Home Blog Page 51

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு காலனாமார். இந்த தகவலை கம்யூனிஸ்ட் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

ஆர்.நல்லகண்ணு (வயது 101) உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வயது மூப்பின் காரணமாக அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது. வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு அங்கு வைத்தியர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நல்லகண்ணு சிகிச்சை பலனின்றி காலமானார்.

முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் பிற்பகல் 1.55 மணிக்கு காலமானதாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தூத்துகுடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெரும்பத்து என்னும் கிராமத்தில் 1925 டிசம்பர் 26 ஆம் திகதி பிறந்தவர் ஆர். நல்லகண்ணு.

பாடசாலை பருவத்திலேயே பாரதியாரின் பாடல்கள் மீது ஈடுபாடு கொண்டவர்.

18 ஆவது வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். நெல்லை சதி வழக்கில், 27 வயதில் கைது செய்யப்பட்டு சித்ரவைக்குள்ளாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்டபோது, நாடும் விடுதலை பெற்றிருந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக 13 வருடங்கள் செயலாற்றியவர். விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும் இருந்தவர்.

விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் ஈடுபட்டு வாழ்நாளில் பெரும்பகுதியை போராட்டம், சிறை வாழ்க்கை என வாழ்ந்தவர்.

சுரேஷ் சலே கைது செய்யப்பட்டது ஏன்?

விசாரணைகள்மூலம் உறுதியான சாட்சியங்களின் அடிப்படையிலேயே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

கொழும்பில் இன்று (25) முற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பேச்சாளர் எவ்.யு. வூட்லர் மேற்படி தெளிவுபடுத்தலை வழங்கினார்.

“ அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே இன்று காலை 7.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.

இதற்கமைய வெளியாகியுள்ள உறுதியான சாட்சிகளின் அடிப்படையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் இவர் ஒப்படைக்கப்படுவார்.” எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

அக்குரேகொட இரட்டைக் கொலை: மற்றுமொரு துப்பாக்கிதாரி கைது!

அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனறாகலை பகுதியில் பதுங்கி இருந்த நிலையிலேயே அவர் நேற்றிரவு சிக்கியுள்ளார்.

அக்குரேகொட பகுதியில் கடந்த 13 ஆம் திகதி சட்டத்தரணியொருவரும், அவரது மனைவியும் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

இரு துப்பாக்கிதாரிகளே சம்பவ இடத்துக்கு வந்து துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பின்சென்றனர்.

இது தொடர்பான விசாரணை வேட்டையில் கடந்த 21 ஆம் திகதி துப்பாக்கிதாரியொருவர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றார்.

இந்நிலையிலேயே இரண்டாவது துப்பாக்கதாரியும் நேற்றிரவு கைது மேல் மாகாண தெற்கு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு 29 வயதென தெரியவந்துள்ளது.

தெற்கில் இடம்பெற்ற சில துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் இவர் தேடப்பட்டுவந்த நபரென தெரியவருகின்றது.

மொனறாகலையில் அவர் தங்கி இருந்த வீட்டில் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொனறாகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகலொன்றுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் சிக்கியுள்ளனர்.

மேற்படி இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காணாமல்போன பிள்ளைகளுக்காக இலங்கையில் தாய்மார் அணி திரண்டுள்ளனர்!

இலங்கையில் காணாமல் போன பிள்ளைகளுக்காக தாய்மார் அணி திரண்டுள்ளதாக ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வதுகூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று ஆரம்பமாகியது.

கூட்டத்தொடரில் தொடக்க உரை நிகழ்த்திய போதே ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 80 ஆண்டுகளாக காணப்படாத வேகத்திலும் தீவிரத்திலும் உலக அரங்கில் அதிகாரம், கட்டுப்பாடு மற்றும் வளங்களுக்கான கடுமையான போட்டி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடுகளுக்கு இடையேயும் நாடுகளுக்குள்ளும் உள்ள மோதல்களைத் தீர்க்க பலத்தைப் பயன்படுத்துவது இயல்பாக்கப்பட்டு வருகிறது.

போர்ச் சட்டங்கள் கொடூரமாக மீறப்படுகின்றன, பொதுமக்கள் பெரும் துன்பங்களை நம் கண்முன்னே வெளிப்படுத்துகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜென்டினாவிலிருந்து சிறிலங்கா வரை காணாமல் போன தங்கள் குழந்தைகளுக்கு நீதி கேட்க தாய்மார்கள் ஒன்றாக அணிவகுத்துள்ளனர் என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

மலையகப் பகுதிகளில் அரச சேவைகள் வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த திட்டம்!

​( இரா. சுரேஷ்குமார் தெமோதரை நிருபர்)

பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பெருந்தோட்டச் சமூகங்களை மையமாகக் கொண்டு, அரச சேவைகளை வலுப்படுத்தவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஒரு விசேட கூட்டுத் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அரச இயந்திரத்திற்கும் அடிமட்ட மக்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து, சேவைகள் நேரடியாக மக்களை சென்றடைவதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இந்த திட்டம் சர்வதேச மற்றும் உள்ளூர் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது. இதில் UNOPS, Australian Aid, UK aid, VRIDDHI மற்றும் The Power Foundation ஆகிய அமைப்புகள் இணைந்து செயல்படுகின்றன.

இயற்கைச் சீற்றங்கள் மற்றும் பொருளாதாரச் சவால்களால் அதிகம் பாதிக்கப்படும் பெருந்தோட்டப் பகுதிகள் இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தொடர்ச்சியான மழை, மண்சரிவு அபாயம், மற்றும் நீடித்த வறுமை நிலை போன்ற சவால்களை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

இத்திட்டம் மூன்று பிரதான தளங்களில் செயல்படுத்தப்படுகிறது.

அரச திணைக்களங்களின் சேவைகளை பெருந்தோட்டபகுதி மக்களுக்கு விரைவாக கொண்டு சேர்த்தல், சமூக அடிப்படையிலான அமைப்புகள், பெண்கள் குழுக்கள் மற்றும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குதல், மேலும் அதிகாரிகளும் மக்களும் நேரடியாக கலந்துரையாடும் Interface Meetings மூலம் சேவைத் தடைகளை நீக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
பெண் தலைமையிலான குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் மற்றும் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், துப்புரவு உபகரணங்கள், வீட்டுத் தோட்ட மற்றும் சிறு விவசாய ஆதரவு, சிறுதொழில் ஊக்குவிப்பு போன்ற வாழ்வாதார உதவிகளும் வழங்கப்படுகின்றன.

இத்திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு மற்றும் முன்னேற்றக் கலந்துரையாடல் நிகழ்வு, பதுளை நகரில் அமைந்துள்ள Riverside Hotel Badulla ரிவர்சைட் விடுதியில் இன்று (25) நடைபெற்றது. இந்நிகழ்வில் அரச அதிகாரிகள், திட்டப் பிரதிநிதிகள், சமூக அமைப்புகள் மற்றும் லுணுகலை பார்க் தோட்டம், அடாவத்தை தோட்டம், சோலன்ஸ் தோட்டம், ஒப்டன் தோட்டம், ஹாலி எல உணுகலை தோட்டம், அப்புதலை தோட்டம் மற்றும் காஹகலை தோட்டம் ஆகிய பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு பிரிவின் குழுவொன்றினாலேயே பெலியகொட பகுதியில் வைத்து இன்று (25) அதிகாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவர் சந்தேக நபராகக் கருதப்படுகின்றார்.

மேற்படி தாக்குதல் சம்பவம் நடைபெறும் காலப்பகுதியில் மலேசியாவிலுள்ள இலங்கை தூதுரகத்தின் ஆலோசகராக பதவி வகித்துள்ளார்.

இந்​தி​யா​வுக்கு அரை இறுதி வாய்ப்பு கிடைக்குமா?

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் தற்​போது பரபரப்​பான கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. தற்​போது சூப்​பர் 8 சுற்று போட்​டிகள் நடை​பெற்று வருகின்றன. இந்த சுற்​றில் கலந்து கொண்​டுள்ள 8 அணிகளும் 2 பிரிவுளாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன.

குரூப் 1-ல் இடம் பெற்​றுள்ள நடப்பு சாம்​பிய​னான சூர்யகுமார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் 76 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்பிரிக்​கா​விடம் வீழ்ந்​திருந்​தது.

அதேவேளை​யில் இதே பிரி​வில் உள்ள இரு முறை சாம்​பியனான மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தனது முதல் ஆட்​டத்​தில் 107 ரன்​கள் வித்தியாசத்​தில் ஜிம்​பாப்வே அணியை தோற்​கடித்​தது.

இதன் மூலம் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 5.350 நிகர ரன் ரேட்​டுடன் 2 புள்​ளி​களை பெற்று முதலிடத்​தில் உள்​ளது. அதிக அளவி​லான நிகர ரன்ரேட்டை கொண்​டுள்​ள​தால் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி அரை இறு​திக்கு முன்​னேறுவதற்கு எஞ்​சி​யுள்ள 2 ஆட்​டங்​களில் ஒன்​றில் வெற்றி பெற்​றாலே போது​மான​தாக உள்​ளது.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தனது 2-வது ஆட்​டத்​தில் நாளை (26 ) தென் ஆப்​பிரிக்​காவை சந்​திக்​கிறது.

தொடர்ந்து கடைசி ஆட்​டத்​தில் மார்ச் 1- இந்தியாவுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது.

இந்​திய அணிக்கு எதி​ராக பெரிய அளவி​லான வெற்​றியை பதிவு செய்த தென் ஆப்​பிரிக்க அணி 3.800 நிகர ரன் ரேட்​டுடன் 2 புள்​ளி​களை பெற்று 2-வது இடத்​தில் உள்​ளது.

இந்​திய அணி அரை இறு​திக்கு முன்​னேற வேண்டுமானால் எஞ்​சி​யுள்ள 2 ஆட்​டங்​களி​லும் அதிக அளவி​லான ரன் ரேட் வித்​தி​யாசங்​களு​டன் வெற்றி பெற வேண்​டும். மேலும் தென் ஆப்​பிரிக்க அணி தனது எஞ்​சிய 2 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற வேண்​டும்.

இது நிகழ்ந்​தால் அந்த அணி 6 புள்​ளி​களு​டன் அரை இறுதி சுற்​றில் நுழை​யும். முக்​கிய​மாக அந்த அணி மேற்கு இந்தியத் தீவு​களை பெரிய அளவி​லான வித்​தி​யாசத்​தில் தோற்​கடிக்க வேண்​டும்.இது நிகழ்ந்​தால் மட்​டுமே இந்​திய அணிக்​கான வாய்ப்பு திறக்கும்.

ஒரு​வேளை மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி, தென் ஆப்பிரிக்​காவை தோற்​கடித்​தால் இந்​திய அணி​யின் நிலைமை சிக்​கலாகி​விடும். மேற்கு இந்​தி​யத் தீவுகள் வெற்றி பெற்​றால் அந்த அணி ஏறக்​குறைய அரை இறுதி வாய்ப்பை பெற்​று​விடும்.

தென் ஆப்​பிரிக்க அணி தனது கடைசி ஆட்​டத்​தில் ஜிம்பாப்வே அணியை வென்​றால் இந்​திய அணி​யின் நிலைமை மேலும் சிக்​கலாகும். தற்​போது இந்​திய அணி​யின் நிகர ரன்​ரேட் -3.800 ஆக உள்​ளது. இந்​திய அணி தனது கடைசி 2 ஆட்​டங்​களில் வெற்றி பெற்​றாலும் நிகர ரன்​ரேட்டே அரை இறு​திக்கு முன்​னேறு​வதை தீர்​மானிக்​கும் முக்​கிய காரணி​யாக இருக்​கும். வாய்​ப்​பை பெற முடி​யும்​.

வெற்றி வாகை சூடியது சன் பேர்ட்ஸ் அணி!

நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராம சேவகர்கள் பிரிவில் உள்ள அணிகளுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான கிராம சேவகர் உதைப்பந்தாட்ட போட்டியானது நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் நடைபெற்றது.

போட்டிகளில் 8 எட்டு அணிகள் பங்கு பற்றியதோடு நாக்கவுட் சுற்று முறையில் இப் போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில் இறுதி போட்டியானது 535L மேற்கு கிராம சேவகர் பிரிவில் இஸ்கிராப் தோட்டத்தை பிரதிநிதிப்படுத்திய சன் பேர்ட்ஸ் விளையாட்டு கழகம் இறுதிப்போட்டியில் எஸ் ஓ எஸ் அணியுடன் மோதி வழங்கப்பட்ட நேரத்தில் எந்த கோலினையும் பெறாத நிலையில் இரு அணிகளும் தண்ட உதை மூலமாக இரண்டுக்கு ஒன்று 2.1 என்ற கோல் அடிப்படையில் சன் பேர்ட்ஸ் விளையாட்டு கழகம் வெற்றி வாகை சூடியது.

கடந்த வருடமும் சன் பேர்ட்ஸ் அணியினரே முதலாம் இடத்தை பெற்று வெற்றி வாகை சூடினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வ. கார்த்திக் நுவரெலியா

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, ‘தாய் கிழவி’ படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன், ரேய்ச்சல் ரெபேகா, முத்துக்குமார், முனீஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். பிப்.27-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, “சினிமாவில் சின்ன கதாபாத்திரத்தில் ஆரம்பித்து மக்கள் என்னை கதாநாயகனாக ஏற்றுக்கொண்டார்கள். சினிமாவில் என்னுடைய நண்பர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. என்னைவிட சினிமாவில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர் அருண்ராஜா.

அவருக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ். கனவோடு திருச்சியிலிருந்து வந்தவர்கள் சேர்ந்து ‘கனா’ என்ற படத்தை எடுத்தோம். பின்பு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘டாக்டர்’, ‘டான்’, ‘கொட்டுக்காளி’, ‘குரங்கு பெடல்’ என பல படங்கள் தயாரித்தோம். ‘

தாய் கிழவி’ கதையை கேட்டதுமே சிவகுமாரின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ‘தாய் கிழவி’ பார்த்துவிட்டு இந்தப் படத்தில் நிறைய நட்சத்திரங்களை உருவாக்கி இருக்கிறீர்கள் என கமல் சார் சொன்னார். ‘

தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் நடிக்க ராதிகா மேடத்தைத் தவிர வேறு ஆள் கிடையாது என்பதைப் படம் பார்த்துவிட்டு அனைவரும் சொல்வார்கள். ‘சேயோன்’ படத்துக்கு அடுத்தும் மீண்டும் நான் சிவகுமாருடன்தான் படம் செய்ய இருக்கிறேன்.

எனக்கு பேரும் புகழும் கொடுத்த இந்தத் துறைக்கு நான் திரும்ப ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். யாருக்கும் போட்டியாகவோ யாரையும் தாண்டி வர வேண்டும் என்ற எண்ணத்திலோ இல்லை.

நான் நடிக்கும் படங்களின் வெற்றி, தோல்விக்கு நானும் பொறுப்பு என்பதை உணர்ந்தே செயல் படுகிறேன். மக்கள் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால், இன்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தடை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதையும் தாண்டி வர நான் ரெடி” என்றார்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு வங்கித் துறை தோள் கொடுக்க வேண்டும்

0
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

இலங்கை வருகிறார் இந்திய துணை ஜனாதிபதி!

0
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி சி....

புதன்கிழமை விடுமுறை இரத்து!

0
  "எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்படுகின்றது" என்று அத்தியாவசிய...