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவில்லை.

எனினும், நாட்டில் நடந்துள்ள அனர்த்தங்களில் இந்த பேரனர்த்தம் பேரிழிவை ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவாகின்றது.

இந்த துயர் மிகுந்த நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்திருந்தன. முன்னறிவிப்புகளைச் செய்திருந்தன என்பது ஏற்கனவே நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், இந்த நிலைமைக்கு முகம்கொடுக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் எந்த வகையிலும் முன்னாயத்தமின்றி இருந்தமை கவலைக்குரிய விடயமாகும்.

முன்னாயத்த தயார் நிலை எடுக்கப்பட்டிருந்தால், ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறிப்பிட்டளவில் தடுத்திருக்க முடியும் என்பது எமது நம்பிக்கையாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்றவை இடம்பெற்ற போது விசேட தெரிவுக் குழுக்களை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதன்பிரகாரம் டித்வா புயலால் ஏற்பட்ட பேரழிவைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கை பெறவேண்டும்.

இதற்காக நாடாளுமன்றம் விசேட தெரிவுக் குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம்.

22 மாவட்டங்களில் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதால் தெரிவுக் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 30 வரையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும்.” என மேற்படி கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

உயர்மட்ட சீன தூதுக் குழுவினர் சபாநாயகருடன் சந்திப்பு!

உயர்மட்ட சீன தூதுக் குழுவினர் சபாநாயகரைச் சந்தித்தனர்
சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் (SCNPC) கௌரவ உப தலைவர் வாங் டோங்மிங் (H.E. Wang Dongming) தலைமையிலான சீன மக்கள் குடியரசின் உயர்மட்ட தூதுக்குழுவினர் நேற்று (17) பாராளுமன்றத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன அவர்களைச் சந்தித்தனர்.

இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான ஆழமான மற்றும் நீடித்த உறவை சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன டுத்துரைத்தார்.

இந்த உயர்மட்ட சீன பாராளுமன்றக் குழுவின் விஜயம் பாராளுமன்ற இராஜதந்திரம் மீது சீனா வழங்கும் முக்கியத்துவத்தையும், இரு நாடுகளுக்குமிடையேயான நீண்டகால ஒத்துழைப்பின் வலிமையையும் பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

தித்வா சூறாவளியின் காரணமாக அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து சபாநாயகர் தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்ததுடன், இந்தக் காலகட்டத்தில் சீனா வழங்கிய ஆதரவு மற்றும் உதவிகளுக்காக சீனா அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இலங்கையின் மனமார்ந்த நன்றியை அவர் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் (SCNPC) கௌரவ உப தலைவர் வாங் டோங்மிங் அவர்கள், இலங்கைக்கு விஜயம் செய்ய அழைத்தமைக்கு தனது பாராட்டைத் தெரிவித்ததுடன்,

இரு நாடுகளுக்கும் இடையே பாராளுமன்ற பரிமாற்றங்கள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான சீனாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். நெருங்கிய மற்றும் நட்பு நாடாக, இலங்கை அதன் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஆதரவளிப்பதற்கு சீனா தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட சவால்களைச் சமாளிக்க இலங்கை அரசாங்கத்திற்கான சீனாவின் ஆதரவை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

அத்துடன், கௌரவ உப தலைவர் வாங் டோங்மிங் அவர்கள் இலங்கையின் ஜனாதிபதி அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்ததை நினைவுகூர்ந்ததுடன், அது இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளுக்கு ஒரு புதிய மூலோபாய வழிகாட்டியாகச் செயல்படுகிறது என்று குறிப்பிட்டார்.

மேலும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மைகளை ஏற்படுத்தும் வகையில் பொருளாதார ஒத்துழைப்பு, கல்வி, கலாசாரம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்ற சீனா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் இலங்கைக்கு சீனா தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்காக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன அவர்கள் இதன்போது நன்றியைத் தெரிவித்தார்.

22 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை!

பேரிடருக்கு மத்தியிலும் நாம் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கவில்லை. சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்குரிய வேலைத்திட்டம் தொடர்கின்றது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 22 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

“நெருக்கடியான காலகட்டத்திலும் நாம் சுற்றுலாத்துறையை கைவிடவில்லை. சுற்றுலாப் பயணிகளை அழைத்துவரும் வேலைத்திட்டம் முறையாக முன்னெடுக்கப்பட்டது.

டிசம்பர் மாதத்தில் முதல் 10 நாட்களுக்குள் 93 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 22 லட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டிலேயே இலங்கைக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். பேரிடர் நிலையால் அந்த இலக்கை இவ்வருடம் அடைய முடியாமல்போனது.

எனினும், சுற்றுலாத்துறை வருமானம் தக்கவைக்கப்பட்டது. இலங்கைக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகளை வரவைப்பதற்குரிய வேலைத்திட்டம் தொடரும்” என வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியப் பேரவையினர் தமிழக முதல்வருடன் சந்திப்பு!

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினர் சந்தித்துப் பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், அக்கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் கனகரத்தினம், கொள்கைப் பரப்புச் செயலாளர் சட்டத்தரணி நடராஜா காண்டீபன், தேசிய அமைப்பாளர் த. சுரேஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள்.

சந்திப்பின்போது தமிழ்த் தேசியப் பேரவையினரால் இலங்கை அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து ஏக்கிய ராஜ்ய அரசமைப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், புதிய அரசு உருவாக்கவுள்ள புதிய அரமைப்பில் தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய சமஷ்டி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்துவதற்குத் தமிழக அரசு இந்நிய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

மேலும், பொருளாதார ரீதியாகப் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள இலங்கை அரசு இந்தியாவின் பங்களிப்பின்றி வளர்ச்சியடைய முடியாது. தமிழகத்தோடு பொருளாதார ரீதியில் நெருக்கமான உறவையும் தொடர்பாடலையும் உருவாக்காமல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி என்பதும் பாரிய சவாலாகவே இருக்கும். இதன் பின்னனியில் இலங்கையின் மீது கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தி, தமிழர்கள் விரும்பும் தீர்வை இந்தியாவினால் சாத்தியமாக்க முடியும் என்றும் தமிழ்த் தேசியப் பேரவையினர் தெரிவித்தனர்.

அத்தோடு, தமிழக மற்றும் ஈழக் கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாகவும் தமிழ்த் தேசியப் பேரவையினர் உரையாடினர்.

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் தமிழக மீனவர்களின் எல்லை தாண்டும் பிரச்சினையை இலங்கை அரசு தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழகத்தையும் ஈழத் தமிழர்களையும் நிரந்தரப் பகையாளிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது என்றும், இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி இந்திய நலன்களுக்கு முரணான வெளிச்சக்திகள் இலங்கையில் காலூன்றி வருகின்றன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்தி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காணத் தமிழக அரசு தலையிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

சந்திப்பின் முடிவில் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிய அரசமைப்பு தொடர்பாகவும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டும் பிரச்சினை தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தனித்தனியான கோரிக்கைக் கடிதங்களைக் கையளித்தார்.

முதலமைச்சரின் சந்திப்பின் பின்னர் ஏனைய கட்சிகளின் தலைவர்களையும் விரைவில் சந்திக்கவிருப்பதாகத் தமிழ்த் தேசியப் பேரவையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின்போது இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவனும் கலந்துகொண்டிருந்தார்.

மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் 19, 21 ஆம் திகதிகளில் விடுமுறை

!

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை 19 மற்றும் 22 (திங்கட்கிழமை) ஆம் திகதிகளில் கனமழை காரணமாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளுக்கு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு வீதிகளில் பயணிக்க சிரமம் ஏற்படக்கூடும் என்பதாலும், மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன் மத்திய மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் 19 மற்றும் 22 ஆகிய திகதிகளில் விடுமுறை அறிவித்துள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு யூரோ 2.35 மில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான உதவி!

 

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான பங்குதாரர்கள் மற்றும், இலங்கையை மீட்டெடுக்கும் செயல்முறைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் வகையில், யூரோ 2.35 மில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது.

இதில் IFRC இனால் யூரோ 500,000 மற்றும் DG-European Civil Protection and Humanitarian Aid Operations (ECHO) பங்குதாரர்கள் WFP மற்றும் UNICEF இனால் யூரோ1.85 மில்லியன் ஆகியவை அடங்கும்.

மேலும், Union Civil Protection Mechanism (UCPM) சேர்ந்த 37 நாடுகள், 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், அல்பேனியா, பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, ஐஸ்லாந்து, மோல்டோவா, மோண்டினீக்ரோ, வடக்கு மெசிடோனியா, நோர்வே, சேர்பியா, துருக்கி மற்றும் உக்ரைன் ஆகியவை இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் பங்களித்துள்ளன.

UCPM மனிதாபிமான உதவி விநியோகத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு நேற்று (17) ஒரு தொகுதி மனிதாபிமான உதவிகள் கிடைத்ததுடன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் லக்சம்பர்க் இல் இருந்து இரண்டு சரக்கு விமானங்கள் கொழும்புக்கு வந்தன.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் Carmen Moreno, பிரான்ஸ் தூதுவர் Rémi Lambert மற்றும் ஜெர்மன் தூதரகத்தின் பிரதி தூதுக்குழுத் தலைவர் Sarah Hasselbarth ஆகியோர் மனிதாபிமான உதவிகளை இந்நாட்டிற்கு உத்தியோகபூர்வமாக ஒப்படைத்ததுடன், இலங்கை அரசாங்கத்தின் சார்பாக, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் சதுர லியனாரச்சி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மனிதாபிமான உதவிப் பொருட்களில் கூடாரங்கள், மெத்தைகள், சுகாதாரம் மற்றும் சமையலறைப் பொருட்கள், படுக்கைகள் மற்றும் நீர் வடிகட்டிகள் போன்ற 83 டொன் நிவாரணப் பொருட்கள் இதில் அடங்கும். இந்த பொருள் உதவி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரமாக விநியோகிக்கப்பட உள்ளது.

மேலும், இந்நாட்டின் அனர்த்த மதிப்பீடு மற்றும் மீட்பு செயல்முறைக்கு உதவ இத்தாலி பொறியலாளர்கள் குழுவும் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் அவசர முகாமைத்துவ சேவை (EMS) விரைவான வரைபடவியல் மூலம் இதுவரை சுமார் 30 வரைபடங்களை உருவாக்கி வழங்கியுள்ளது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

மாத்தளை மாவாட்டப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு பாடசாலைகளுக்கு உதவிகள்!

0
🙏"மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் மாத்தளை மாவாட்டப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு பாடசாலைகளுக்கு உதவிகள் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின்" ஊடாக சித்திரைப் புத்தாண்டின் முதலாவது நிகழ்வாக மாத்தளை கல்வி வலயத்தைச் சேர்ந்த இரண்டு...

தோட்ட நிர்வாகம் குண்டர் படை அமைக்க இடமளிக்ககூடாது!

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு! " கோதாபய ஆட்சியில் இப்படியான பல அராஜக சம்பவங்களை நான் நேரில் போய் நிறுத்தி உள்ளேன். இப்போது அனுர ஆட்சியிலும் அதே ஹெல்மட் குண்டர்கள்...

தோட்ட தொழிலாளியின் வீட்டை அடித்து நொறுக்கிய கறுப்பு ஆடை கும்பல்!

0
இரத்தினபுரி காவத்தை நீலகாமம் இல 01 பிரிவில், தோட்டத் தொழிலாளி ஒருவரின் வீடு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் 22.04.2026 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. தோட்டங்களில் பாதுகாப்பு கடமைகளுக்கு என பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் என கூறிக்கொண்டு...