Home Blog Page 3959

அபிவிருத்திக்காக வாக்களியுங்கள்! முத்தையா பிரபு

இம்முறை எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பதால் எவ்வித பயனும் இல்லை என்றும் அடுத்து ஐந்து வருடம் ஆட்சியில் இருப்பவர்களுக்கு வாக்களிப்பது மட்டுமே நுவரெலியா மக்களுக்கு அபிவிருத்தியை கொண்டுவர வழி ஏற்படுத்தும் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த பிரபு,
இதுவரை இந்த மாவட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் இருந்தார். ஆனால் விளையாட்டுத் துறைக்கு ஒன்றையும் செய்யவில்லை. கல்வி அமைச்சர் இருந்தார். கல்வியின் தரமும், பாடசாலைகளும் அப்படியே இருக்கின்றன. தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் இருந்தார். லயன்கள் இன்னமும் இன்னமும் அப்படியே இருக்கின்றன. 50 ரூபா சம்பளத்தைக் கூட இவர்களினால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை.

அடுத்த ஐந்து வருடங்களும் ஜனாதிபதி, பிரதமர் கீழே ஆட்சித் தொடரப் போகிறது. எனவே, ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு வாக்களிப்பதன் மூலமே மக்களுக்கான அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரையில் இடைத் தரகர்கள் யாரும் இல்லை. நான் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் நேரடியாக பேசுவேன். என்னை களமிறக்கியது அவர்களே. அதனால் மக்கள் எதற்காக வாக்களிக்கிறார்களே அந்தத் தேவையை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

எதிர்க்கட்சிக்கு வாக்களித்து, உங்களின் வாக்குகளைக் குப்பையில் போட்டுவிடாதீர்கள். மொட்டுச் சின்னத்திற்கு மலையக மக்கள் இம்முறை வாக்களிக்க வேண்டும். எனது சொந்த செலவில் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைக்க முயற்சித்தேன். அதற்கும் தடை ஏற்படுத்தினார்கள். எனவே அபிவிருத்தி செய்யக்கூட அதிகாரம் தேவைப்படுகிறது. அந்த அதிகாரத்தையும், அங்கீகாரத்தையும் தர வேண்டும் என மக்களிடம் உரிமையாக கேட்டுக் கொள்கிறேன். மக்கள் அங்கீகாரத்தைத் தந்தபின்னர், நுவரெலியாவிற்கான அபிவிருத்தி நான் நேரடியாக எடுத்து வருவேன் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.” என்று முத்தையா பிரபு மேலும் தெரிவித்தார்.

அன்று 13 பிளஸ் என கூறிய மஹிந்த இன்று அதிகாரப் பகிர்வை எதிர்ப்பது ஏன்?

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாகும். தீர்வு விடயத்தில் இதற்கு அப்பால் செல்லமாட்டோம் – என்று முன்னாள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

13 பிளஸ் என அன்று கூறிய மஹிந்த ராஜபக்ச, இன்று வாக்குகளுக்காக அதிகாரப்பகிர்வு தொடர்பில் வீண் அச்சத்தை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்திவருகின்றார் எனவும் கிரியல்ல குற்றஞ்சாட்டினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவால்  விசேட அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டின் அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதே எமது நோக்கமாகும். இதுவே தீர்வு திட்டத்துக்கான எமது உறுதிமொழியாகவும் இருக்கின்றது. அதிகாரப்பகிர்வை நாம் ஏற்கின்றோம் – அனுமதிக்கின்றோம்.

குறிப்பாக 13 ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள அதிகாரங்கள் போதாது, அதற்கு அப்பால் (13 பிளஸ்) செல்லவேண்டும் என்று மஹிந்த ராஜபக்ச அன்று கருத்து வெளியிட்டிருந்தார். நாம் 13 பிளஸ் பற்றி பேசவில்லை. 13 இல் உள்ள அதிகாரங்கள் முழுமையாக பகிரப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தோம். வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்ல ஏனைய மாகாணங்களுக்கும் இந்த அதிகாரப்பகிர்வு கோட்பாடு பொருந்தும்.

தேர்தல் தொடர்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்புமூலம் ஆளுங்கட்சிக்கு சாதாரணப்பெரும்பான்மைக்கூட கிடைக்காது (113) என்பது உறுதியாகியுள்ளது. எனவே, ஐக்கிய மக்கள் சக்தியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைத்துவிடும் என ஆளுந்தரப்பு அஞ்சுகின்றது.

இந்த பயம்காரணமாகவே இனவாதம் பேசி வாக்குகளை அதிகரித்துக்கொள்வதற்காக சஜித் பக்கமே இனவாதிகள் உள்ளனர் என பரப்புரை முன்னெடுக்கப்படுகின்றது.” – என்றார்.

‘உலகளவில் 1 கோடியே 17 லட்சம் பேருக்கு கொரோனா பரவியது’

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 5 லட்சத்து 41 ஆயிரத்து 748 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 41 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 17 லட்சத்து 79 ஆயிரத்து 836 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 44 லட்சத்து 62 ஆயிரத்து  743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவில் இருந்து 67 லட்சத்து 75 ஆயிரத்துக்கு அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மலையக பல்கலைக்கழகம் எப்போது அமையும்?

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் முதலாவது சிரார்த்த தினத்தன்று மலையகத்துக்கான பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும் என்று இ.தொ.காவின் உப தலைவரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.

இறம்பொடையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” கடந்த காலங்களில் பட்டம் இருக்கிறதா, உயர்தரம் சித்தியடைந்துள்ளீர்களா, பட்டப்பின் படிப்பு என்றெல்லாம் கேள்விகேட்டே  வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. ஆனால், இன்று சாதாரணதரப்பரீட்சையை பூர்த்திசெய்யமுடியாத ஒரு லட்சம் பேருக்கு அரச துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, நியமனங்களை வழங்க ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

கடந்த ஆட்சியில் வேலை எவ்வாறு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது? குருணாகலை பகுதியில் தேங்காய் பறித்துக்கொண்டிருந்தவர்களை, இங்கே கொண்டுவந்து பாடசாலைகளில் உதவியாளர்களாகவும், காவலாகிளாகவும் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். நமது பகுதி புறக்கணிக்கப்பட்டிருந்தது. கல்வி இராஜாங்க அமைச்சர் இருந்தும் என்ன பயன்? ” எனவும் அவர் குறிப்பிட்டார்.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்.

தேர்தல் சட்டத்தைமீறிய அறுவர் பதுளையில் கைது!

பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடும்  சுயேச்சைக் குழுவொன்றின் ஆதரவாளர்கள் ஆறு பேர் தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில்,கொஸ்லந்தை பொலிஸாரால் இன்று (07-07-2020) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கைதானவர்கள் பயணித்த வேன் ஒன்றையும், 346 பிரச்சார போஸ்டர்கள், பிரச்சார கையேடுகள் 253 ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி  நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்ட சுயேச்சைக் குழுவினரை ஆதரவிக்கும் வகையிலேயே மேற்படி பிரச்சார போஸ்டர்கள், பிரச்சாரக் கையேடுகள் மீட்கப்பட்டனவென்பதும் குறிப்பிடத்தக்கது.

கைதுசெய்யப்பட்டவர்கள் ஆறுபேர் மீது,தேர்தல் சட்டவிதிகள் மீறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இவர்கள் விசாரணைகளின் பின்னர்,பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று,கொஸ்லந்தைபொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரட்ணசிரி பண்டார தெரிவித்தார்.

எம். செல்வராஜா, பதுளை

அக்கரப்பத்தனையில் குளவிக்கொட்டு – 35 பேர் பாதிப்பு!

அக்கரப்பத்தனை பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் 35 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஊட்டுவள்ள பிளேமோர் பிரிவில், தேயிலை மலை இலக்கம் 8, மலை இலக்கம் 3 ஆகியவற்றில்  கொழுந்து பறித்து கொண்டிருந்தவர்கள்மீது கலைந்துவந்த குளவிகள் சரமாரியாகக் கொண்டியுள்ளன.

குளவி தாக்குதலுக்கு இலக்காகி பாதிக்கப்பட்ட 30 பெண் தொழிலாளர்களும், 05 ஆண் தொழிலாளர்களுமே அக்கரபத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் குளவிக்கொட்டு சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நால்வர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்காணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

அனைத்து தமிழ் எம்.பிக்களையும் உள்ளடக்கிய கூட்டணி தேவை – ராதா யோசனை

” பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும் அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து தமிழ் பாராளுமன்ற அல்லது சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பொன்றை உருவாக்கவேண்டும். அதன் மூலம் இந்த நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளையும் அபிவிருத்திகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு அழுத்தம் கொடுக்கமுடியும்.”

இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கந்தப்பளையில் நடைபெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மையின மக்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டால் மாத்திரமே எங்களுடைய உரிமைகளையும் அபிவிருத்தியையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.அதே போல ஏனைய சமூகங்களை போல இந்த நாட்டில் சமமான அந்தஸ்தை பெற்று வாழ முடியும்.

பாராளுமன்ற தேர்தலின் பின்பு வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட அனைத்து பகுதிகளையும் இனைத்துக் கொண்டு சிறுபான்மை கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.அது கட்சி பேதங்களை மறந்து ஒன்றுபட வேண்டும்.

இன்று அநேகமான சிறுபான்மை வேடபாளர்கள் ஒரு சில தேசிய கட்சியில் இணைந்து போட்டியிடுகின்றார்கள். ஒரு சிலர் தனித்து போட்டியிடுகின்றார்கள்.ஒரு சிலர் சுயேட்சையாக போட்டியிடுகின்றார்கள். ஒரு சில தமிழ் வேட்பாளர்கள் பெரும்பான்மையினரின் முகவர்களாக செயற்படுகின்றார்கள்.முகவர்களாக செயற்படுகின்றவர்கள் தங்களுடைய தனிப்பட்ட இலாபத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு செயற்படுகின்றார்கள்.

முகவர்களாக செயற்படுகின்றவர்கள் நிச்சயமாக வெற்றி பெற முடியாது.ஆனாலும் அவர்கள் முகவர்கள் என்ற அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சில வாக்குகளை பெற்றுக் கொள்வதன் மூலமாக தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்து பெரும்பான்மை பிரதிநிதிகள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கின்றார்கள்.

இந்த நிலைமை நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகமாக காணப்படுகின்றது.கடந்த காலங்களின் ஒரு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கூட போட்டியிட்டு வெற்றி பெற முடியாத சிறுபான்மை உறுப்பினர்கள் போட்டியிடுகின்றார்கள்.இதற்கு காரணம் என்ன?தோல்வியடைவோம் என்று தெரிந்து கொண்டே போட்டியிடுவதன் நோக்கம் என்ன?அதற்கு காரணம் பெரும்பான்மை கட்சிகளிடம் ஒரு தொகை பணத்தை பெற்றுக் கொண்டு பெரும்பான்மை பிரதிநிதிகளை வெற்றி பெற செய்வதற்காகவே இவ்வாறு செயற்படுகின்றார்கள்.

எனவே இவ்வாறான ஒரு நிலையில் சிறுபான்மை மக்கள் சிந்தித்து வாக்களித்து எங்களுடைய வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.அப்படி வெற்றி பெறுகின்றவர்கள் ஒரு சிறுபான்மை பாராளுமன்ற கூட்டணியை ஆரம்பித்து அதன் மூலமாக எங்களுடைய மக்களுக்கு உரிமைகளையும் அபிவிருத்தியையும் பெற்றுக் கொடுக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 38 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 38 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 955 ஆக அதிகரித்துள்ளது.

112 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 11 பேர் உயிரிழந்தனர்.

செந்தில் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி – உறுதிப்படுத்தினார் நிமல்

” பொதுத்தேர்தலின் பின்னர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அமையும் எமது அரசாங்கத்தில் சிறுபான்மையின மக்களின் பிரதிநிதியான செந்தில் தொண்டமானுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தை பசறையில் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

” பதுளையில் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் எமது அரசாங்கத்தில் இருக்க வேண்டும். எம்முடன் இருக்கும் ஒரேயொரு பிரதிநிதி செந்தில் தொண்டமான். பதுளை மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கு செந்தில் தொண்டமான் பாரிய சேவையாற்றி வருகிறார். எமது மக்களையும் அரவணைத்துக்கொண்டே பயணிக்கின்றார். அவருக்கு எமது அரசாங்கத்தில் சக்தி வாய்ந்த அமைச்சரவை அமைச்சு பதவியொன்று வழங்கப்படும்.” என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான சச்சிந்திர ராஜபக்சவும் கலந்துகொண்டார்.

– பதுளை செய்தியாளர்-

ஜீவனின் அழைப்பையேற்று மீண்டும் தாய்க்கட்சி திரும்பும் ஆதரவாளர்கள்!

அடிமட்ட தொண்டர்களுக்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் கதவு திறந்தே உள்ளது என பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள அறிவிப்பையடுத்து, காங்கிரஸ் என்ற தாய்க்கட்சிக்குள் மீண்டும் வருவதற்கு பலரும், தோட்டத் தலைவர்களிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப்பீடத்துக்கும், அடிமட்ட தொண்டர்களுக்குமிடையிலான உறவு கட்டியெழுப்பப்படாததாலேயே கடந்த காலங்களில் கடும் அதிருப்தியில் ஆதரவாளர்கள் சிலர் காங்கிரஸை விட்டுவெளியேறினர். தலைவரை நேரில் சந்திக்க முடியவில்லையே என்ற ஆதங்கள் அவர்களுக்குள் இருந்தது. மற்றும்படி சலுகைகளுக்காக அவர்கள் வெளியேறவில்லை.

” தலைவரை சூழ இருந்த சிலரே மக்களுக்கும் அவருக்குமிடையிலான உறவை துண்டித்ததுடன், தேசிய தலைவரை ஒரு மாவட்டத்துக்குள்ளேயே முடக்கினர்.” என்று பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார். இளைஞர் அணி பொதுச்செயலாளராக அவர் பதவியேற்றப்பின்னர் இந்நிலைமையை மாற்றியமைக்க ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையிலேயே தற்போது எங்கு தவறு இடம்பெற்றுள்ளது என்பதை பகிரங்கமாக சுட்டிக்காட்டி, அடிமட்ட தொண்டர்களுக்காக காங்கிரஸ் கதவு திறந்தே உள்ளது என்ற அறிவிப்பை பெருந்தன்மையோடு பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ளார்.

ஜீவன் தொண்டமானின் அண்மைக்கால அரசியல் அணுகுமுறைகளால் மகிழ்வுற்றுள்ள மக்கள் அவருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துவிட்டனர்.

அத்துடன், காங்கிரஸில் இருந்து சென்ற மக்களும் மீண்டும் இணைவதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர். தோட்டத் தலைவர்கள் ஊடாக பொதுச்செயலாளருக்கு இது விடயம் தொடர்பில் தூது அனுப்பியுள்ளனர்.

மக்களால் வழங்கப்பட்ட மேற்படி தகவலை தோட்டத் தலைவர்கள், பொதுச்செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர். இதன்படி தோட்டவாரியாக நடைபெறும் கூட்டங்களின்போது அவர்கள், பொதுச்செயலாளரை நேரில் சந்தித்து ஆதரவை வெளிப்படுத்தவுள்ளனர்.

அதேவேளை, காங்கிரஸின் இருந்து – வளர்ந்து – முதுகில்குத்திவிட்டு வெளியேறிய அரசியல்வாதிகளுக்கு கட்சிக்குள் மீண்டும் இடமில்லை என பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விரைவில் அமைதி நிலவ வேண்டும் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு”

0
இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் (Council of Arab Ambassadors) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. போர்ச் சூழலால் மத்திய...

பேரிடரால் பாதிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தைத் துரிதப்படுத்துமாறு பிரதமர் பணிப்புரை

0
  "Rebuilding Sri Lanka" ஜனாதிபதி செயலணி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று (07) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில், "Rebuilding Sri Lanka" திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும்...

இது ஒரு மகத்தான நாள்: பொற்காலம் பிறக்கும்!

0
இரண்டு வார கால போர் நிறுத்தத்துக்கு ஈரானும் அமெரிக்காவும் சம்மதித்துள்ள நிலையில், சர்வதேச அமைதிக்கு இது ஒரு மகத்தான நாள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...