Home Blog Page 3976

அனைத்து மதுபானங்களினதும் தரம் குறைந்துள்ளதாக மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவிப்பு

நாட்டில் பிரதானமாக மதுபான தயாரிப்பில் ஈடுபடும் பெரும்பாலானவர்களினால் தயாரிக்கப்பட்டு மதுபானசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் மதுபானங்களை உட்கொண்ட பாவனையாளர்கள் பெரும்பாலானோர் பல்வேறு ஒவ்வாமை மற்றும் அசெகரியங்களுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் முன்னணி மதுபான தயாரிப்பு நிறுவனமொன்றின் அதிகாரி ஒருவர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் மதுபானசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்ட பெரும்பாலான மதுபானங்களின் தரம் மற்றும் சுவை குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, அந்த மதுபானங்களை உட்கொண்ட பலருக்கு தொண்டை வலி, தலை வலி மற்றும் அசாதாரண வாந்தி போன்ற பிரச்சினைகள் காணப்படுவதாக அந்த பத்திரிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள முன்னணி மதுபான நிறுவனத்தின் அதிகாரி மேலும் தெரிவிக்கையில், உள்ளுர் தயாரிப்பின்போது எத்தினோல் மூலப்பொருட்களினால் மதுபானம் தயாரிக்கப்படுகின்றமையே இதற்கு பிரதான காரணமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார். எத்தினோல் என்ற மூலப்பொருளை இறக்குமதி செய்வதற்கு அதிக செலவு ஏற்படுவதன் காரணமாக கடந்த ஜனவரி முதல் எத்தினோலை இறக்குமதி செய்ய அரசாங்கம் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, பெலவத்த மற்றும் செவனகல சீனி உற்பத்தி ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் எத்தினோல் பயன்படுத்தப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளதுடன், விநியோக நடவடிக்கைகள் இலங்கை கலால் திணைக்களத்தின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கலால் ஆணையர் மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு எழுதிய கடிதத்தில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

WWE பிரபலம் அண்டர்டேக்கர் ஓய்வு

WWE எனப்படும் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்று உலகப்புகழ் பெற்ற ‘தி அண்டர்டேக்கர்’ தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

’’ரிங்கிற்குள் திரும்பி வர விருப்பமில்லை’’ என தி அண்டர்டேக்கர் கூறியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை பற்றி புகழ்ந்து வருகின்றனர்.

மார்க் காலவே என்ற நிஜப்பெயரை கொண்ட 55 வயதான தி அண்டர்டேக்கர், சமீபத்தில் வெளியான ஒரு ஆவணப்படத்தில் தனது ஓய்வு குறித்து தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த 30 ஆண்டுகளாக WWE போட்டியில் பங்கேற்றுள்ளார். ’தி டெட்மேன்’ என்ற பட்டப்பெயரைக் கொண்ட இவரின் வாழ்க்கை வரலாறு குறித்து, ‘தி லாஸ்ட் ரைட்’ எனும் ஆவணப்படம் சமீபத்தில் வெளியானது.

சமீபத்தில் தனக்கும், ஏ.ஜே ஸ்டைல்ஸுக்கு இடையே நடந்த WWE போட்டி குறித்தும் தி அண்டர்டேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த போட்டியின் முடிவில் ஏ.ஜே ஸ்டைல்ஸை புதைத்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் தி அண்டர்டேக்கர் கிளம்பிச் செல்வார்.

‘’அது ஒரு மிகச்சிறப்பான தருணம். ஒருவர் ஓய்வு பெறும்போது முழு திருப்தி கிடைக்க வேண்டும் என்றால், இதுபோன்றதொரு தருணம் கிடைக்க வேண்டும்’’ என்கிறார் அவர்.

’’நான் ரிங்கிற்கு வெளியேதான் நிறைய நல்ல விஷயங்களைச் செய்துள்ளோன். அதை தொடர்ந்து செய்யும் இடத்திற்கு நான் இறுதியாக வந்துள்ளேன்’’ என கூறியுள்ளார் தி அண்டர்டேக்கர்.

கடைசி WWE போட்டியில் எதிராளியை புதைத்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் தி அண்டர்டேக்கர் கிளம்பிச் செல்வார்
கடைசியாக ஒரே ஒரு முறை போட்டியில் கலந்துகொள்வது குறித்து யோசித்து வருவதாகவும், ஆனால், அதற்கு காலம்தான் பதில் செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்டர் டேக்கர் 3 முறை Heavy weight Champion, 6 முறை Tag Team Champion மற்றும் ராயல் ரம்புள் உள்ளிட்ட போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

1987-ம் ஆண்டு உலகத்தர சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் கலந்துகொண்டு தனது மல்யுத்த வாழ்க்கையை தி அண்டர்டேக்கர் துவங்கினார். பின்னர் 1990களில் இருந்து WWE போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

ஒரு கோடி பேருக்கு கொரோனா பரவியது – 5 லட்சம்பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது. தற்போது உலகில் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 82 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 54 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு 5 லட்சத்து ஆயிரத்து 309 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 55 லட்சம்பேர் மீண்டனர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது. தற்போது உலகில் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 2 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 55 லட்சத்து 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு 5 லட்சத்து 4 ஆயிரத்து 490 பேர் உயிரிழந்துள்ளனர்.

மலையக மக்களை பாதுகாப்பேன் – திகாம்பரம் சூளுரை

” திகாம்பரம் இருக்கும்மட்டம் மலையக மக்களை எவரும் சீண்டமுடியாது. கடந்த நான்கரை வருடங்களில் எவரும் சீண்டவும் இல்லை. சேவைகளை செய்துகாட்டிவிட்டே வாக்கு கேட்டுவந்துள்ளேன். மக்கள் உணர்வுப்பூர்வமாக வாக்களிப்பார்கள் என்பது உறுதி.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கொத்மலையில் இன்று (28) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.

” நான் அமைச்சரான பின்னர் நான்கரை வருடங்களில் எவ்வாறான சேவைகளை முன்னெடுத்துள்ளேன் என்பது மக்களுக்கு தெரியும். மலையக மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் சேவைகள் செய்துள்ளோம்.

ஆனால் தேர்தல் காலத்தில் கண்டியில் இருந்து பரசூட் அரசியல்வாதிகள் இங்குவந்துள்ளனர். மக்கள் மத்தியில் பொய்யுரைத்து வாக்குகளை பிரிப்பதற்கு முயற்சிக்கின்றனர். நாம் இங்கேதான் பிறந்தோம். இந்த மண்ணில்தான் வாழ்கின்றோம். வென்றாலும்இ தோற்றாலும் இங்கிருந்து வெளியில் செல்லமாட்டோம்.

ஏற்கனவே ஒருவர் வந்தார். தேர்தலில் நின்றார். வென்றதும் ஓடிவிட்டார். ஆனால், எமது இளைஞர்கள் விழித்துக்கொண்டனர். அத்தகைய வேட்பாளர்களுக்கு இம்முறை தோல்வி உறுதி. சுமார் 15 ஆயிரத்துக்கும் மேல் வீடுகளை கட்டினேன். 8 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுவந்தன. ஆட்சிமாற்றத்தின் பின்னர் நிதி நிறுத்தப்பட்டது. ஆனால், கண்தெரியாத சிலர் 2 ஆயிரம் வீடுகள்தான் கட்டப்பட்டுள்ளன என கூறுகின்றனர்.

ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் வீடமைப்புத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம். வேலைகளை செய்துவிட்டுவந்துதான் நாம் வாக்கு கேட்கின்றோம். மக்களாகிய நீங்கள் யாருக்கும் பயப்படவேண்டாம். நான் இருக்கின்றேன்.

தோட்டதுரைமார் மதிக்கமாட்டார்கள், பொலிஸார் அடிப்பார்கள் என சிலர் இன்று கருத்து வெளியிடுகின்றனர். அதற்கு நான் இடமளிக்கமாட்டேன். கடந்த நான்கரை வருடங்களில் எமது மக்களை எவரும் சீண்டுவதற்கு இடமளிக்கவில்லை என்பதை கூறிக்கொள்கின்றேன்.

எமது மக்களுக்கு 50 ரூபாவை எடுத்துக்கொடுப்பதற்கு முயற்சித்தேன். துரோகி நவீன் அதற்கு இடமளிக்கவில்லை. எமது மக்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். விலைபோகமாட்டார்கள். நுவரெலியாவில் 5 பிரதிநிதித்துவத்தை கடந்தமுறை வென்றெடுத்தனர். இம்முறையும் எமக்கு அமோக ஆதரவை வழங்குவார்கள். போலி வேட்பாளர்களை நம்பவேண்டாம்.” – என்றார்.

8 எம்.பிக்கள், ஒரு தேசியப்பட்டியல் – ராதா நம்பிக்கை

தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு 9 உறுப்பினர்கள் தெரிவாகும்வகையில் வாக்களித்து, முற்போக்கு கூட்டணியை மலையக மக்கள் இம்முறையும் பலப்படுத்த வேண்டும் என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான முன்னாள் அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொத்மலையில் இன்று (27) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.

இலங்கையில்  அதிக  தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்ட கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது. சுமார் 14, 15 உறுப்பினர்கள் தெரிவாவார்கள். கூட்டமைப்புக்கு அடுத்தப்படியாக அதிக தமிழ் உறுப்பினர்களைக்கொண்ட கட்சி தமிழ் முற்போக்கு கூட்டணியாகும்.

இம்முறை எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுக்கும் நோக்கில் தேர்தலில் போட்டியிடுகின்றோம். இவ்வாறு எட்டுபேர் தெரிவானால் ஒரு தேசியப்பட்டியலும் கிடைக்கும். அப்போது முற்போக்கு கூட்டணியின் சார்பில் 9 பேர் பாராளுமன்றம் சென்றுவிடலாம்.பெரிய கட்சி என்ற அந்தஸ்த்தும் கிடைக்கும். எனவே, தமிழ் முற்போக்கு கூட்டணியை மலையக மக்கள் பலப்படுத்தவேண்டும்.

சஜித் பிரேமதாசவை எதற்காக ஆதரிக்கின்றோம் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சில விடயங்களை குறிப்பிடுகின்றேன். மலையக மக்களுக்கு ரணசிங்க பிரேமதாசவே வாக்குரிமை வழங்கினார். ஜனவசிய திட்டத்தை அமுல்படுத்தினார். பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை, கம்முதாவ திட்டம் என மக்களுக்காக பல சேவைகளை செய்துள்ளார். இதன்காரணமாகவே அவரின் மகனான சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றோம். அவரும் சிறப்பாக செயற்படக்கூடியவர்.

ரணசிங்க பிரேமதாசதான் ஆயுதம் வழங்கினார் என கருணா இன்று கூறுகிறார். அதனைவிடவும் அவர் மக்களுக்கு சேவைகளை செய்துள்ளார் என்பதை கூறிக்கொள்கின்றேன். நுவரெலியா மாவட்ட மக்கள் தொலைபேசி சின்னத்துக்கும் எமது கூட்டணியில் போட்டியிடும் மூவருக்குமே வாக்களிக்கவேண்டும்.

ஆயிரம் ரூபாவில் அரசியல் நாடகமா? பொங்கியெழுந்து பதிலடி கொடுத்தார் ஜீவன்

ஆயிரம் ரூபாவை வைத்து அரசியல் நாடகம் நடத்தவேண்டிய தேவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு கிடையாது என்று அதன் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன், சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியத்தையும், ஆறுமுகன் தொண்டமானின் வீரத்தையும் பின்பற்றியதாக எனது அணுகுமுறை அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனையில் 28.06.2020 அன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது மக்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கு கம்பனிகள் இணங்கியுள்ளன. ஆனால், கூடுதலாக இரண்டு கிலோ கொழுந்தும், இறப்பர் தோட்டங்களில் மேலதிகமாக ஒரு கிலோவும் எடுக்கப்படவேண்டும் என கூறுகின்றனர். இதற்கு நாம் உடன்பட முடியாது. அந்த கோரிக்கையை ஏற்றால் அப்பா என்னை மன்னிக்கமாட்டார். கம்பனிகள் வெள்ளையர் காலத்தில் போல் தான் தற்போது செயற்படமுற்படுகின்றன. இதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பேச்சுவார்த்தை என்பது தேர்தல் நாடகம் என்று சிலரால் விமர்சிக்கப்படுகின்றது. சம்பளத்தை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்யவேண்டிய தேவை இ.தொ.காவுக்கு கிடையாது. ஏனெனில் மக்கள் எம்பக்கமே உள்ளனர்.

அப்பா இறந்த பின்னர் சில தோட்டங்களில் துரைமார் ஆட ஆரம்பித்துள்ளனர். நாம் தற்போது அமைதியாக இருக்கின்றோம். இந்நிலையில் ஆறுமுகன் தொண்டமானின் மறைவின் பின்னர் ஏன் இந்த அமைதி என சிலர் கேட்கின்றனர்.  பொறுமைக்கும், அமைதிக்குமிடையில் வித்தியாசம் உள்ளது. நாம் பொறுமையாகவே இருக்கின்றோம். அதனை பலவீனமாகக்கருதவேண்டாம்.

மக்கள் எனக்கு தேர்தல்மூலம் அதிகாரத்தை வழங்கிய பின்னர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியத்துடனும், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வீரத்துடனும் அத்தனை பேரையும் நடுங்கவைப்பேன். ஆறுமுகன் தொண்டமான் போய்விட்டார், இ.தொ.காவின் கதை முடிந்துவிட்டது என சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். யார் எதனை வேண்டுமானாலும் நினைத்துவிட்டுபோகட்டும். மக்களுக்காக எப்போதும் காங்கிரஸ் செயற்படும்.

கடந்தகாலங்களில் கட்சி அடிப்படையிலேயே வீடுகள் பகிரப்பட்டன. கிராமங்களை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது திட்டமாகும். இளைஞர்களின் வேலையிண்மை பிரச்சினையை தீர்க்கவேண்டும். அதற்கான திட்டங்கள் எம்மிடம் உள்ளன. மலையக பல்கலைக்கழகம் வந்த பின்னர், ஹோட்டல் முகாமைத்துவ கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படும். அதன்பின்னர் சுற்றுலாத்துறையில் கூடுதல் வேலைகளைப்பெறலாம்.” – என்றார்.

21 ஆம் நூற்றாண்டில் பெறுமதிவாய்ந்த வீரர்

21 ஆம் நூற்றாண்டுக்கான மிகவும் பெறுமதிவாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக முத்தையா முரளிதரன் பெயரிடப்பட்டுள்ளார்.

விஸ்டன் என்ற மாதாந்த வியயாட்டு சஞ்சிகையே இத்தேர்வை அறிவித்துள்ளது.

உலகில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முத்தையா முரளிதரனே அதிககூடிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலகசாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

104 நாட்களுக்கு பின்னர் நாளை திறக்கப்படுகின்றன பாடசாலைகள்

கொரோனா வைரஸ் பரவலையடுத்து மூடப்பட்ட பாடசாலைகள் நாளை 29 ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளன. அதன்பின்னர் நான்கு கட்டங்களின்கீழ் கல்வி நடவடிக்கை ஆரம்பமாகும்.

இதன்படி நாளை (29) அதிபர், ஆசிரியர்கள் உட்பட பாடசாலை நிர்வாகத்தினர் மாத்திரமே சமூகமளிக்க வேண்டும். மாணவர்கள் பாடசாலை செல்லவேண்டியதில்லை.

இரண்டாம் கட்டாக  ஜுலை 6 ஆம் திகதி  5,11 மற்றும் 13 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை ஆரம்பமாகும்.

ஜுலை 20 ஆம் திகதி முதல் மூன்றாம் கட்ட நடவடிக்கை ஆரம்பமாகும். 10, 12 ஆம் ஆண்டுகளில் கல்வி பயிலும் மாணவர்கள் அன்று பாடசாலைக்கு வருகைதரமுடியும்.

ஜுலை 27 ஆம் திகதி நான்காம் கட்டமாக 3,4,6,7,8 மற்றும் 9 ஆம் ஆண்டு மாணவர்களை பாடசாலைக்கு அழைத்தவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கட்சி தாவியவர்களுக்கு இ.தொ.காவில் இடமில்லை – ரமேஷ் திட்டவட்டம்

இலங்கைத்  தொழிலாளர் காங்கிரசுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் ஏனைய தமிழக்கட்சிகளுக்குமிடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. காங்கிரஸ் ஐந்து வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளது. எனவே, போலி வேட்பாளர்களின் பிரச்சாரங்களை மக்கள் நம்பக்கூடாது.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொருளாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

கொத்மலையில் 28.06.2020 அன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் தொடர்பிருக்கின்றது. எனவே, எதிர்காலத்தில் இணைவோம் எனக்கூறி சிலர் மக்களிடம் வாக்குகேட்கின்றனர். மேலும் சிலர் இரண்டு வாக்குகளை எங்களுக்கு தாருங்கள் என கெஞ்சுகின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் தொழிற்சங்கங்களுடன் காங்கிரசுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. கட்சியைவிட்டு வெளியேறியவர்களை தற்போது இணைத்துக்கொள்ளும் எண்ணமும் இல்லை.

பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், நான் உட்பட ஐந்து வேட்பாளர்களே காங்கிரஸின் சார்பில் போட்டியிடுகின்றோம். ஐவரையும் மக்கள் வெற்றிபெறவைப்பதுடன், போலி பிரச்சாரம் முன்னெடுக்கும் வேட்பாளர்களுக்கும் சிறந்தபதிலை வழங்குவார்கள். எனவே, மக்கள் மத்தியில் அவர்களின் போலிப்பிரச்சாரம் எடுபடாது.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர்தான் ஆயிரம் ரூபா கோரிக்கையை முன்வைத்தோம். ஐக்கிய தேசியக்கட்சியே அதனை தடுத்து நிறுத்தியது. இந்த அரசாங்கத்தின்கீழ் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. நாளை கையொப்பமிட்டால்கூட ஆயிரம் ரூபா கிடைத்துவிடும். ஆனால், நாம் அவசரப்படமாட்டோம்.

ஏனெனில் மேலதிகமாக இரண்டு கிலோ கொழுந்தையும், இறப்பரையும் கோருகின்றனர். அந்த கோரிக்கையை நாம் ஏற்கவில்லை. மக்களுக்கு எவ்வித சுமையும் அதிகரிக்காத வகையில் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம். அதற்காகவே நிதானமாக செயற்பட்டுவருகின்றோம். கூடியவிரைவில் ஆயிரம் ரூபா கிடைக்கும்.

காங்கிரஸின் பலம் நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றது. வெளி மாகாணங்களில் உள்ள இளைஞர்கள் இணைகின்றனர். ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பின்னர் எமது பலம் அனைவருக்கும் தெரியவரும்.” – என்றார்.

க.கிசாந்தன்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

மவுண்ட்வேர்ணன் தமிழ் வித்தியாலய பழைய மாணவர்களின் கிரிக்கெட் திருவிழா!

0
கொட்டகலை /மவுண்ட்வேர்ணன் தமிழ் வித்தியாலயத்தின் 1999ஆம் ஆண்டு பழைய மாணவர் தொகுதியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர்களுக்கிடையிலான மாபெரும் சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியும், ஒன்று கூடல் நிகழ்வும் கடந்த 2026.04.16 அன்று பாடசாலை...

சுயாதீன விசாரணைக்கு இடமளித்தே அமைச்சர் ராஜினாமா!

0
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இராஜினாமா கடிதங்களை கையளித்து தமது பதவிகளில் இருந்து...

அனல் பறக்கும் நிலக்கரி கொள்வனவு: வலுசக்தி அமைச்சர் ராஜினாமா!

0
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் பதவி விலகியுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. நிலக்கரி இறக்குமதி தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும்...