Home Blog Page 278

அடுத்த தேர்தலில் மொட்டு கட்சி ஆட்சி மலரும்!

அடுத்த தேசிய தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்று முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ சூளுரைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அச்சம் அறியாத தலைவரே மஹிந்த ராஜபக்ச. அவர்போலவே தற்போது நாமல் ராஜபக்ச செயற்பட்டுவருகின்றார். நாடாளுமன்றத்தில் துணிவுடன் அரசியல் சமரில் ஈடுபடுகின்றனர்.

சபையில் மூவர் இருந்தாலும் தமக்குரிய பணியை மொட்டு கட்சியினர் திறம்பட செய்கின்றனர். நாமலின் துணிவுக்கு அஞ்சியே ஆளுங்கட்சியினர் அவரை குறிவைத்துள்ளனர். போலி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுவருகின்றன.

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு நாம் அடிபணியமாட்டோம். எமது பயணம் தொடரும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மக்கள் சக்தியால் வலுப்படுத்தப்படும்.

அடுத்த தேசியமட்ட தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆட்சி மலரும். எமது கட்சியில் இருந்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தெரிவாவார்கள்.” – என்றார் மொட்டு கட்சி உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ கூறினார்.

ஜனாதிபதி அநுர, ஜப்பான் பிரதமர் சந்திப்பு!

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் இன்று (29) காலை நடைபெற்றது.

ஜப்பான் பிரதமர் அலுவலகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவினால்(Shigeru ISHIBA) மகத்தான வரவேற்பு அளிககப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானிய சுய பாதுகாப்புப் படையின் மரியாதையை ஏற்றுக்கொண்டதுடன், அந்த அணிவகுப்பை பார்வையிடவும் இணைந்தார்.

இருநாட்டு பிரதிநிதிகள் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஆரம்பமானது.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்ட கால நெருங்கிய நட்புறவைத் தொடர்ந்து பலப்படுத்தி, இருநாடுகளுக்கும் இடையில் வர்த்தக,முதலீடு, பொருளாதார, அபிவிருத்தி உதவி மற்றும் வலய பாதுகாப்பு போன்ற விடயங்களை உள்ளடக்கும் வகையில் பல்வேறுபட்ட துறைகளிலான ஒத்துழைப்பை தொடர்ந்து பரவலாக்குவது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

இரு தரப்பினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியை (Official Development Assistance) தொடர்ந்தும் பிரதிபலிக்கும் வகையில், பால் துறையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான திட்டம் (Project for the Enhancement of Productivity in the Dairy Sector) மற்றும் உத்தியோகபூர்வ பாதுகாப்பு உதவி(Official Security Assistance- OSA) திட்டம் குறித்த பரிமாற்று ஆவணம் கைச்சாத்திடும் நிகழ்வும் இதன்போது நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கூட்டு ஊடக சந்திப்பில் உரையாற்றிய ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா (Shigeru ISHIBA) இந்துசமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவமான இடமாக அமைந்துள்ள இலங்கையின் ஸ்தீரத்தன்மை மற்றும் அபிவிருத்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அதற்கமைய இலங்கையுடனான கூட்டாண்மையை மேலும் மேம்படுத்தி விஸ்தரிக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அந்நியோன்ய நம்பிக்கை, கௌரவம் மற்றும் பலமான தொடர்பில் அடிப்படையிலே இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான நீண்டகால நட்புறவு தங்கியுள்ளது. ஜப்பான் பிரதமருடனான பேச்சுவார்த்தை இலங்கை -ஜப்பான் இடையிலான தொடர்புகளின் முக்கிய மைல்கல்லை குறிப்பதாகவும் அந்த உடன்பாடுகளின் முழுமையான பலனை அடைந்து அபிவிருத்தி மற்றும் ஸ்தீரத்தன்மைக்கான பயணத்தில் ஜப்பானுடன் இணைந்து பணியாற்ற இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஜப்பான் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த பொருளாதார நெருக்கடியினால் இடையில் கைவிடப்பட்ட 11 அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பித்து அதன் பலனை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக ஜப்பான் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதிய கடன்மறுசீரமைப்பு திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கு வழங்கிய ஒத்துழைப்பிற்காக ஜனாதிபதி இதன் போது ஜப்பானுக்கு நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா இடையிலான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் பின்னர் இருதரப்பினால் கூட்டு அறிக்கையொன்று (Joint Statement) ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர், பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க,டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

காற்றாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரில் மாபெரும் போராட்டம்

மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மன்னாரில் பொது முடக்கமும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியும் நடைபெற்றன.

மன்னாரில் காற்றாலை செயற்றிட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் இருந்த மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலுக்குக் கடும் எதிர்ப்பை வெளியிடும் வகையிலும் மன்னாரில் பொது முடக்கமும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியும் இன்று இடம்பெற்றன.

இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபை பொது மைதானத்தில் ஆரம்பமாகிய பேரணி, மன்னார் பிரதான வீதியூடக பஸார் பகுதிக்குச் சென்று மாவட்ட செயலகத்துக்கு முன்பாக பல்லாயிரக்கணக்கான மக்களுடன் பல கோஷங்களை எழுப்பியவாறு மாபெரும் போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தின் இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரச அதிபரிடம் கையளித்தோம் என்று மன்னார் பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது.

இன்றைய போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் மதகுருமார்களும், அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர்.

மன்னார் தீவில் கை வைத்துள்ள அரசு நாளை கச்சத்தீவையும் தாரைவார்க்கலாம்!

மன்னார் தீவில் இன்று கை வைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நாளை கச்சத்தீவைக்கூட இந்தியாவுக்கு வழங்குவதற்கு முன்வரக்கூடும் என்று மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்படாது எனக் கூறியே தேசிய மக்கள் சக்தி ஆட்சிபீடமேறியது. ஆனால் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலே ஆட்சியாளர்களால் இங்கு அமுல்படுத்தப்பட்டுவருகின்றது.

இந்தியாவுடன் கடந்த ஏப்ரல் மாதம் ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அவை எவ்வாறான ஒப்பந்தங்கள் என்பது பற்றி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு இன்னும் பகிரங்கப்படுத்தவில்லை. இதற்கமைய மன்னார் தீவைக் கைப்பற்றுவதற்கு இந்தியா திட்டம் தீட்டியுள்ளது.

மன்னாரில் பாரிய சுற்றாடல் பாதிப்பு ஏற்படக்போகின்றது. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு தாக்கங்கள் ஏற்படப்போகின்றது. இவை பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. எதிரணியில் இருந்தபோது மன்னார் நிலைவரம் பற்றி கதைத்தனர். ஆட்சிக்கு வந்த பின்னர் அவற்றை மறந்துவிட்டனர். இன்று மன்னார் மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். மக்கள்மீதுகூட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதான் மறுமலர்ச்சியா?

இலங்கையின் கடல்வளத்தை இந்தியா கொள்ளையடிக்கின்றது. இதற்கு இலங்கை மீனவர்கள் நீதிகோரியபோதும் அரசாங்கம் மௌனம் காக்கின்றது.

கச்சத்தீவு விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. ஜனாதிபதி அண்மையில் கச்சத்தீவு சென்றிருந்தார். அதனை இந்தியாவுக்கு வழங்கமாட்டோம் எனக் கூறி இருந்தார். தான் கூறுவதற்கு எதிரானதையே ஜனாதிபதி செய்துவருகின்றார். எனவே, வழங்கமாட்டேன் எனக் கூறினாலும் கச்சத்தீவையும் வழங்கிவிடுவார்களோ என்ற அச்சம் எமக்கு உள்ளது. உள்ளக ரீதியில் பேச்சு நடக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. “- என்றார் வசந்த முதலிகே.

கம்பளை பகுதியில் இரு வீடுகளில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு: தம்பதியினர் குறித்து தீவிர விசாரணை!

 

ஐஸ் போதைப்பொருள் சகிதம் கைது செய்யப்பட்ட கம்பளை தம்பதியினர் தங்கியிருந்த மூன்று வீடுகளை சோதனையிட்ட பொலிஸார், ஐஸ் போதைப்பொருள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

கம்பளையில் இருந்து கினிகத்தேனைவரை ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினர் கடந்த 25 ஆம் திகதி நாவலப்பிட்டியவில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் நாவலப்பிட்டிய நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். கணவனுக்கு 7 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு பொலிஸாரால் பெற்றப்பட்டிருந்தது. ஐந்து மாத கர்ப்பிணியான மனைவி எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 22 வயதான கணவரை அழைத்துக்கொண்டு, அவர்கள் தங்கி இருந்த மூன்று வீடுகளை நேற்றும், இன்றும் பொலிஸார் சோதனைக்குட்படுத்தினர். இதன்போது இரு வீடகளில் இருந்து ஐஸ்போதைப்பொருள், உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கம்பளை, துனுகேஉல்ல வீதியில் உடகம – அங்கெலபிட்டிய பகுதியிலுள்ள வீடு, கம்பளை, தொலஸ்பாகை வீதியில் சிங்ஹாபிட்டிய பகுதியில் உள்ள வீடு என்பவற்றை சோதித்தபோதே ஐஸ் பக்கெட்டுகள் மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரான ஆண் இரு திருமணங்கள் செய்துள்ளார். முதல் மனைவிக்கு 15 மாத குழந்தையொன்று உள்ளது என தெரியவந்துள்ளது.

க.யோகா

அர்ச்சுனா எம்.பி. கைது!

 

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, கோட்டை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, கோட்டையில் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்பதற்கு அர்ச்சுனா எம்.பி. வருகை தந்திருந்தார்.

இதன்போது கடமையிலிருந்த போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு விளைவித்திருந்தார். தவறான வார்த்தை பிரயோகத்தையும் மேற்கொண்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை நீதமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டை அவமதிக்கிறது இந்திய அணி: பாக். தலைவர் குற்றச்சாட்டு!

கைகுலுக்க மறுத்து இந்திய அணி கிரிக்கெட்டை அவமதிக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது இந்திய அணி. இந்த தொடரில் மூன்றாவது முறையாக பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி உள்ளது.

அதே நேரத்தில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்த மூன்று போட்டியிலும் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்து விட்டனர்.

இதோடு வெற்றிக் கோப்பையை பாகிஸ்தான் அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மோசின் நக்வியிடம் இருந்து பெற முடியாது என இந்தியா தெரிவித்தது. இந்த சூழலில் இந்திய அணிக்கு கோப்பையை வழங்காமல் கையோடு அவர் கொண்டு சென்றார்.

இந்த தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடிய மூன்று போட்டியின் போதும் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா உடன் டாஸின் போது கைகுலுக்க மறுத்துவிட்டார். மேலும், இறுதிப் போட்டியில் இரு அணி கேப்டன்களின் போட்டோஷூட்டிலும் சூர்யகுமார் யாதவ் பங்கேற்கவில்லை. இந்நிலையில், சல்மான் அலி ஆகா இது தொடர்பாக பேசியுள்ளார்.

“இந்த தொடரில் நடந்தது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. எங்களுடன் கைகுலுக்க மறுத்ததன் மூலம் அவர்கள் எங்களை அவமதிப்பதாக எண்ணம் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் அவமதிப்பது கிரிக்கெட் விளையாட்டை. ஒரு சிறந்த அணி நிச்சயம் அவர்கள் செய்ததை செய்யாது.

அதே நேரத்தில் ஒரு சிறந்த அணி நாங்கள் செய்ததைதான் செய்திருக்கும். ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக நான் மட்டுமே போட்டோஷூட்டுக்கு சென்றேன், நாங்கள் பதக்கங்களை வாங்கிக் கொள்ளவும் களத்துக்கு சென்றோம்.

இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு மற்றும் ரெஃப்ரி உடனான சந்திப்பின் போது அவர் (சூர்யகுமார் யாதவ்) என்னுடன் கைகுலுக்கி இருந்தார். ஆனால், அதுவே பொதுவெளியில் செய்ய மறுக்கிறார். அந்த முடிவு அவருடையது என்றால் நிச்சயம் அவர் கைகுலுக்கி இருப்பார். ஆனால், தனக்கு கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் படி அவர் செயல்படுகிறார்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் மோசின் நக்விதான், வெற்றியாளர்களுக்கு ஆசிய கோப்பையை வழங்குவார். அவரிடமிருந்து அதை அவர்கள் பெற மறுத்தால், பின்னர் எப்படி கோப்பை கிடைக்கும்.

எங்கள் அணி வீரர்கள் அனைவரும் எங்களது போட்டி கட்டணத்தை இந்திய தாக்குதலால் பாதிக்கப்பட்ட எங்கள் நாட்டு மக்கள் மற்றும் சிறார்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம்” என சல்மான் அலி ஆகா தெரிவித்தார்.

மண்மேடு சரிந்து விழுந்து மூவர் பலி: மாவனல்லையில் சோகம்!

மாவனல்லை, அளுத்நுவர மாணிக்காவ பகுதியில் கட்டுமான பணியின்போது மண்மேடு சரிந்து விழுந்ததில் மூவர் பலியாகியுள்ளனர்.
இன்று முற்பகல் வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மண்மேடு சரிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதையுண்டனர். இதனையடுத்து மீட்பு நடவடிக்கை இடம்பெற்றது. கடும் போராட்டத்துக்கு மத்தியில் மூவரும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயார்!

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்து மாகாணசபைத் தேர்தலை எதிர்கொண்டால் முதல்வர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைந்து பயணிப்பதற்குரிய பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன. ஐதேக முகாம் ஓரணியில் திரள வேண்டும்.
ஐதேகவுக்கென 40 லட்சம் வாக்கு வங்கி உள்ளது. ஒன்றிணைப்பதற்குரிய முயற்சியிலேயே நான் ஈடுபட்டுவருகின்றேன்.

இரு தரப்புகளினதும் தனித்துவத்தை பாதுகாத்துக்கொள்ளலாம். உதாரணமாக மாகாணசபைத் தேர்தல் வந்தால் ஒரு தரப்பு சார்பில் பொதுபட்டியலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு நான் தயார். அவ்வாறு போட்டியிட்டால் என்னால் வெற்றிபெற முடியும். இணைவதற்கு இவ்வாறு பல வழிமுறைகள் உள்ளன.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் உட்பட கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த மனதுடன் தலைமைப்பதவியை எனக்கு வழங்கும் பட்சத்தில் அதனை ஏற்பதற்கு தயாராக இருக்கின்றேன்.” – என்றார் நவீன் திஸாநாயக்க.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

என்.பி.பி. ஆட்சியிலும் எந்த மாற்றமும் இல்லை!

0
"இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசுகள் இனவாதத்தையே மூலதனமாகக் கொண்டுள்ளன. " என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கிளிநொச்சி, சோரன்பற்று பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...

யூதர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரிட்டனிடம் இஸ்ரேல் வலியுறுத்து!

0
பிரித்தானியாவில் யூதர்களுக்கு எதிராகத் தொடர்ந்து அதிகரித்து வரும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. வெறும் கண்டனங்கள் மட்டும் போதாது என்றும்,...

ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சித்திரா பௌர்ணமி விழா

0
நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த சித்திரா பௌர்ணமி முத்தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பால்குட பவனி இன்று (30.04.2026) வியாழக்கிழமை காலை மிக விமரிசையாக நடைபெற்றது. இன்று காலை 9.00 மணியளவில் நுவரெலியா லேடி...