Home Blog Page 167

மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் 19, 21 ஆம் திகதிகளில் விடுமுறை

!

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை 19 மற்றும் 22 (திங்கட்கிழமை) ஆம் திகதிகளில் கனமழை காரணமாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளுக்கு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு வீதிகளில் பயணிக்க சிரமம் ஏற்படக்கூடும் என்பதாலும், மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன் மத்திய மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் 19 மற்றும் 22 ஆகிய திகதிகளில் விடுமுறை அறிவித்துள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு யூரோ 2.35 மில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான உதவி!

 

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான பங்குதாரர்கள் மற்றும், இலங்கையை மீட்டெடுக்கும் செயல்முறைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் வகையில், யூரோ 2.35 மில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது.

இதில் IFRC இனால் யூரோ 500,000 மற்றும் DG-European Civil Protection and Humanitarian Aid Operations (ECHO) பங்குதாரர்கள் WFP மற்றும் UNICEF இனால் யூரோ1.85 மில்லியன் ஆகியவை அடங்கும்.

மேலும், Union Civil Protection Mechanism (UCPM) சேர்ந்த 37 நாடுகள், 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், அல்பேனியா, பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, ஐஸ்லாந்து, மோல்டோவா, மோண்டினீக்ரோ, வடக்கு மெசிடோனியா, நோர்வே, சேர்பியா, துருக்கி மற்றும் உக்ரைன் ஆகியவை இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் பங்களித்துள்ளன.

UCPM மனிதாபிமான உதவி விநியோகத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு நேற்று (17) ஒரு தொகுதி மனிதாபிமான உதவிகள் கிடைத்ததுடன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் லக்சம்பர்க் இல் இருந்து இரண்டு சரக்கு விமானங்கள் கொழும்புக்கு வந்தன.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் Carmen Moreno, பிரான்ஸ் தூதுவர் Rémi Lambert மற்றும் ஜெர்மன் தூதரகத்தின் பிரதி தூதுக்குழுத் தலைவர் Sarah Hasselbarth ஆகியோர் மனிதாபிமான உதவிகளை இந்நாட்டிற்கு உத்தியோகபூர்வமாக ஒப்படைத்ததுடன், இலங்கை அரசாங்கத்தின் சார்பாக, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் சதுர லியனாரச்சி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மனிதாபிமான உதவிப் பொருட்களில் கூடாரங்கள், மெத்தைகள், சுகாதாரம் மற்றும் சமையலறைப் பொருட்கள், படுக்கைகள் மற்றும் நீர் வடிகட்டிகள் போன்ற 83 டொன் நிவாரணப் பொருட்கள் இதில் அடங்கும். இந்த பொருள் உதவி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரமாக விநியோகிக்கப்பட உள்ளது.

மேலும், இந்நாட்டின் அனர்த்த மதிப்பீடு மற்றும் மீட்பு செயல்முறைக்கு உதவ இத்தாலி பொறியலாளர்கள் குழுவும் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் அவசர முகாமைத்துவ சேவை (EMS) விரைவான வரைபடவியல் மூலம் இதுவரை சுமார் 30 வரைபடங்களை உருவாக்கி வழங்கியுள்ளது.

ரூ.500 பில்லியனுக்கான குறைநிரப்பு பிரேரணை முன்வைப்பு: எதிர்க்கட்சி தலைவர் ஆதரவு!

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரண உதவி உள்ளிட்ட விடயங்களுக்காக அவசர நிதியாக 500 பில்லியன் ரூபா கோரும் குறைநிரப்பு பிரேரணை சபையில் இன்று முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் நாளை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையிலேயே அதற்கு ஆதரவளிக்கப்படும் என சஜித் கூறினார்.

அத்துடன், பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உறுதிமொழிகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதற்காக வலுவானதொரு பொறிமுறை ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும், அனர்த்த முகாமைத்துவத்தைக் கையாள்வதற்கு தனி அமைச்சொன்று அவசியம் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.

தேயிலை ஏற்றுமதித்துறையை மீளக் கட்டியெழுப்ப வலுவான திட்டம் அவசியம்!

தேயிலை ஏற்றுமதியாளர்களின் களஞ்சியசாலைகள் பல வெள்ளத்தில் மூழ்கியதால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே ஏற்றுமதியாளர்கள் இதிலிருந்து முன்னோக்கிச் செல்வதற்கு அரசாங்கத்திடமுள்ள வேலைத்திட்டம் என்ன? இந்த பிரச்சினை முறையாக நிர்வகிக்கப்படாவிட்டால் தேயிலை ஏற்றுமதித்துறை பாதிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேயிலை ஏற்றுமதியாளர்களின் களஞ்சியசாலைகள் பல வெள்ளத்தில் மூழ்கியதால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே ஏற்றுமதியாளர்கள் இதிலிருந்து முன்னோக்கிச் செல்வதற்கு அரசாங்கத்திடமுள்ள வேலைத்திட்டம் என்ன? சிலர் காப்புறுதி செய்துள்ள போதிலும், துரதிஷ்டவசமாக காப்புறுதி திட்டங்களை செய்யவில்லை. சில காப்புறுதி நிறுவனங்களின் கொள்கைககளில் இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் உள்ளடக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பது அரசாங்கத்துக்குள்ள பாரிய சவாலாகும். ஆனால் இவ்வாறான துறைகளுக்கு காப்புறுதி நிறுவனங்கள் கை கொடுத்தால், அரசாங்கத்துக்கு அந்த சுமையை ஏற்க வேண்டியேற்படாது. எனினும் காப்புறுதி நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையும் காணப்படுகிறது. இதுவரை காப்புறுதி நிறுவனங்களுக்கு 37 பில்லியன் வரையாக கோரிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான தொகையை காப்புறுதி நிறுவனங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா என்பது அடுத்த பிரச்சினையாகும்.

காப்புறுதி செய்துள்ளவர்களுக்கு எவ்வாறு எந்த இழப்பீட்டைப் பெற்றுக் கொடுப்பது என்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்த தொழிற்துறையினருக்கு இழப்பீட்டுடன் மிகக் குறைந்த வட்டியில் 10 இலட்சம் வரையில் கடனைப் பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதி பெற்றுக் கொள்ளப்படும். திறைசேரியில் போதுமானளவு நிதி காணப்படுகிறது. எனவே நிதி பற்றாக்குறை எனக் கூடி இதனை தட்டிக்கழிக்க முடியாது. ” என்றார்.

உக்ரைனில் மேலும் நிலப்பரப்பு கைப்பற்றப்படும்: புடின் எச்சரிக்கை!

உக்ரைன் அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தால், உக்ரைனில் மேலும் கூடுதலான நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றும் என ஜனாதிபதி புடின் எச்சரித்தார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஆனால் தீர்வு இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. எனவே, ‘நேட்டோ’ கூட்டமைப்பில் உக்ரைனை இணைக்க வேண்டும் என்ற தங்கள் நீண்டகால கோரிக்கையை கைவிட தயாராக இருப்பதாக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.

இந்த சூழலில், வருடாந்திர கூட்டத்தில் ராணுவ தளபதிகள் மத்தியில் புடின் உரையாற்றினார்.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்க தவறினால், உக்ரைனில் தனது பிராந்தியக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்த ரஷ்யா நடவடிக்கை எடுக்கக்கூடும். மேலும் கூடுதலான நிலப்பரப்பை கைப்பற்றுவோம்.

ராஜதந்திர முயற்சிகள் தடைபட்டால், ரஷ்யா ராணுவ பலத்தை நம்ப தயாராக உள்ளது.

பேச்சுவார்த்தைகள் மூலம் மோதலை தீர்ப்பதை ரஷ்யா விரும்புகிறது. ராஜதந்திரம் வாயிலாக போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா பாடுபடும் எனவும் புடின் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடையை நீடித்தது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை ஜனவரி 23 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் விமான நிலையங்கள் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘‘இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள், இந்திய விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான விமானங்கள், இந்திய விமான நிறுவனங்களால் குத்தகைக்கு எடுத்து இயக்கப்படும் விமானங்கள், இந்திய ராணுவ விமானங்கள் உட்பட அனைத்து இந்திய விமானங்களும் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடை ஜனவரி 23 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக’’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின்போது இந்திய ராணுவ விமானங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து இலக்குகளை குறிவைத்துத் தாக்கி அழித்தன.

இதனால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்ட பாகிஸ்தான், இந்த சம்பவத்துக்குப் பிறகு இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க ஒரு மாதம் தடை விதித்தது. பிறகு அந்த தடையை தொடர்ந்து நீட்டித்து வருகிறது. இதேபோல், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க இந்தியாவும் தடை விதித்துள்ளது.

ஐதேக தலைமைப் பதவியில் இருந்து விலக தயார்: ரணில் அறிவிப்பு!

“ ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது விருப்பம். எனவே, இரு தரப்பு இணைவுக்கு நான்தான் தடையாக உள்ளேன் எனில், எந்த சந்தர்ப்பத்திலும் பதவி விலக தயார்.”

இவ்வாறு ஐதேகவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐதேக தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார் என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“ ரணில் விக்கிரமசிங்க பதவி விலகி, தலைமைப் பதவியை சஜித்தோ அல்லது வேறு எவரிடமோ கையளிக்க வேண்டும் என செயற்குழு தீர்மானித்தால் அதற்கேற்ப செயல்பட தயார்.

இந்நாட்டில் அரசியலில் வகிக்ககூடிய உயர் பதவிகளை வகித்தவிட்டேன். எனவே, எனக்கு விட்டுக்கொடுப்பு என்பது பெரிய விடயம் அல்ல.” எனவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

மரக்கறி விலைப்பட்டியல் (18.12.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கள் – ஜி.எல்.பீரிசின் நூல் வெளியானது

அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீளாய்வு செய்யும் நூல் ஒன்றை முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எழுதி வெளியிட்டுள்ளார்.

‘இலங்கை அமைதி செயல்முறைகள்: ஒரு உள் பார்வை’ என்ற தலைப்பில், வெளியிடப்பட்டுள்ள இந்த நூல், 2002 செப்டம்பர் 16,இல் தாய்லாந்தின் சத்தஹிப்பில் தொடங்கிய இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்கள் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

இந்தப் பேச்சுக்களின் கட்டமைப்பு பலவீனங்கள், போட்டி நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் இறுதியில் அதன் சரிவுக்கு வழிவகுத்த அரசியல் காரணிகள் குறித்தும் இதில் விபரிக்கப்பட்டுள்ளது.

சமாதான முன்னெடுப்பின் வடிவமைப்பு, அதன் பலம் மற்றும் உள்ளார்ந்த குறைபாடுகள், அடையப்பட்ட வரையறுக்கப்பட்ட ஆதாயங்கள் மற்றும் அதன் தோல்வியைத் தூண்டிய காரணிகளை இந்த நூல் பகுப்பாய்வு செய்கிறது.

விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில், பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஜி.எல்.பீரிசின் பார்வையில் இந்த சமாதான முயற்சிகள் எவ்வாறு இருந்தன என்பதை இது விளக்குகிறது.

பேச்சுக்களில் சம்பந்தப்பட்ட ஆளுமைகள், இரு தரப்பிலும் உள்ள மூலோபாய கணக்கீடுகள் மற்றும் கடுமையான உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தத்தின் கீழ் பேச்சுவார்த்தை நடத்துவதன் யதார்த்தங்கள் பற்றிய அவர் தனது நேரடி அனுபவங்களை இதில் விபரித்துள்ளார்.

சமகால உலகத் தலைவர்கள் பேச்சுவார்த்தை மூலம் ஆயுத மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் போராடி வரும் நிலையில், அமைதி செயல்முறைகளின் சாத்தியங்கள் மற்றும் பலவீனம் மற்றும் தவறான நடவடிக்கைகளினால் கொடுக்கப்படும் அதிக விலை ஆகியவற்றை ‘சிறிலங்கா அமைதி செயல்முறைகள்: ஒரு உள் பார்வை’ நூல் நினைவூட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னி பயங்கரவாதத் தாக்குதல்: துப்பாக்கிதாரிமீது 59 குற்றச்சாட்டுகள் பதிவு!

சிட்னி போண்டியில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக கொலைக் குற்றம் உட்பட 59 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தந்தை (சாஜித் அக்ரம் – 50) மற்றும் மகன் (நவீத் அக்ரம் – 24) ஆகியோரே இந்த கொடூர தாக்குதலை நடத்தி இருந்தனர். சம்பவ இடத்திலேயே தந்தை கொல்லப்பட்டார்.

மகன் காயமடைந்த நிலையில் பொலிஸ் காவலின்கீழ் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இந்நிலையில் அவர் கோமாவில் இருந்து மீண்டதும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

15 கொலைக்குற்றச்சாட்டுகள், பயங்கரவாத செயல் உட்பட 59 குற்றச்சாட்டுகள் அவர் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வைத்தியசாலையில் இருந்து ஒன்லைன்மூலம் அவர் நீதிமன்றத்தில் காட்சிப்படுத்தப்பட்டார்.

சிறைச்சாலைக்கு மாற்றும் அளவுக்கு அவர் பூரண குணமடையவில்லை என்பதால் பொலிஸ் காவலின்கீழ் தொடர்ந்து சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.

போண்டி பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 42 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

காவத்தையில் காடையர் கும்பல் அடாவடி: இதொகா தலைவர் கண்டனம்!

0
இரத்தினபுரி காவத்தை நீலகாமம் இல 1 தோட்டத்தில் தோட்ட தொழிலாளியால் அமைக்கப்பட்ட வீடு ஒன்றை காடையர்கள் உடைத்து தரைமட்டம் ஆக்கியமைக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். தோட்டங்களில் பாதுகாப்பு கடமைகளுக்கு...

காவத்தை பிரச்சினையை கையிலெடுத்தார் பிரதீப்!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்துக்குள் நுழைந்த ‘கறுப்பு ஆடை கும்பலுக்கு’ எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வலியுறுத்தியுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பில் காவத்தை பொலிஸ்...

மாத்தளை மாவாட்டப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு பாடசாலைகளுக்கு உதவிகள்!

0
🙏"மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் மாத்தளை மாவாட்டப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு பாடசாலைகளுக்கு உதவிகள் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின்" ஊடாக சித்திரைப் புத்தாண்டின் முதலாவது நிகழ்வாக மாத்தளை கல்வி வலயத்தைச் சேர்ந்த இரண்டு...