Home Blog Page 4013

‘நான் கட்டிக்கொடுத்த வீடுகள் குருவிக்கூடா’ – திகா சீற்றம்

” தமிழ் முற்போக்கு கூட்டணியானது மலையக மக்களுக்காக உணர்வுப்பூர்வமாக சேவையாற்றியுள்ளது.” – என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” எமது மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர்களால் மட்டுமே மலையகத்தில் அபிவிருத்திகளை முன்னெடுக்ககூடியதாக இருக்கும். எனவே, இப்படியானவர்களுக்கு வாக்களிப்பதா அல்லது தேர்தல் காலத்தில் வந்து விளையாட்டு பொருட்களை வழங்குபவர்களுக்கும், எங்கள் அப்பா செய்யாதவற்றை நான் செய்வேன் எனக் கூறுபவர்களுக்கும் வாக்களிப்பதா என மக்கள் முடிவெடுக்கவேண்டும்.

ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பிறகு நானும், ராதா அண்ணனுமே அமைச்சர்களாவோம். கடந்த நான்கரை வருடங்களில் நாம் இருவரும் மக்களுக்கு உணர்வுப்பூர்வமாக சேவைகளை செய்துள்ளோம். அவ்வாறு செய்துவிட்டே வாக்கு கேட்டுவந்துள்ளோம்.

எப்படிதான் சேவை செய்திருந்தாலும் நான் கட்டிய வீட்டை குருவிகூட என விமர்சிக்கின்றனர். நான் குருவிகூடாவது கட்டிக்கொடுத்தேன். அவர்கள் அதையாவது செய்தார்களா? ” – எனவும் திகாம்பரம் கேள்வி எழுப்பினார்.

மலையகத்துக்கு தேவை பண அரசியலா, நேர்மை அரசியலா?

” நம்மவர்கள்தான் நம்மை ஆள வேண்டும். எனவே, கொழும்பில் இருந்தும், கண்டியில் இருந்தும் வருபவர்கள் தீபாவளி காலத்தில் வியாபாரம் செய்ய வருவது போல் வருவார்கள். சீசன் முடிவடைந்ததும் சென்றுவிடுவார்கள். இவர்களை நம்பக்கூடாது.”

இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பிலிப்குமார் தெரிவித்தார்.

”  மலையகத்துக்கு தேவை பண அரசியலா, நீதி, நேர்மை மற்றும் வெளிப்படைதன்மை மிக்க அரசியலா என்பது குறித்து சிந்தித்தே மக்கள் முடிவெடுக்கவேண்டும்.” எனவும் அவர் கூறினார்.

113 நாட்களுக்கு பின்னர் மாணவர்களுக்காக பாடசாலைகள் திறப்பு

மலையகத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு இன்று (06.07.2020) சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூகமளித்திருந்த 5ம்,11ம், மற்றும் 13ம் தர மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக ஸ்தம்பிதமடைந்திருந்த மாணவர்களின் கல்வி நடவடிக்ககைள் 113 நாட்களுக்கு பின்னர் இன்று (06.07.2020) ஆரம்பிக்கப்பட்டன.
அத்துடன், மாணவர்கள் பாடசாலைகளில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் மாணவர்களுக்கு அதிபர், மற்றும் ஆசிரியர்களினால் அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி முகக்கவசம் அணிந்து வந்த மாணவர்கள் பாடசாலை நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள இடத்தில் கைகளை கழுவினர். அதன்பின்னர் ஆசிரியர்களினால் உடல் உஷ்ணம் கணிப்பிடப்பட்டது. அதன்பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
5 ஆம் தர மாணவர்களுக்காக காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி முதல் தரம் 12 மற்றும் 10 மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 3, 4, 6, 7, 8 மற்றும் 9 ஆம் தர மாணவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இறுதி கட்டமாக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி தரம் 1, 2 மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ளன.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றியே இவ்வாறு மாணவர்கள் கட்டம் கட்டமாக பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
க.கிசாந்தன்

‘சஜித்தை பிரதமராக்குவதே எமது இலக்கு’

சஜித் பிரேமதாசவை பிரதமராக்குவதே எமது தற்போதைய இலக்காக இருக்கின்றது – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

” பதுளை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களின் இருப்பையும், கலை – கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை நாம் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.  அப்படியானால் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் மக்கள் வாக்களிக்கவேண்டும்.” – எனவும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.

மன்னாரில் மாயமான மர்ம நபர்: புறமுதுகில் பொதியுடன் தேவாயலத்திற்கு வந்ததால் சர்ச்சை : மன்னாரில் தேடுதல்

மன்னாரில் பேசாலை பகுதியில் பொதியொன்றுடன் சுற்றித் திரிந்த நபர் ஒருவர் மாயமானதால் அந்தப் பிரதேசத்தில் தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

மன்னார் பேசாலை பகுதியில் உள்ள வெற்றிநாயகி தேவாலயத்திற்கு நபர் ஒருவர் சனிக்கிழமை மாலை வந்துள்ளார். இவர் பின்முதுகில் பையுடன் காணப்பட்டுள்ளார். இவரிடம் அங்கிருந்தவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். எனினும், அதற்கு மழுப்பலாக பதில் கூறிய நிலையில், இந்த நபர் குறித்து அருட்தந்தைக்கு அங்கிருந்தவர்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையே குறித்த நபர் அங்கிருந்து காணாமல் போயுள்ளார். இதனையடுத்து அருட்தந்தை பொலிசாருக்கு அறிவித்துள்ளார். பொலிசார் குறித்த பிரதேசத்தில் விசாரித்தும், தேடுதல் நடத்தியும் வருகின்றனர். குறித்த ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராக்களின் உதவியுடன் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும், குறித்த நபர் எங்கு மாயமானார் என்பது குறித்து உரிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என மன்னார் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பாக வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க, மன்னார் பொலிஸ் அத்தியட்சகர், ஆகியோர் பேசாலை பிரதேசத்திற்கு வந்து, பங்குத்தந்தையுடன் விடயங்களை ஆராய்ந்து சென்றுள்ளனர்.

அத்துடன். குறித்த பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

  • ஹஸ்மத்

 

‘கொரோனா’ – உலகளவில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!

உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 34 ஆயிரத்து 419 உயர்ந்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. உலக முழுவதும் உக்கிர தாண்டவ ஆடி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதன் காரணமாக மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவது முகக்கவசம் அணிவது ஆகியவற்றின் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில், உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,435,299
ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 534,519 ஆக கூடியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6,473,428 ஆக உள்ளது.

‘இரத்தினபுரி மாவட்டத்தை புறக்கணித்த மலையக தலைமைகள்’

மலையகத்தைச் சேர்ந்த தமிழ் தலைவர்கள் இரத்தினபுரி மாவட்டத்திற்கு வெளியில் தமது சேவைகளை வழங்கிய போதிலும், இரத்தினபுரி மாவட்டத்திற்கு இதுவரை எந்தவொரு சேவையையும் அவர்கள் செய்யவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான தேர்தல் பிரசார அலுவலகம் இரத்தினபுரி – புதிய நகர் பகுதியில் இன்று (5) திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மலையக மக்களுக்கான தலைவர்கள், இரத்தினபுரி மாவட்டத்தில் இல்லாமையே இந்த பிரச்சினைக்கான காரணம் எனவும் அவர் கூறினார்.

எனினும், குறித்த தலைவர்களின் பிரதிநிதிகள் இரத்தினபுரி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நிலையில், அவர்களினால் கூட இந்த மாவட்டத்திற்கான அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மலையக தலைவர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்திற்கே அனைத்து உதவித் திட்டங்கள் மற்றும் அபிவிருத்திகளை வழங்கி வருகின்றமையே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், கவனிப்பாரற்று காணப்படும் இரத்தினபுரி மாவட்டத்தினை முன்னேற்றமடைய செய்ய, இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து தலைமைத்துவமொன்று பாராளுமன்றத்தை நோக்கி செல்வது தற்போதைய நிலையில் அத்தியாவசியம் எனவும் அவர் கூறுகின்றார்.

இதுவரை பின்தள்ளப்பட்ட இரத்தினபுரி மாவட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல இனிவரும் காலங்களில் தான் முன்னின்று செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் நம்பிக்கை வெளியிட்டார்.

இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் அனைத்து இளைஞர் சக்தியும் ஜீவனுடன் சங்கமம்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் அரசியல் பயணத்தை பலப்படுத்துவதற்காக இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் சகோதர இனங்களைச்சேர்ந்த இளைஞர்களும் அவருக்கு பேராதரவை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர். இதனால் இளைஞர்கள் மத்தியில் ஜீவனுக்கான ஆதரவு அலை கோலோச்சியுள்ளது.

பொதுத்தேர்தலுக்கான வெற்றிப்பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவரும் ஜீவன் தொண்டமானுக்கு நாளுக்கு நாள் பல தரப்பினரும் நேசக்கரம் நீட்டிவருகின்றனர். சர்வமத பிரதிநிதிகள் நேற்று ஆதரவு வழங்கிய நிலையில் இன்று பல இளைஞர்கள் ஜீவனுக்காக அணி திரண்டனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தேர்தல் தொகுதிகளிலும் உள்ள இளைஞர், யுவதிகள், இளைஞர் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதனை பலப்படுத்துவதற்கு ஓரணியில் திரண்டது வரவேற்கத்தக்க விடயம் என்றும், புதியதொரு அரசியல் கலாச்சாரத்துக்கு வழிவகுக்கும் என்றும்  சிரேஷ்ட அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஜீவனுக்கான ஆதரவு தொடர்பில் கருத்து வெளியிட்ட சகோதர இனங்களைச்சேர்ந்த இளைஞர்கள்,

” தேர்தல் காலங்களில் பலர் இனவாதம் பேசி, இளைஞர்களை பிரித்தாள்வதற்கு முயற்சிக்கின்றனர். இம்முறையில் பல அரசியல்வாதிகளின் உரைகள் அவ்வாறே அமைந்துள்ளன. ஆனால், அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவ்வாறு அல்ல. இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் மனிதநேயத்தை நேசித்தவர். நுவரெலியா மாவட்டத்தில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சேவைகளை வழங்கியவர். அவருக்கான இறுதி அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய சர்வமதத் தலைவர்கள், இதனை மிகவும் தெளிவாக குறிப்பிட்டிருந்தனர்.

ஜீவன் தொண்டமானும் அனைவரையும் அரவணைத்துக்கொண்டு முன்நோக்கி செல்லவே முயற்சிக்கின்றார். அவரிடமும் பிரிவினைவாதம் கிடையாது. இப்படியொரு இளைஞர்தான் தலைமை வகிக்கவேண்டும். அப்போதுதான் இளைஞர் சக்திகளை ஓரணியில் திரட்ட முடியும். அதனை உணர்ந்துள்ளதாலேயே ஜீவனுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி ஆதரவு வழங்க சுயேட்சையாகவே முன்வந்துள்ளோம்.

மலையகத்தில் நாமும் மாற்றத்தை எதிர்பார்க்கின்றோம். அந்த மாற்றம் என்பதற்குள் அனைவரும், அனைத்தும்பெற்று சமமாக வாழும் நிலை உருவாகவேண்டும் என்ற விடயமும் உள்ளடங்கவேண்டும். அதனை ஜீவன் செய்வார் என்ற முழு நம்பிக்கையும் உள்ளது.” – என்றனர்.

இம்முறை மக்கள் ஏமாறத் தயாரில்லை

பதுளை தோட்டப்புறங்களில் செந்தில் தொண்டமானுக்கு உள்ள அசைக்க முடியாது செல்வாக்கால் அவரின் புகைப்படத்தை பயன்படுத்தி வாக்குச் சேகரிப்பில் ஈடுபடும் பெரும்பான்மையினர்!!

– இம்முறை மக்கள் ஏமாறத் தயாரில்லை : தனி விருப்ப வாக்குகளுடன் செந்தில் தொண்டமானை பாராளுமன்ற அனுப்புவதில் உறுதியாகவிருக்கும் பதுளை தமிழர்கள் –

பதுளை மாவட்டத்தில் தோட்டப்புறங்களில் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானுக்குள்ள அசைக்க முடியாத செல்வாக்கால் அவரின புகைப்படமின்றி தோட்டப்புறங்களில் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதையறிந்து பெரும்பான்மை அரசியல்வாதிகள் செந்தில் தொண்டமானின் புகைப்படத்தையும் தமது சுவரொட்டிகளில் இணைத்து அச்சிட்டு வருவதை பரவலாக காணமுடிகிறது.

பதுளைத் தேர்தல்களம் நாளுக்குநாள் பரபரப்படைந்து வருகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான தமிழ் வேட்பாளராக களமிறங்கியுள்ள செந்தில் தொண்டமானின் செல்வாக்கு தோட்டப்புறங்களில் அசைக்க முடியாத அளவு வளர்ச்சிக்கண்டுள்ளது. அத்துடன், பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்களும் தொடர்ந்து செந்தில் தொண்டமானுடன் கைகோர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், தோட்டப்புறங்களில் செந்தில் தொண்டமானின் புகைப்படமின்றி எந்தவொரு பெரும்பான்மை வேட்பாளரும் இம்முறை வாக்குளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளதால் தமது சுவரொட்டிகளுடன் செந்தில் தொண்டமானின் புகைப்படத்தையும் சேர்த்து அச்சிட்டு அனைத்து தோட்டப்புறங்களிலும் பொது இடங்களிலும் ஒட்டிவருகின்றனர்.

ஆனால், பதுளைவாழ் தமிழர்கள் இம்முறை அதிகூடிய தனி விருப்ப வாக்குகள் மூலம் செந்தில் தொண்டமானை பாராளுமன்றத்திற்கு அனுப்பி அரசாங்கத்தில் ஓர் அதிகாரம் மிக்க அமைச்சுப் பதவியை பெற்றுக்கொடுப்பதில் உறுதியாகவுள்ளனர். புத்திஜீவிகளும், ஆசிரியர் சமூகமும் இந்த விடயத்தில் உறுதியாக உள்ளதுடன், போலியான பிரசாரங்களை கண்டு மக்கள் ஏமாறக் கூடாதென கேட்டுக்கொள்கிறது.

கடந்த மாகாண சபைத் தேர்தலின் செந்தில் தொண்டமான் 33 வாக்குகளைப் பெற்றிருந்தார். முதலமைச்சராக நியமிக்கப்பட்ட சாமர சம்பத் 35 வாக்குளைப் பெற்றிருந்தார். சாமர சம்பத் பெற்றுக்கொண்ட வாக்குகளில் 8ஆயிரம் வாக்குகள் தோட்டப்புற வாக்குகளாகும். அந்த வாக்குகள் செந்தில் தொண்டமானுக்கு அளிக்கப்பட்டிருந்தால் ஊவா மாகாண முதலமைச்சராக ஒரு தமிழர் தெரிவாகியிருக்க முடியும். பதுளையில் 80 சதவீதம் பெரும்பான்மையினரும் 20 சதவீதம் சிறுபான்மையினரும் வாழ்கின்றனர். செந்தில் தொண்டமானுக்கு உள்ள அசைக்க முடியாத செல்வாக்கு காரணமாகவே அனைத்து பெரும்பான்மை அரசியல்வாதிகளும்; இவ்வாறு அவருடைய புகைப்படத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், இம்முறை பதுளைவாழ் தமிழ் மக்கள் தெளிவாக உள்ளனர். இவ்வாறான போலி சுவரொட்டிகள் மற்றும் பிரசுரங்களை கண்டு நம்பிவிடாமல் தனி விருப்ப வாக்குளை செந்தில் தொண்டமானுக்கு அளித்து அமைய போகும் அரசாங்கத்தில் மலையகத் தமிழர்களின் உரிமைகளை பேரம் பேசி வென்றெடுக்கக் கூடிய அதிகாரத்தை பெற வழிசமைக்க வேண்டுமெனவும் புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

‘நல்லாட்சி காலப்பகுதியே மலையகத்துக்கு பொற்காலம்’

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது. அதனை பெரும் வெற்றியாக மாற்றவேண்டிய பொறுப்பு மக்களுடையது. எனவே, தொலைநோக்குடன் சிந்தித்து தொலைபேசி சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” வெறுமனே கைகளை வீசிக்கொண்டு அல்லாமல் மலையகத்துக்கு ஆக்கப்பூர்வமான சேவைகளை செய்துவிட்டே மக்கள் முன்னணிலையில் வாக்குகேட்டு வந்துள்ளோம்.

2015 முதல் 2019 வரையான காலப்பகுதியே மலையகத்துக்கு பொற்காலமாகும். 40 ஆண்டுகளுக்குமேல் செய்யப்படாதிருந்த பல விடயங்களைக்கூட நான்கரை வருடங்களில் செய்து செயல்வீரர்கள் என்பதனை தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணி என்பது தேர்தலுக்காக ஆரம்பிக்கப்பட்ட கூட்டணி அல்ல. அது மலையக மக்களுக்கான கூட்டணி. உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் இயக்கமாகும். எம்மால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களைக்கூட தொடர்ந்து முன்னெடுக்கமுடியாத நிலையிலேயே ஆளுங்கட்சி பக்கமுள்ள இன்றைய மலையக அரசியல்வாதிகள் இருக்கின்றனர் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் வெற்றிபெற்று நாம் அமைச்சுப்பதவிகளை பெற்ற பின்னர் அபிவிருத்திகள் தொடரும் என்பதை கூறிக்கொள்கின்றேன்.

நான்கவரை வருடங்களில் எம்மால் பல சேவைகளை செய்யமுடிந்தால் இன்னும் ஐந்தாண்டுகள் கிடைத்தால் எவ்வளவு சேவைகளை மக்களுக்கு வழங்கக்கூடியதாக இருக்கும். எனவே. வாய்ச்சொல் வீரர்களுக்கு அல்லாமல் செயல்வீரர்களுக்கே மக்கள் வாக்களிக்கவேண்டும்.

நுவரெலியா மாவட்டத்துக்குதான் அதிகம் சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். இந்தத்தேர்தலிலும் சில சுற்றுலாப்பயணிகள் போட்டியிடுகின்றனர். தேர்தல் முடிவடைந்ததும் அவர்கள் சென்றுவிடுவார்கள். .எனவே, முற்போக்கு கூட்டணிக்கு நம்பிக்கையுடன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். கிடைத்த வாக்குரிமையை வீணடிக்கவேண்டும். உரிய வகையில் பயன்படுத்துங்கள்.” – என்றார்.

க.கிசாந்தன்

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மலையக மக்களின் அறவழி எழுச்சியே தீர்வுக்கு வழிசமைக்கும்!

0
மலையக மக்கள் மத்தியில் அறவழியில் எழும் எழுச்சியே அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலைக்குரிய தீர்வை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தும் என்று கண்டி மாவட்ட காணி உரிமைக்கான தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...

ராஜதந்திர முயற்சிகளை சீர்குலைக்கும் அமெரிக்காவின் ராணுவ சாகசம்!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) நேரடி மோதல்கள் அதிகரித்துள்ளன. இராஜதந்திர தீர்வுகள் எட்டப்படும் போதெல்லாம் அமெரிக்கா "முட்டாள்தனமான இராணுவ சாகசங்களில்" ஈடுபடுவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர்...

ரணிலை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவர ஏற்பாடு!

0
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் ஜூன் மாதம் மீண்டும் தீவிர அரசியலுக்குக் கொண்டு வரவுள்ளதாகவும், அதன் பின்னர் நாட்டின் அரசியல் களத்தில் பாரிய திருப்பங்கள் ஏற்படும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின்...