Home Blog Page 274

பாகிஸ்தான் அமைச்சரிடம் கிண்ணம் வாங்க மறுத்த இந்திய அணி!

 

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக இந்திய அணி கோப்பையை வென்றது. ஆனால் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வியிடமிருந்து ஆசியக் கிண்ணத்தை சாம்பியனான இந்திய அணி வாங்க மறுத்தது,
இதனையடுத்து பரிசளிப்பு நிகழ்ச்சி ஒரு மணி நேரம் கால தாமதமானது.

இந்திய அணிக்குச் சேர வேண்டிய கிண்ணத்தையும், பதக்கங்களையும் மோசின் நக்வி எடுத்துச் சென்றது கடும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது. மோசின் நக்வி, பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் என்பதோடு பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா செய்தி நிறுவனத்திடம் கூறும்போது,

“மோசின் நக்வியிடமிருந்து கிண்ணத்தை பெற மாட்டோம் என்று முடிவெடுத்தோம். அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர். அதனால் நாங்கள் அவரிடமிருந்து கோப்பையை வாங்க மறுத்தோம், இதனால் அந்தக் கோப்பையை அவர் எடுத்துக் கொள்ளட்டும் என்று அர்த்தமல்ல. அதனால் கோப்பையும் பதக்கங்களையும் அவர் எடுத்துச் செல்ல முடியாது. விரைவில் அது இந்திய அணியிடம் சேர்ப்பிக்கப்படும் என்று நம்புகிறோம்.

வரும் நவம்பர் மாதம் துபாயில் ஐசிசி மாநாடு நடைபெறவிருக்கிறது. இதில் நாங்கள் பாகிஸ்தானின் மோசின் நக்விக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யப்போகிறோம்.” என்று விவரித்தார்.

பரிசளிப்பு நிகழ்ச்சித் தொடங்கிய பிறகு குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா, திலக் வர்மா மேடையில் இருந்த மற்ற விஐபிக்களிடமிருந்து பதக்கங்களைப் பெற்றனர்.

பாகிஸ்தான் தலைவர் சல்மான் ஆகா, நக்வியிடமிருந்து ரன்னர்களுக்குரிய காசோலையைப் பெற்றார்.

அப்போது இந்திய அணிக்குக் கோப்பை என்னவாயிற்று என்ற கேள்வி எழுந்தது. உடனே பரிசளிப்பு நிகழ்ச்சியை நடத்திய தொலைக்காட்சி ஊடகத்தின் சைமன் டூல் , ‘இந்திய அணி தங்கள் பதக்கங்களையும் விருதுகளையும் இன்று இரவு பெறப்போவதில்லை’ என்று அறிவித்ததோடு, பரிசளிப்பு நிகழ்ச்சி முடிந்தது என்றார்.

ஆட்டம் முடிந்த பிறகு சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில், “நான் கிரிக்கெட் ஆடும் காலத்திலிருந்து இப்படி ஒன்று நடத்தையைப் பார்த்ததில்லை. சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு கோப்பையைக் கொடுக்காமல் மறுப்பது இதுதான் முதல் முறை. நாங்கள்தான் கோப்பையை பெற முழுத் தகுதி பெற்றவர்கள். இதை விட வேறு எதையும் என்னால் கூற முடியவில்லை. ” – என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி: 9 பேர் காயம்!

 

அமெரிக்காவில் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் டெட்ராய்டிலிருந்து 50 மைல் வடக்கே மிச்சிகனில் கிராண்ட் பிளாங்கில் தேவாலயம் ஒன்று உள்ளது.

அங்கு பலர் கூடியிருந்தபோது திடீரென அங்கிருந்த ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். அதை தொடர்ந்து தீ விபத்தும் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தனர். இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 9 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் பர்ட்டனைச் சேர்ந்த 40 வயது நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ”இது நாட்டில் கிறிஸ்தவர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்” என தெரிவித்துள்ளார்.

‘ மிச்சிகனில் உள்ள கிராண்ட் பிளாங்கில் உள்ள தேவாலயத்தில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு குறித்து எனக்கு விளக்கப்பட்டது. எப்பிஐ அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் இறந்துவிட்டார்.

இது அமெரிக்காவில் கிறிஸ்தவர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அவர்களது குடும்பங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். நமது நாட்டில் இந்த வன்முறை உடனடியாக முடிவுக்கு வர வேண்டும்.” எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.

விஜய் சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தம்: வீடு, கட்சி அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு!

 

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயி​ரிழந்த நிலை​யில், விஜய் சுற்​றுப்​பயணம் தற்​காலிக​மாக தள்​ளிவைக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. மேலும், சென்​னை​யில் விஜய் வீட்​டுக்கு பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

கரூரில் விஜய் பிரச்​சா​ரத்​தின்​போது கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயி​ரிழந்த நிலை​யில், நேற்​று​முன் தினம் இரவு 11 மணிக்கு அவர் சென்னை திரும்​பி​னார். அவருக்கு ஆதர​வாக நேற்று முன்​தினம் இரவு ஏராள​மான தொண்​டர்​கள் குவிந்​த​தால் பரபரப்பு ஏற்​பட்​டது.

மேலும், அவருக்கு எதிர்ப்​புத் தெரி​வித்து வீட்​டின் முன் போராட்​டம் நடத்​து​வதற்​காக பல்​வேறு அமைப்​பு​களும் வரவுள்ளதாக கிடைத்த தகவலை​யடுத்​து, கூடு​தல் போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டது. இந்​நிலை​யில், நேற்று விஜய் வீட்டை முற்​றுகை​யிடு​வதற்காக வந்த மாணவர் அமைப்​பினர் 20-க்​கும் மேற்​பட்​டோரை போலீ​ஸார் தடுத்து நிறுத்தி கைது செய்​தனர். மேலும், விஜய் வீடு அமைந்​திருக்​கும் பகு​தி​யில் தடுப்​பு​கள் அமைத்​து, அவ்​வழியே வரு​வோரை தீவிர விசா​ரணைக்​குப் பின்​னரே அனு​ம​திக்​கின்​றனர்.

இதற்​கிடை​யில், விஜய் வீட்​டுக்கு மத்​திய பாது​காப்பு படை வீரர்​கள் நேற்று வந்​தனர். ஏற்​க​னவே விஜய்க்கு ஒய் பிரிவு பாது​காப்பு வழங்​கப்​பட்​டுள்ள நிலை​யில், கூடு​தலாக சிஆர்​பிஎஃப் வீரர்​களும் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். இதே​போல, பனையூரில் விஜய் கட்சி அலு​வல​கத்​துக்​கும் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், கரூர் சம்​பவத்​தையடுத்து விஜய் தனது சுற்​றுப்​பயணத்தை தற்​காலிக​மாக தள்​ளிவைக்க முடிவு செய்​திருப்​ப​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. 2 அல்​லது 3 வாரங்​களுக்கு சுற்​றுப்​பயணத்தை தள்​ளி​வைத்​திருப்​ப​தாக​வும், அதுகுறித்து நிர்வாகிகளுடன் ஆலோ​சனை நடத்தி அறி​விப்பு வெளி​யிட்ட உள்​ள​தாக​வும்​ தவெக வட்​டாரத்​தில்​ கூறப்​படு​கிறது.

கேரதீவு விபத்தில் சிறுமி பலி

யாழ். கேரதீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

ஒரு மோட்டார் சைக்கிளில் நால்வர் பயணித்த நிலையில் நிலைதடுமாறி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று தெரியவந்துள்ளது. இதில், சிறுமி ஒருவர் உயிரிழந்தார். ஏனைய மூவரும் காயங்களுக்கு உள்ளாகினர்.

தென்மராட்சி – மந்துவிலைச் சேர்ந்த எஸ்.தனுஷ்கா என்ற சிறுமியே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரக்கறி விலைப்பட்டியல் (29.09.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

பொய்களே அரசின் கொள்கையாக மாறியுள்ளது: சஜித் சீற்றம்!

“ஜனாதிபதி அநுரவின் அரசு 24 மணிநேரமும் பொய்களைப் பரப்புகின்றது. பொய்களையே கொள்கையாகக் கொண்டிருக்கின்றது.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விமர்சித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரச தரப்பினர் பொய்களாலும், குழப்பங்களாலும் மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள். இவ்வாறான ஏமாற்றுக் செயற்பாடுகளால் தம்மைத் தக்கவைத்துள்ளனர். 24 மணிநேரமும் இவ்வாறு பொய் பேசும் அரசு இலங்கையில் இதுவரை இருந்ததில்லை. பொய்கள் மட்டும்தான் அரசின் பிரதான கொள்கையாக மாறியுள்ளன.

அண்மைக்காலமாக போதைப்பொருள்கள் பெருமளவில் கைப்பற்றப்படுகின்றன. இது தொடர்பில் அரசால் பல்வேறு பரப்புரைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. போதைப்பொருள் காரணமாக நாடும் சீரழிந்து வருகிறது. எனவே, அவற்றைக் கண்டுபிடித்து அழிப்பது சிறந்த செயலாகும்.

அதேநேரம், துறைமுகத்தில் இருந்து அனுமதியில்லாமல் கொள்கலன்களை விடுவித்த விவகாரம் தொடர்பில் அரசு மௌனமாக உள்ளது.

மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த அரசுக்கு மக்கள் தீர்ப்பளிக்கும் நேரம் வந்துவிட்டது. மாகாண சபைத் தேர்தலில் பொய், மோசடி, குழப்பம், ஏமாற்றுதல் ஆகியவற்றைத் தோற்கடிக்குமாறு மக்களிடம் கோருகின்றோம்.” – என்றார்.

நாடு திரும்பியதும் தமிழரசுக் கட்சியை சந்திப்பார் அநுர

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்திப்பதற்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோரிக்கை நிறைவேறும். தற்போது வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் தமிழரசுக் கட்சியைச் சந்திப்பதற்கான திகதியை வழங்குவார்.”

– இவ்வாறு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் யார் உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்படுகின்றார்கள் என்பதில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. சுய அரசியல் நலன்களுக்காகவே பலரும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுகின்றனர். ஆனால், அந்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து அரசு கூடுதல் முக்கியத்துவம் அளித்துச் செயற்படுகினறது. இந்த இலக்கை அடைவதற்கு அனைத்து தரப்பினருடனும் ஜனாதிபதி கலந்துரையாடுவார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்திப்பதற்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோரிக்கை நிறைவேறும். தற்போது வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் தமிழரசுக் கட்சியைச் சந்திப்பதற்கான திகதியை வழங்குவார்.

எனினும், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் உண்மையான ஈடுபாடுக்கும் சுய அரசியல் நலன்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை அனைவரும் உணர வேண்டும். எவ்வாறாயினும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இனப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு உத்தியோகபூர்வமாகக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி அனுப்பப்பட்ட இந்தக் கடிதம், ஜனாதிபதியுடன் தமது கட்சி கடைசியாக நடத்திய பேச்சுவார்த்தை இடம்பெற்று வருடம் கடந்துவிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.” – என்றார்.

சர்வதேச நீதிக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கிழக்கிலும் ஆரம்பம்!

சர்வதேச நீதிக்கான சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் வடக்கில் யாழ்ப்பாணம் – செம்மணியில் நடைபெற்று வரும் நிலையில், கிழக்கில் அம்பாறை – திருக்கோவில், தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாகவும் அந்தப் போராட்டம் நேற்று ஆரம்பமாகியுள்ளது.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இலங்கையின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழின அழிப்பு,வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், போர்க் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் எனும் தொனிப் பொருளுடன் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் போராட்டத்தில் அதிகளவிலான பொதுமக்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் கலந்துகொண்டுள்ளனர்.

மன்னாரில் நாளை பொது முடக்கம்!

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலைத் திட்டத்துக்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும் நாளை திங்கட்கிழமை மன்னார் மாவட்டத்தில் பொது முடக்கப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்தப் பொது முடக்கப் போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் காற்றாலைத் திட்டத்துக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை 57 ஆவது நாளாகப் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத்  தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மன்னார் மாவட்டம் முழுவதும் நாளை திங்கட்கிழமை பொது முடக்கப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம் .அனைத்து செயற்பாடுகளையும் முழுமையாக நிறுத்தி சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எமது போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் பொதுப்  போக்குவரத்து கள் அனைத்தையும் நிறுத்தி, வர்த்தக நிலையங்களை மூடி மாவட்டத்தை ஸ்தம்பிதம் அடையச் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமையாற்றுகின்றவர்கள் நாளை  திங்கட்கிழமை கடமைகளுக்குச் செல்லாது எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டனப் பேரணி ஆரம்பமாகும். இந்தப் பேரணி மன்னார் பஜார் பகுதியை வந்தடையும். பின்னர் அங்கு எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்பப்படும்.

இந்தப் போராட்டம் மதியம் 1.30 மணி வரை முன்னெடுக்கப்படும். போராட்டத்தின் இறுதியில் எமது கோரிக்கை அடங்கிய மகஜரை ஜனாதிபதிக்குக் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரச அதிபருக்குக் கையளிக்கப்படும்.

எனவே, மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் எமது உரிமைக்கான போராட்டத்தில் மீனவர்கள், வர்த்தகர்கள், பொதுப் போக்குவரத்து சேவையை முன்னெடுப்போர் உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு பூரண ஆதரவை வழங்க வேண்டும்.” – என்றார்.

மஹிந்தவை சந்தித்த இதொகா உயர்மட்ட பிரதிநிதிகள்!

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட பிரதிநிதிகள் இன்று சந்தித்து கலந்துரையாடினர்.

இ.தொ.கா பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், அக்கட்சியின் நிதிச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் இன்று (28) தங்காலை, கால்டன் இல்லத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் சுகநலம் விசாரித்தனர்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

டித்வா அனர்த்தத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்குக் காணி வழங்க பெருந்தோட்ட நிறுவனங்களுடன் பேச்சு

0
டித்வா (Ditwa) அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக, புதிய காணிகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் நேற்று (27) நடைபெற்றது. பெருந்தோட்ட மற்றும்...

அடுத்த வாரம் இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள்?

0
நிதி அமைச்சராக பணியாற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணைகளை கொண்டு வர எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது. திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன்...

“நாம் நீலகாமம்” போராட்டத்துக்கு “பிடிதளராதே” அமைப்பு பேராதரவு!

0
"மலையக மக்களுக்கான காணி உரிமையின் அவசியத்துவத்தை வலியுறுத்தியும், பெருந்தோட்ட மக்களின் இருப்பை உறுதிசெய்யும் நோக்கிலும், நீலகாமம் மக்களுக்கு நீதிகோரியும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டத்துக்கு முழு ஆதரவை வழங்குகின்றோம்.” இவ்வாறு “பிடிதளராதே” அமைப்பு அறிவித்துள்ளது. நீலகாமம் தோட்டத்தில்...