Home Blog Page 61

அணுசக்தி பேச்சும், இராணுவ அழுத்தமும்!

ஈரான் தனது அணுசக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதே வேளையில், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை தற்காலிகமாக மூடி தனது வலிமையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த மூலோபாய நடவடிக்கை ஒருபுறம் இருக்க, மறுபுறம் இரு நாடுகளும் சுவிட்சர்லாந்தில் நடந்த ஆலோசனைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளன.

ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அப்பகுதியில் நிலைநிறுத்தி கடும் அழுத்தம் கொடுத்து வரும் சூழலில் இந்த விவாதங்கள் நடைபெறுகின்றன.

பொருளாதாரத் தடைகளை நீக்க ஈரான் கோரிக்கை வைக்கும் நிலையில், அமெரிக்கா சில கடுமையான நிபந்தனைகளை முன்வைப்பதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடிக்கிறது.

போர் அச்சுறுத்தல்கள் மற்றும் ராணுவ பலப்பரீட்சைக்கு மத்தியிலும், வரும் வாரங்களில் விரிவான திட்டங்களை முன்வைக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதால் இப்பிரச்சினை ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இப்பேச்சுவார்த்தைகள் ஒரு இறுதி உடன்பாட்டை எட்டுமா அல்லது மோதலில் முடியுமா என்பதில் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையுமா பாகிஸ்தான்? இன்று பலப்பரீட்சை!

ICC T20 உலகக்கிண்ண தொடரில் இன்று (18) மூன்று முக்கிய லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

36 ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி அகமதாபாத் நகரில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகிறது.

இந்திய அணி ஏற்கனவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சூப்பர் 8 சுற்றுக்குள் தகுதி பெற்றுள்ளதால், இன்றைய போட்டியின் வெற்றி அல்லது தோல்வி அடுத்த சுற்று தகுதியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

எனினும், அணியின் தொடர்ச்சியான வெற்றிப் பயணத்தை நிலைநிறுத்த இந்திய அணி உறுதியுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, டெல்லியில் இன்று முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் 34 ஆவது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தென் ஆபிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகக் கருதப்படுவதுடன், குறிப்பாக தென் ஆபிரிக்கா அணி தங்களது முன்னிலை நிலையை உறுதிப்படுத்தும் நோக்கில் விளையாட உள்ளது.

அதேபோல், கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும் 25 ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டி பாகிஸ்தான் அணிக்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைவதற்காக பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியில் கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், இன்றைய போட்டிகள் ரசிகர்களுக்கு பரபரப்பான மற்றும் தீர்மானிக்கும் போட்டிகளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19 இல் ரிலீஸ்?

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தை மார்ச் 19ஆம் திகதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்துக்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு பின்பு தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. இதன் கிராபிக்ஸ் காட்சிகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இதனால் சரியான வெளியீட்டு திகதிக்காக காத்திருக்கிறது படக்குழு.

தற்போது மார்ச் 19ஆம் திகதி இப்படத்தை வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதன் மலேசியா உரிமையை பெற்றியிருக்கும் நிறுவனம் மார்ச் 19ஆம் திகதி வெளியீடு என குறிப்பிட்டுள்ளது. ஆனால், படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. விரைவில் இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்.ஜே.சூர்யா, சீமான், கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக ரவி வர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதனை 7 ஸ்கீரின் நிறுவனம் மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

மரக்கறி விலைப்பட்டியல் (18.02.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

46 நாட்களுக்குள் நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல் பெப்ரவரி 15 வரையான காலப்பகுதிக்குள் 4 லட்சத்து 36 ஆயிரத்து 666 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 78 ஆயிரத்து 157 பேரும், பிரிட்டனில் இருந்து 47 ஆயிரத்து 347 பேரும், ரஷ்யாவில் இருந்து 39 ஆயிரத்து 741 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

ஜேர்மனியில் இருந்து 30 ஆயிரத்து 85 பேரும், சீனாவில் இருந்து 25 ஆயிரத்து 563 பேரும், பிரான்ஸில் இருந்து 23 ஆயிரத்து 124 பேரும் மேற்படி காலப்பகுதிக்குள் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

மேலும் ஆஸ்திரேலியாவில் இருந்து 16 ஆயிரத்து 672 பேரும், கனடாவில் இருந்து 8 ஆயிரத்து 77 பேரும் வருகை தந்துள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறை பெரும் பங்களிப்பு வழங்கிவருகின்றது.

கடந்த வருடம் 23 லட்சத்து 62 ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏமாற்றம்: முதல் சுற்றோடு வெளியேறியது ஆஸ்திரேலியா!

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சூப்பர்-8’ சுற்றுக்கு ஜிம்பாப்வே முன்னேறி உள்ளது. அயர்லாந்து அணி உடனான ஆட்டம் மழையால் ரத்தானது. இதையடுத்து சிம்பாப்வே அணி புள்ளிகள் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதனால் குரூப்-பி பிரிவில் இடம் பெற்றிருந்த முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி முதல் சுற்றோடு நடையை கட்டியுள்ளது. மேலும், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக முதல் சுற்றோடு ஆஸ்திரேலியா வெளியேறி உள்ளது.

முன்னதாக, கடந்த 2009-ல் அந்த அணி முதல் சுற்றோடு வெளியேறி இருந்தது. அதேபோல கடந்த 2022, 2024-ம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை தொடர்ந்து இந்த முறையும் அந்த அணி நாக்-அவுட் சுற்றான அரையிறுதிக்கு முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021-ல் அந்த அணி டி20 உலகக் கோப்பை பட்டம் வென்றிருந்தது.

குரூப்-பி பிரிவில் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணி உடனான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது. அதன் காரணமாக அந்த அணி தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.

அதேபோல சிம்பாப்வே அணி கடந்த 2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு அடுத்த சுற்றுக்கு இரண்டாவது முறையாக முன்னேறி உள்ளது கவனிக்கத்தக்கது. அந்த அணியின் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் இந்த தொடரில் அபாரமானதாக அமைந்துள்ளது.

இதுவரை இந்தியா, இலங்கை,சிம்பாப்வே, மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து உள்ளிட்ட அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

குரூப்-ஏ பிரிவில் இருந்து பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. அந்த அணி இன்று நடைபெறும் நமீபியா அணி உடனான ஆட்டத்தில் தோல்வியை தழுவினால் இந்த பிரிவில் இருந்து அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பும் உள்ளது.

இலங்கையின் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்திற்கு IMF ஆதரவு!

தற்போதைய அரசாங்கத்தின் நல்லாட்சி மற்றும் ஊழல் எதிர்ப்பு மறுசீரமைப்புகளுக்கான அர்ப்பணிப்பு மூலம் விரைவான அபிவிருத்தி மற்றும் நிலைபேறான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான தனித்துவமான வாய்ப்பை இலங்கைக்கு வழங்குகிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva) தெரிவித்தார்.

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தல், அனர்த்தத்திற்குப் பின்னரான நிவாரண வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இலங்கையின் பொருளாதாரம் மீண்டு வரும் நேரத்தில் ஏற்பட்ட கடுமையான இயற்கை பேரழிவு குறித்து கிறிஸ்டலினா ஜோர்ஜிவா வருத்தம் தெரிவித்ததோடு, இலங்கையின் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்திற்கு தனது ஆதரவையும் தெரிவித்தார்.

ஆயுத மோதல்கள், சுனாமிப் பாதிப்புகள், பயங்கரவாதத் தாக்குதல்கள், தொற்றுநோய்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகள் நீண்டகாலமாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிய சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கு ஒரு புதிய பொருளாதார ஊக்கத்தின் அவசியத்தையும், வீடுகள், காணி, மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கான திட்டமிடப்பட்ட வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எடுத்த உடனடி நடவடிக்கைகளை முகாமைத்துவப் பணிப்பாளர் பாராட்டியதுடன், அந்த நிவாரண நடவடிக்கைகளுக்காக சர்வதேச நாணய நிதியம் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான அவசர நிதி உதவியை வழங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும்,பேரண்டப் பொருளாதாரம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை மீண்டும் ஏற்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு மேலும் வழங்கக்கூடிய உதவிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையிலான பங்களிப்பானது இலங்கையின் பொருளாதாரத்திற்கும் மக்களுக்கும் நன்மைகளை உறுதிப்படுத்தும் என்றும், எதிர்பார்க்கப்படும் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு இந்த வேலைத்திட்டத்துடன் மேலும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இங்கு மேலதிகமாகச் சுட்டிக்காட்டினார்.

விவசாயத்துறையின் உற்பத்தித்திறனை அதிகரித்தல் மற்றும் கிராமிய பொருளாதார மாற்றத்திற்கான வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அவர்களின் பங்களிப்பு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால், காணி உரிமை மற்றும் கலாச்சார மரபுகளைப் பாதுகாத்து கிராமப்புறங்களில் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் வேலைவாய்ப்புகளைப் பன்முகப்படுத்துவதற்கும் ஒரு இடைக்கால மூலோபாய வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அபிவிருத்திப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரை அன்புடன் வரவேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டினார்.

அத்துடன், இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, ‘டித்வா’ போன்ற பாரிய அனர்த்த நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தமைக்கு அந்த பொருளாதார ஸ்திரத்தன்மையே காரணம் என்றும் குறிப்பிட்டார்.

‘டித்வா’ சவாலின் போது, நாட்டில் இதற்கு முன்னர் இருந்தது போன்று அரசியலையும் பொருளாதாரத்தையும் ஒன்றோடு ஒன்று அரசாங்கம் குழப்பிக் கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அடைந்துள்ள இந்தப் பொருளாதார முன்னேற்றத்தின் பலன்கள் சாதாரண மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் அடுத்த இலக்கு எனத் தெரிவித்தார்.

மேலும், அனர்த்த நிலைமையினால் நாட்டின் கிராமப்புற குறைந்த வருமானம் பெறும் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர் என்றும், அவர்களைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கும் மனித வள மேம்பாட்டிற்கும் அரசாங்கம் விரிவான வேலைத்திட்டத்தைத் திட்டமிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்லும்போது சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை மேலும் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபொன்சு உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து: சட்டமூலம் நிறைவேற்றம்!

நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்றையதினம் (17) நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட் விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 02 வாக்குகளும் பதிவாகின.

இதனைத் தொடர்ந்து குழு நிலையில் நாடாளுமன்றஉறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் சாமர சம்பத் ஆகியோர் சட்டமூலத்தின் மூன்றாவது பிரிவுக்கு திருத்தங்களை முன்வைத்தனர்.

அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லையென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது சாமர சம்பத் தனது திருத்தத்திற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு அமைய குறித்த சட்டமூலத்தை திருத்தங்கள் இன்றி நிறைவேற்றுவதற்கு ஆதரவாக 152 வாக்குகளும், முன்மொழியப்பட்ட திருத்தத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஆதரவாக 4 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அத்துடன், ரவி கருணாநாயக்கவினால்சட்டமூலத்தின் 4வது பிரிவுக்கு திருத்தம் முன்வைக்கப்பட்டதுடன், இதனை ஏற்றுக் கொள்ளவில்லையென நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சரினால் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது மதிப்பீட்டின் பின்னர் சட்டமூலம் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டமூலம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் 2026 ஜனவரி 07ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காகப் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

இதற்கு அமைய குறித்த சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.

பிரிட்டன் துணை பிரதமர் – எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு!

நாட்டிற்கு முக்கியமான பல விடயங்கள் குறித்து கலந்துரையாட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கிலாந்தின் பிரதிப் பிரதமர் டேவிட் லாமியை சந்தித்தார்.

வர்த்தக சீர்திருத்தங்கள், சட்டவாக்கப் பிரச்சினைகள் மற்றும் சூறாவளி டித்வா பேரிடர் மீட்சி தொடர்பான விசேட கலந்துரையாடலுக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லாமியும் இன்று (17) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

ஜனநாயக ஆட்சி, வர்த்தக விரிவாக்கம் மற்றும் இருதரப்பு மானுட ஒத்துழைப்பு ஆகியவற்றை விரிவாக கலந்துரையாடும் நோக்கத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இச்சந்திப்பை ஏற்பாடு செய்தார். இதில் முதன்மையாக ஆட்சி, சட்டத்தின் ஆட்சி, காலநிலை நீதி (Climate Justice), மனித உரிமைகள் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய துறைகளில் அதிகாரபூர்வ வளர்ச்சி உதவியை சீர்திருத்துவதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எடுத்துரைத்தார்.

மேலும் கொள்கை ரீதியான ஜனநாயக மதிப்புகளை, மக்களை மையமாகக் கொண்ட பொருளாதார தீர்வுகளுடன் சமநிலைப்படுத்துவது ஆட்சியில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அவர் இங்கு எடுத்துக்காட்டினார்.

🟩 ஆட்சி மற்றும் ஊழல் எதிர்ப்புக் கொள்கை

ஊழலுக்கு எதிரான அரசு குழுவின் (GRECO) மற்றும் அதன் உலகளாவிய எதிர்ப்பு இயக்கத்தின் (Anti-Kleptocracy Campaign) தலைவராக இங்கிலாந்தின் தலைமையை பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர், வெளிப்படையான நிறுவனங்களுக்கான அவசியத்தை இங்கு வலியுறுத்தினார். அத்துடன் இலங்கையில் பொது நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் நிலையான பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்தவும் பொறுப்புக்கூறல் நடைமுறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் தெரிவித்தார்.

🟩 வர்த்தக உறவுகள் மற்றும் பொருளாதார பல்வகைமையாக்கம்

இலங்கை – ஐக்கிய இராச்சியம் இடையேயான வர்த்தகம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்ட இதில், ஐக்கிய இராச்சியம் இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி இலக்கு நாடாக இருப்பதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். மேலும் 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வர்த்தக கூட்டாண்மை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

1. வர்த்தக அளவு: 2025 மூன்றாம் காலாண்டுடன் முடியும் நான்கு காலாண்டுகளில் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த வர்த்தகம் சுமார் 1.7 பில்லியனை எட்டியுள்ளது, இது ஆண்டுதோறும் 10.2% அதிகரிப்பை பிரதிபலிக்கிறது.

2. ஏற்றுமதி ஆதிக்கம்: இங்கிலாந்துக்கு இலங்கையின் ஏற்றுமதி 1.2 பில்லியனாக உள்ளது, ஆடை ஆலை இந்த வருவாயில் 73% பங்களிக்கிறது.

3. எதிர்கால வளர்ச்சி: இதில் தலைவர்கள் மூலோபாய வளர்ச்சி முயற்சிகளை கலந்துரையாடினர். இது பாரம்பரிய ஆடைகளுக்கு அப்பால் ரப்பர், ஆடம்பர மற்றும் உயர்தர இடையகப் பொருட்களாக ஏற்றுமதியை பல்வகைமையாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

🟩 அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தக திட்டம் (DCTS) சீர்திருத்தம்

 

2026 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்த தாராளமயமாக்கப்பட்ட தோற்றுவாய் விதிகளை அமுல்படுத்திய ஐக்கிய இராச்சியத்தின் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தக திட்டத்தின் (DCTS) மாற்றகட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வரவேற்றார். இலங்கை தொழில்களுக்கான குறிப்பிட்ட நன்மைகளை அவர் இங்கு தெரிவித்தார்:

1. சுங்க வரியில்லாத அணுகல்: இலங்கை உற்பத்தி வரிசைகளில் 92%க்கும் அதிகமானவை இப்போது இங்கிலாந்தின் சந்தையில் சுங்க வரியில்லாத அணுகலுக்கு தகுதி பெறுகின்றன.

2. உலகளாவிய மூலங்கள்: ஆடை உற்பத்தியாளர்கள் இப்போது பூஜ்ஜிய சுங்க வரி அணுகலை அனுபவிக்கும் அதே வேளையில் தங்கள் மூலப்பொருட்களை (துணி மற்றும் நூல்) உலகின் எங்கிருந்தும் 100% பெறலாம்.

3. எளிமைப்படுத்தப்பட்ட இணக்கம்: “இரட்டை மாற்றம் (double transformation)” விதியை நீக்குவதன் மூலம் உற்பத்தி தேவைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் சிறு, நடுத்தர மற்றும் நுண் நிறுவனங்கள் (MSMEs) மற்றும் புதிய தொடக்கங்களுக்கான செலவை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளது.

4. பிராந்திய திரட்டல்: உற்பத்தியாளர்கள் இப்போது “தோற்றுவாய்” தகுதியை பராமரிக்கும் அதே வேளையில் ஆசிய பிராந்திய திரட்டல் குழுவிலிருந்து (18 நாடுகள்) இடுபொருட்களை பயன்படுத்தலாம்.

🟩 PSTA மற்றும் நிகழ்நிலைக் காப்பு

இதில் இருதரப்பினரிடையேயும் சட்ட விடயங்கள் தொடர்பாக கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது, அதில் முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் (PSTA) மற்றும் நிகழ்நிலைக்காப்பு சட்டம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டது. சட்டத்தின் “கொடுமையான” பயன்பாடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கருத்தை முன்வைத்தார். குறிப்பாக அரசியல் எதிர்ப்பு மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளை குற்றமாக கருதக்கூடிய பயங்கரவாதம் பற்றிய விரிவான விளக்கங்களுக்கு எதிராக இந்த சட்டங்கள் பயன்படுத்தப்படலாம் என்று அவர் எச்சரித்தார். நிர்வாகம் அல்ல, நீதித்துறை சட்ட விளக்கங்களை வழிநடத்த வேண்டும் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார். நிகழ்நிலைக் காப்பு தொடர்பாக, குழந்தைகளைப் பாதுகாக்கும் அவசியத்தை ஒப்புக்கொள்ளும் அதே வேளையில், சிவில் சுதந்திரத்தை மீறாமல் விதிமுறைகள் இங்கிலாந்தின் தரங்கள் மற்றும் சர்வதேச நடைமுறைகளுடன் ஒத்திருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

🟩 டிட்வா சூறாவளிக்குப் பின்னர் மீட்சி

2025 ஆம் ஆண்டின் இறுதியில் சூறாவளி டிட்வா ஏற்படுத்திய பேரழிவிற்கு பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் “இறையாண்மை ஒற்றுமை (Sovereign Solidarity)” க்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். 2025 டிசம்பரில் மானுட உதவி தொகுப்பை 1 மில்லியனாக (சுமாமர்1.32 மில்லியன்) அதிகரித்ததற்காக அவர் இங்கிலாந்தின் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். செஞ்சிலுவைச் அமைப்பு, UNOPS மற்றும் உள்நாட்டு பங்குதாரர்கள் மூலம் இந்த நிதி அனுப்பப்பட்டது:

1. சேதமடைந்த வீடுகளுக்கு அவசர தங்குமிடம் மற்றும் பழுதுபார்ப்பு;

2. நோய் தடுப்புக்காக தூய்மையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள்; மற்றும்

3. பாதிக்கப்பட்ட 1.8 மில்லியன் மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்குவதற்காக இவை பயன்படுத்தப்பட்டன.

இறுதியில், இரு நாடுகளுக்கிடையேயான ஆழமான வரலாற்று உறவுகளை வலுப்படுத்தும் வகையில் மூன்றாம் சார்ல்ஸ் மன்னர் அனுப்பிய தனிப்பட்ட இரங்கல் செய்திக்காகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நன்றியை தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் பிரதிப் பிரதமர் லாமியுடன் உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக், பிரத்தியேக செயலர் சுக்விந்தர் சோதி, துணை பிரதமரின் சர்வதேச பிரிவின் தலைவர் டேவிட் மேயர், சிறப்பு ஆலோசகர் பியோனா மேகர் மற்றும் முதல் செயலர் (அரசியல்) டாம் சோபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சந்திப்பின் முடிவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதிப் பிரதமர் லாமியின் அறிவுசார் பங்களிப்புக்காக வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அவரது Out of the Ashes: Britain After the Riots (2011) மற்றும் Tribes: How Our Need to Belong Can Make or Break Society (2020) என்ற நூல்களையும் பாராட்டி, சமூக ஒருங்கிணைப்பு மற்றும் அடையாளம் பற்றிய அவற்றின் ஆய்வு நல்லிணக்கத்திற்கு முக்கியமான பாடங்களை உள்ளடக்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

இறுதியாக, இலங்கையில் யானைகளைப் பாதுகாத்தல் மற்றும் அதிகரித்து வரும் மனித-யானை மோதலை தீர்ப்பதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அவர் யோசனை முன்வைத்தார். யானை-மனித நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட கிராமப்புற சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்தும் அதே வேளையில் உயிரினப் பன்முகத்தன்மையை பாதுகாக்க நிலைபேறான பாதுகாப்பு மூலோபாங்கள், அறிவியல் நிலப் பயன்பாட்டு திட்டமிடல், சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச தொழில்நுட்ப உதவி தேவை என்பதையும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

 

இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு பிரிட்டன் முழு ஆதரவு: துணை பிரதமர் உறுதி!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லம்மிக்கும் (David Lammy) இடையிலான சந்திப்பு இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

கடந்த பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளிக்குப் பின்னர் நாடு மீண்டெழுந்து வரும் வேளையில், இலங்கைக்கு வருகை தந்தமைக்காக துணைப் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றிகளைத் தெரிவித்தார். துணைப் பிரதமரின் இந்த விஜயம், இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் பணிகள் மீதான சர்வதேச நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன், ‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் மீளக் கட்டியெழுப்பும் பணிகள் குறித்து துணைப் பிரதமருக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதற்காகத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கு சுற்றுலாத்துறை, ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இதில் அனைத்து நட்பு நாடுகளின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும், ஐக்கிய இராச்சியம் இதில் ஒரு தனித்துவமான பங்களிப்பினை வகிக்க முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கைக்கும் இடையே நிலவும் நீண்டகால நட்புறவை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, சுற்றுலாத் துறை மற்றும் ஏற்றுமதிச் சந்தையில் ஐக்கிய இராச்சியம் வழங்கி வரும் பாரிய பங்களிப்பைப் பாராட்டினார். குறிப்பாக, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் போதும், இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்காக விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரியினை நீக்கி, வழங்கிய விசேட ஆதரவிற்கும் தனது நன்றியினைத் தெரிவித்தார்.

ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கை இடையிலான பிணைப்பு மிகவும் விசேடமானது எனக் குறிப்பிட்ட துணைப் பிரதமர் டேவிட் லம்மி, இலங்கைக்கு மிக நெருக்கமான நாடாகச் செயற்படுவதை எப்போதும் உயர்வாகக் கருதுவதாகத் தெரிவித்தார். அத்துடன், இலங்கை தற்போது முன்னெடுத்து வரும் பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களுக்காகத் தனது நாடு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் பணிகள், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் சாதகமான வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய இராச்சியத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும் என்றும் துணைப் பிரதமர் உறுதியளித்தார்.

போருக்குப் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் தற்போதைய அரசாங்கம் பின்பற்றும் வேலைத்திட்டங்கள் மற்றும் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள விரிவான அபிவிருத்திப் பணிகள் குறித்தும் பாராட்டுத் தெரிவித்த அவர், அவற்றுக்கும் ஆதரவு வழங்குவதாகக் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் (Andrew Patrick), துணைப் பிரதமரின் சர்வதேச பிரிவின் தலைவர் டேவிட் மேயர் (David Meyer) உள்ளிட்ட பிரித்தானிய தூதுக்குழுவினரும், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

பாரிய தாக்குதலுக்கு தயாராகும் ட்ரம்ப்: வலுக்கிறது எதிர்ப்பு!

0
ஈரான் மீதான ராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் போன்ற மக்கள் பயன்பாட்டு இடங்களைத்...

கைது, தடுப்புக்காவலுக்கு எதிராக சுரேஷ் சாலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு

0
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தனது கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக, அவசர தலையீட்டைக் கோரி, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். அவர்...

மரக்கறி விலைப்பட்டியல் (07.04.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...