Home Blog Page 3960

8 எம்.பிக்கள், ஒரு தேசியப்பட்டியல் – ராதா நம்பிக்கை

தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு 9 உறுப்பினர்கள் தெரிவாகும்வகையில் வாக்களித்து, முற்போக்கு கூட்டணியை மலையக மக்கள் இம்முறையும் பலப்படுத்த வேண்டும் என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான முன்னாள் அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொத்மலையில் இன்று (27) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.

இலங்கையில்  அதிக  தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்ட கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது. சுமார் 14, 15 உறுப்பினர்கள் தெரிவாவார்கள். கூட்டமைப்புக்கு அடுத்தப்படியாக அதிக தமிழ் உறுப்பினர்களைக்கொண்ட கட்சி தமிழ் முற்போக்கு கூட்டணியாகும்.

இம்முறை எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுக்கும் நோக்கில் தேர்தலில் போட்டியிடுகின்றோம். இவ்வாறு எட்டுபேர் தெரிவானால் ஒரு தேசியப்பட்டியலும் கிடைக்கும். அப்போது முற்போக்கு கூட்டணியின் சார்பில் 9 பேர் பாராளுமன்றம் சென்றுவிடலாம்.பெரிய கட்சி என்ற அந்தஸ்த்தும் கிடைக்கும். எனவே, தமிழ் முற்போக்கு கூட்டணியை மலையக மக்கள் பலப்படுத்தவேண்டும்.

சஜித் பிரேமதாசவை எதற்காக ஆதரிக்கின்றோம் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சில விடயங்களை குறிப்பிடுகின்றேன். மலையக மக்களுக்கு ரணசிங்க பிரேமதாசவே வாக்குரிமை வழங்கினார். ஜனவசிய திட்டத்தை அமுல்படுத்தினார். பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை, கம்முதாவ திட்டம் என மக்களுக்காக பல சேவைகளை செய்துள்ளார். இதன்காரணமாகவே அவரின் மகனான சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றோம். அவரும் சிறப்பாக செயற்படக்கூடியவர்.

ரணசிங்க பிரேமதாசதான் ஆயுதம் வழங்கினார் என கருணா இன்று கூறுகிறார். அதனைவிடவும் அவர் மக்களுக்கு சேவைகளை செய்துள்ளார் என்பதை கூறிக்கொள்கின்றேன். நுவரெலியா மாவட்ட மக்கள் தொலைபேசி சின்னத்துக்கும் எமது கூட்டணியில் போட்டியிடும் மூவருக்குமே வாக்களிக்கவேண்டும்.

ஆயிரம் ரூபாவில் அரசியல் நாடகமா? பொங்கியெழுந்து பதிலடி கொடுத்தார் ஜீவன்

ஆயிரம் ரூபாவை வைத்து அரசியல் நாடகம் நடத்தவேண்டிய தேவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு கிடையாது என்று அதன் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன், சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியத்தையும், ஆறுமுகன் தொண்டமானின் வீரத்தையும் பின்பற்றியதாக எனது அணுகுமுறை அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனையில் 28.06.2020 அன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது மக்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கு கம்பனிகள் இணங்கியுள்ளன. ஆனால், கூடுதலாக இரண்டு கிலோ கொழுந்தும், இறப்பர் தோட்டங்களில் மேலதிகமாக ஒரு கிலோவும் எடுக்கப்படவேண்டும் என கூறுகின்றனர். இதற்கு நாம் உடன்பட முடியாது. அந்த கோரிக்கையை ஏற்றால் அப்பா என்னை மன்னிக்கமாட்டார். கம்பனிகள் வெள்ளையர் காலத்தில் போல் தான் தற்போது செயற்படமுற்படுகின்றன. இதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பேச்சுவார்த்தை என்பது தேர்தல் நாடகம் என்று சிலரால் விமர்சிக்கப்படுகின்றது. சம்பளத்தை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்யவேண்டிய தேவை இ.தொ.காவுக்கு கிடையாது. ஏனெனில் மக்கள் எம்பக்கமே உள்ளனர்.

அப்பா இறந்த பின்னர் சில தோட்டங்களில் துரைமார் ஆட ஆரம்பித்துள்ளனர். நாம் தற்போது அமைதியாக இருக்கின்றோம். இந்நிலையில் ஆறுமுகன் தொண்டமானின் மறைவின் பின்னர் ஏன் இந்த அமைதி என சிலர் கேட்கின்றனர்.  பொறுமைக்கும், அமைதிக்குமிடையில் வித்தியாசம் உள்ளது. நாம் பொறுமையாகவே இருக்கின்றோம். அதனை பலவீனமாகக்கருதவேண்டாம்.

மக்கள் எனக்கு தேர்தல்மூலம் அதிகாரத்தை வழங்கிய பின்னர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியத்துடனும், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வீரத்துடனும் அத்தனை பேரையும் நடுங்கவைப்பேன். ஆறுமுகன் தொண்டமான் போய்விட்டார், இ.தொ.காவின் கதை முடிந்துவிட்டது என சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். யார் எதனை வேண்டுமானாலும் நினைத்துவிட்டுபோகட்டும். மக்களுக்காக எப்போதும் காங்கிரஸ் செயற்படும்.

கடந்தகாலங்களில் கட்சி அடிப்படையிலேயே வீடுகள் பகிரப்பட்டன. கிராமங்களை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது திட்டமாகும். இளைஞர்களின் வேலையிண்மை பிரச்சினையை தீர்க்கவேண்டும். அதற்கான திட்டங்கள் எம்மிடம் உள்ளன. மலையக பல்கலைக்கழகம் வந்த பின்னர், ஹோட்டல் முகாமைத்துவ கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படும். அதன்பின்னர் சுற்றுலாத்துறையில் கூடுதல் வேலைகளைப்பெறலாம்.” – என்றார்.

21 ஆம் நூற்றாண்டில் பெறுமதிவாய்ந்த வீரர்

21 ஆம் நூற்றாண்டுக்கான மிகவும் பெறுமதிவாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக முத்தையா முரளிதரன் பெயரிடப்பட்டுள்ளார்.

விஸ்டன் என்ற மாதாந்த வியயாட்டு சஞ்சிகையே இத்தேர்வை அறிவித்துள்ளது.

உலகில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முத்தையா முரளிதரனே அதிககூடிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலகசாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

104 நாட்களுக்கு பின்னர் நாளை திறக்கப்படுகின்றன பாடசாலைகள்

கொரோனா வைரஸ் பரவலையடுத்து மூடப்பட்ட பாடசாலைகள் நாளை 29 ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளன. அதன்பின்னர் நான்கு கட்டங்களின்கீழ் கல்வி நடவடிக்கை ஆரம்பமாகும்.

இதன்படி நாளை (29) அதிபர், ஆசிரியர்கள் உட்பட பாடசாலை நிர்வாகத்தினர் மாத்திரமே சமூகமளிக்க வேண்டும். மாணவர்கள் பாடசாலை செல்லவேண்டியதில்லை.

இரண்டாம் கட்டாக  ஜுலை 6 ஆம் திகதி  5,11 மற்றும் 13 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை ஆரம்பமாகும்.

ஜுலை 20 ஆம் திகதி முதல் மூன்றாம் கட்ட நடவடிக்கை ஆரம்பமாகும். 10, 12 ஆம் ஆண்டுகளில் கல்வி பயிலும் மாணவர்கள் அன்று பாடசாலைக்கு வருகைதரமுடியும்.

ஜுலை 27 ஆம் திகதி நான்காம் கட்டமாக 3,4,6,7,8 மற்றும் 9 ஆம் ஆண்டு மாணவர்களை பாடசாலைக்கு அழைத்தவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கட்சி தாவியவர்களுக்கு இ.தொ.காவில் இடமில்லை – ரமேஷ் திட்டவட்டம்

இலங்கைத்  தொழிலாளர் காங்கிரசுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் ஏனைய தமிழக்கட்சிகளுக்குமிடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. காங்கிரஸ் ஐந்து வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளது. எனவே, போலி வேட்பாளர்களின் பிரச்சாரங்களை மக்கள் நம்பக்கூடாது.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொருளாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

கொத்மலையில் 28.06.2020 அன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் தொடர்பிருக்கின்றது. எனவே, எதிர்காலத்தில் இணைவோம் எனக்கூறி சிலர் மக்களிடம் வாக்குகேட்கின்றனர். மேலும் சிலர் இரண்டு வாக்குகளை எங்களுக்கு தாருங்கள் என கெஞ்சுகின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் தொழிற்சங்கங்களுடன் காங்கிரசுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. கட்சியைவிட்டு வெளியேறியவர்களை தற்போது இணைத்துக்கொள்ளும் எண்ணமும் இல்லை.

பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், நான் உட்பட ஐந்து வேட்பாளர்களே காங்கிரஸின் சார்பில் போட்டியிடுகின்றோம். ஐவரையும் மக்கள் வெற்றிபெறவைப்பதுடன், போலி பிரச்சாரம் முன்னெடுக்கும் வேட்பாளர்களுக்கும் சிறந்தபதிலை வழங்குவார்கள். எனவே, மக்கள் மத்தியில் அவர்களின் போலிப்பிரச்சாரம் எடுபடாது.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர்தான் ஆயிரம் ரூபா கோரிக்கையை முன்வைத்தோம். ஐக்கிய தேசியக்கட்சியே அதனை தடுத்து நிறுத்தியது. இந்த அரசாங்கத்தின்கீழ் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. நாளை கையொப்பமிட்டால்கூட ஆயிரம் ரூபா கிடைத்துவிடும். ஆனால், நாம் அவசரப்படமாட்டோம்.

ஏனெனில் மேலதிகமாக இரண்டு கிலோ கொழுந்தையும், இறப்பரையும் கோருகின்றனர். அந்த கோரிக்கையை நாம் ஏற்கவில்லை. மக்களுக்கு எவ்வித சுமையும் அதிகரிக்காத வகையில் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம். அதற்காகவே நிதானமாக செயற்பட்டுவருகின்றோம். கூடியவிரைவில் ஆயிரம் ரூபா கிடைக்கும்.

காங்கிரஸின் பலம் நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றது. வெளி மாகாணங்களில் உள்ள இளைஞர்கள் இணைகின்றனர். ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பின்னர் எமது பலம் அனைவருக்கும் தெரியவரும்.” – என்றார்.

க.கிசாந்தன்

மண்வெட்டியை மறைத்து சரணாகதி அரசியல் நடத்துபவர்களுக்கு பாடம் புகட்டுவோம்’

அபிவிருத்தி என்னும் பெயரில் எம் மக்களின் தனித்துவத்தை அழித்ததுடன் மண்வெட்டியை ஒளித்து வைத்து இன்னொரு கட்சியில் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு கோடரியின் மூலம் தக்க பாடம் புகட்டுவோம்.” – என்று அனுசா சந்திரசேகரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் கோடரி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரும், மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமும், சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் இன்று வட்டவளை பகுதியில் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தீ விபத்து – சம்பவ இடத்துக்கு விரைந்து ஜீவன் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கை

மஸ்கெலியா, லெங்கா தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பில் இன்றிரவு (27.06.2020) ஏற்பட்ட தீ விபத்தால் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.

ஒரு வீடு முழுமையாகவும், மற்றுமொரு வீடு பகுதியளவும் சேதமடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின் ஒழுக்கு காரணமாகவே தீப்பரவலம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், அனர்த்தத்தின்போது வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றிருந்ததாகவும் கூறினர்.

இது தொடர்பில் கேள்வியுற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தார்.

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களை பாதுகாப்பான இடமொன்றில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ததுடன், அவர்களுக்கு 14 நாட்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களை தனது சொந்த நிதியில் வழங்கியுள்ளார்.

அத்துடன், குறித்த லயன் குடியிருப்பு தொகுதியில் மின்ஒழுக்கு இருந்தால் விரைவில் அதனை சீர்செய்யுமாறு தோட்ட முகாமைத்துவ அதிகாரிகளிடம் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

க.கிசாந்தன்

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

இறுதி எச்சரிக்கை! ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்தார் ட்ரம்ப்!!

0
ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்க ஈரானுக்கு 48 மணிநேரக் கெடு விதித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் கடுமையான இராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என அவர்...

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது 10 ஆம் திகதி வாக்கெடுப்பு!

0
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் 10 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா பொதுஜன...

“Battle of Little England” கிண்ணம் – காமினி தேசிய பாடசாலைக்கு வெற்றி!

0
பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணியும் காமினி தேசிய பாடசாலை அணியும் இணைந்து இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் நான்காவது முறையாக நடத்திய “Battle of Little England” கிண்ணப் போட்டி, நுவரெலியா...