Home Blog Page 96

காணிகளை நன்கொடையாக வழங்க வாய்ப்பு!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக ஏராளமான மக்கள் தமது வீடுகளையும் சொத்துக்களையும் இழந்துள்ளதால், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் அரசாங்கம் Rebuilding Sri Lanka
வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, அனர்த்தத்தால் வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்த குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் தற்போது நடைபெற்று வருவதோடு, அதற்காக நாடு பூராகவும் உள்ள நன்கொடையாளர்களுக்கு காணிகளை நன்கொடையாக வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

www.rebuildingsrilanka.gov.lk என்ற இணையத்தளத்தில் அல்லது 1800 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலம் இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். காணி நன்கொடையாளர்கள் பற்றிய தகவல்களை 0112331246 என்ற தொலைநகல் (Fax) இலக்கத்திற்கு அனுப்பி வைக்கலாம்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட எந்தவொரு பிரஜையையும் கைவிடாது, அவர்களின் வாழ்க்கையை முன்பை விட உயர்ந்த தரத்திற்கு மீண்டும் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

அந்த சகோதர மக்களுக்காக, Rebuilding Sri Lanka வேலைத்திட்டத்துடன் கைகோர்க்குமாறு, நாடு பூராகவும் உள்ள அனைத்து நன்கொடையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடலோரக் காவல்படை கப்பல்கள்

இந்திய கடலோர காவல்படையின் இரண்டு ரோந்துக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளன.

“வராஹா” (Varaha) மற்றும் “அதுல்யா” (Atulya) ஆகிய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்த போது, சிறிலங்கா கடற்படையினரால், கடற்படை சம்பிரதாயங்களுக்கு அமைவாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

96.2 மீட்டர் நீளமான கடல்சார் ரோந்துக் கப்பலான “வராஹா” கப்பல், கட்டளை அதிகாரி அஷ்வினி குமாரினால் வழிநடத்தப்படுகிறது.

50 மீட்டர் நீளமான அதிவே ரோந்துக் கப்பலான “அதுல்யா” கப்பல், கட்டளை அதிகாரி அனித் குமார் மிஸ்ராவினால் வழிநடத்தப்படுகிறது.

இந்தக் கப்பல்கள்இலங்கைகடலோர காவல்படையினருடனான பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (26.01.2026)

மரக்கறி விலைப்பட்டியல் (26.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து ஸ்ரீதரனை நீக்க முடிவு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் பணிப்பை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்தால், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியை அவரிடமிருந்து மீளப் பெற கட்சி தீர்மானித்துள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடியில் நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சுமந்திரன் இவ்விடயம் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“சிறீதரனுக்கு நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியானது தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவினாலேயே வழங்கப்பட்டது.

தேர்தல் முடிந்த பின்னர் வவுனியாவில் அரசியல் குழுவின் கூட்டத்தில் அந்த நேரத்தில் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டார்.

அந்த நேரத்தில் தேசியப் பட்டியல் ஆசனத்தை வைத்தியர் சத்தியலிங்கத்துக்கு வழங்குவதற்கும் அந்த அரசியல் குழுக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்பட்டது.

அதேபோன்று நாடாளுமன்றத்தில் கொறடா பதவியை வைத்தியர் சத்தியலிங்கத்துக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டதுடன் நாடாளுமன்ற நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனையும் நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

நாடாளுமன்ற குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை நாங்கள் நியமித்தோம்.

நேற்று திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்தில் இவை பற்றி ஆராயப்பட்டன.

அரசியல் குழுவினால் நியமிக்கப்பட்ட நியமனங்களை மாற்றுவதற்கான அதிகாரம் அரசியல் குழுவுக்கே இருக்கின்றது. எந்தக் குழு நியமித்ததோ அதனை மாற்றுவதற்கு அதிகாரம் அந்தக் குழுவுக்கு உண்டு.

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்ததன் காரணத்தால் அரசியல் குழுவினால் வழங்கப்பட்ட நியமனத்தை மீளப்பெறுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

அரசியல் குழு அவர் மீது நம்பிக்கை வைத்து ஏகமனதாக நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியை அவருக்கு வழங்கியது. அதே அரசியல் குழு இரண்டு தடவைகள் அவர் அரசமைப்புக் கவுன்ஸிலிலிருந்து இராஜிநாமாச் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை ஏகமனதாக வழங்கியிருந்தது. நேற்றைய தினம் சுமார் நான்கு மணி நேரம் அதே கருத்தை அவரிடம் வலியுறுத்தியிருந்தோம்.

ஆகவே கட்சியின் எந்த உயர் குழு அவருக்கு அந்தப் பதவியை வழங்கியதோ, அந்தக் குழுவின் ஆலோசனையையும் வற்புறுத்தலையும் அவர் செவிமடுக்கவில்லையென்றால் அந்தப் பதவியை அவரிடமிருந்து எடுப்பது எனத் தீர்மானித்தோம்.” – என்றார்.

கிவுல்ஓயா திட்டம் மக்களுக்கானது:அமைச்சர் விளக்கம்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மறுத்துள்ளார்.

குறித்த திட்டம் இன அல்லது மத அடிப்படையிலான நோக்கங்களுடன் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறானதும், அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் தவறான தகவல்களுமே என அவர் தெரிவித்துள்ளார்.

கிவுல் ஓயா திட்டம், குறிப்பிட்ட ஒரு இனத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானதாக அல்லாது, தேசிய அபிவிருத்தி, விவசாய வளர்ச்சி மற்றும் நீர்வள முகாமைத்துவத்தை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு அரசாங்கத் திட்டம் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

“இந்த ஆட்சியின்கீழ் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எந்தவிதமான இடமும் இல்லை. அனைத்து மக்களையும் சமமாகக் கருதும் கொள்கையுடனேயே அரசாங்கம் செயல்படுகிறது” என அவர் தெளிவுபடுத்தினார்.

தமிழ்க் கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின் படி, கிவுல் ஓயா திட்டம் பாரம்பரிய தமிழ்ப் பகுதிகளில் நில அபகரிப்பையும், மக்கள் தொகை மாற்றத்தையும் நோக்கமாகக் கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், உள்ளூர் மக்களின் சம்மதமின்றி திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்க மதிப்பீடுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சந்திரசேகர், தமிழ் மக்களின் நில உரிமைகளும், சமூக உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும், எந்த ஒரு சமூகமும் அநீதிக்குள்ளாக்கப்பட அனுமதிக்கப்படமாட்டாது என்றும் உறுதியளித்தார். சட்டத்துக்கு முரணான நில கையகப்படுத்தல்கள் எதுவும் இடம்பெறாது என்றும், திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உரிய சட்ட நடைமுறைகளின் கீழேயே மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கிவுல் ஓயா திட்டத்தின் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய உற்பத்தி அதிகரிக்கப்படுவதோடு, ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு நிலையான நீர்ப்பாசன வசதி கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார். இந்த திட்டத்தை இன அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், நாட்டின் நீண்டகால அபிவிருத்தித் தேவையாகக் கருதி அணுக வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் வடக்கில் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன.

அந்த காலகட்டங்களில் எல்லாம் அரசாங்கத்துடன் ஒட்டுனியாக இருந்த தமிழ் கட்சிகள் இன்று தமிழ் மக்களுக்கு நன்மை நடக்கும் பொழுது பொங்கி எழுகின்றன.

தமது அரசியல் இருப்புக்கு இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியால் தான் ஆபத்து என்பதால் தான் அவர்கள் மக்கள் நலன் திட்டங்களில் கூட அரசியல் சாயம் பூசி ஒரு இழிவான அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.

பாதுகாப்பு செயலரை அமெரிக்க தூதுவராக நிமித்தது ஆஸ்திரேலியா!

அமெரிக்காவுக்கான ஆஸ்திரேலியாவின் புதிய தூதுவராக பாதுகாப்பு செயலாளர் கிரேக் மோரியார்டி Greg Moriarty நியமிக்கப்படவுள்ளார்.

இது தொடர்பான அறிவித்தலை பிரதமர் அந்தோனி அல்பானீஸி Anthony Albanese
இன்று வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான பரிந்துரை ஆளுநர் நாயகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் கூறினார்.

ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதில் மோரிpயார்டி முக்கிய பங்கு வகிப்பார்.” என பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

2017 ஆம் ஆண்டு முதல் இவர் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிவந்தார். சர்வதேசக் கொள்கை தொடர்பில் அனுபவம் உள்ள் மூத்த அரச அதிகாரியாவார்.

2010 முதல் 2014 வரை இந்தோனியாவுக்கான தூதுவராகவும், 2005 முதல் 2008 வரை ஈரானுக்கான தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.

அமெரிக்காவுக்கான ஆஸ்திரேலிய தூதுவராக பதவி வகித்த கெவின் ரூட், ஓராண்டுக்கு முன்னதாகவே பதவி விலகும் அறிவிப்பை அண்மையில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகள்மீது ட்ரம்ப் வரிப்போரை தொடுத்துள்ளார்.
அதேபோல ஆக்கஸ் பாதுகாப்பு கூட்டணி விவகாரமும் இழுபறியில் உள்ளது. எனவேதான் அனுபவம்மிக்க அதிகாரியை வாஷிங்டனுக்கான தூதுவராக கன்பரா களமிறக்கியுள்ளது.

78 அரசியல் கட்சிகளின் பதிவு விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

அரசியல் கட்சியாக பதிவுசெய்யுமாறுகோரி 2025 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட 83 விண்ணப்பங்களில் 78 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியாக அங்கீகரிக்கத் தேவையான அடிப்படை அளவுகோல்களை பூர்த்தி செய்யத் தவறியதே பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய ஐந்து விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசியல் கட்சிக்குரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல் அரங்கம், சமத்துவ கட்சி மற்றும் புரட்சிகர மக்கள் சக்தி என்பனவே புதிதாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாகும்.

இவற்றுடன் இலங்கையில் தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது.

தமிழரசுடன் இணைந்து பயணிக்க நாம் தயார்!

“இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் நாம் இணைந்து பயணிக்கவும், எதிர்வரும் தேர்தல்களில் சேர்ந்து போட்டியிடவும் எந்தத் தடையும் இல்லை. எனினும், தமிழரசுக் கட்சி வெறுமனே தேர்தலை மையமாகக் கொண்டு இயங்காமல், ஒரு கொள்கையை முன்வைத்து அணிதிரட்டலை மேற்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்கள் கூட்டணிக்கு நல்லூர் பிரதேச சபையில் ஆட்சியமைக்க வேண்டிய தேவை இருந்தது. அதனால், இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் ஏற்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் அங்கு ஆட்சியமைத்தோம். அதேபோன்று, வேறு உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு நாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம். இதை மறுக்க முடியாது.

அதேநேரம், எதிர்வரும் தேர்தல்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் நாம் ஒற்றுமையாக இணைந்து போட்டியிடுவதற்கும் எவ்வித தடையும் இல்லை. அவர்களுடன் இணைந்து பயணிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது.

ஆனால், தமிழரசுக் கட்சி தேர்தல் அரசியலுக்குள் மட்டுமே சிக்கிக்கொள்ளாமல், ஒரு கொள்கையையும் ஒழுக்க நெறிகளையும் முன்னிலைப்படுத்தி ஒரு வலுவான அணிதிரட்டலை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செயற்பட்டால், நாங்கள் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிப்பதில் எந்தத் தடையும் இருக்காது.” – என்றார்.

கல்வி மறுசீரமைப்பு அவசியம்: 15 ஆண்டுகளுக்கு அரசாங்கத்தை அசைக்க முடியாது!

“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அடுத்த 15 வருடங்களுக்கு அசைக்க முடியாது.”- என்று அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஊழல், மோசடிக்கு இடமில்லை. நாம் மக்கள் மத்தியில் உண்மையைக் கூறி செயல்பட்டுவருகின்றோம்.எனவே, எமது ஆட்சி தொடர்வதற்கு மக்கள் ஆணை வழங்குவார்கள்.

நவீன உலகை வெல்ல வேண்டுமெனில் கல்வி மறுசீரமைப்பு அவசியம். அதனை செய்வதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது.

எனினும், கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையில் இடம்பெற்றுள்ள ஒரு பிழையை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த மறுசீரமைப்பையும் குழப்புவதற்கு முற்படுகின்றனர்.

இது எமது நாட்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை சீரழிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.”- என்றார் ராமலிங்கம் சந்திரசேகர்.

50,000 ரூபா கொடுப்பனவு 70% வழங்கப்பட்டுள்ளது!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் 50,000 ரூபா கொடுப்பனவு 70% வழங்கப்பட்டுள்ளது

 25,000 ரூபா கொடுப்பனவு 97% நிறைவு
 பாடசாலை மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்குதல் 73% ஆகும்
 சிறிய மற்றும் மத்தியதர தொழில்முயற்சியாளர்களை மீட்டெடுக்க தலா 02 இலட்சம் ரூபா உதவித்தொகை

டித்வா சூறாவளியின் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றவும், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் அரசாங்கம் வழங்கும் இழப்பீட்டுத் தொகையை முறையான முகாமைத்துவத்துடன் அந்த மக்களுக்கு வழங்கும் பணிகள் தற்போது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, டித்வா சூறாவளியின் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக சமையலறை உபகரணங்கள் கொள்வனவிற்கு அரசாங்கம் வழங்கும் 50,000 ரூபா கொடுப்பனவில் தற்போது 70% வழங்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்டுள்ளது.

25 மாவட்டங்களில் மொத்தம் 156,805 குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவுக்காகக் கணக்கிடப்பட்டதுடன், அவற்றில் 109,512 குடும்பங்களுக்கு இதுவரை குறித்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் 1,191 குடும்பங்கள் இந்த உதவித்தொகையைப் பெற தகுதி பெற்றிருந்ததுடன், அந்த அனைத்து குடும்பங்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மாத்தளை மாவட்டத்தில் 1,253 குடும்பங்களில் 1,143 குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதுடன், அது 91% முன்னேற்றம் ஆகும். கண்டி மாவட்டத்தில் 8,409 குடும்பங்களில் 7,083 குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அது 84% முன்னேற்றம் ஆகும்.

காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, அம்பாறை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் 50,000 ரூபா கொடுப்பனவு வழங்க கணக்கிடப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கி நிறைவு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் ரூபா 50,000 கொடுப்பனவு 98% வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 99% பயனாளிகளுக்கும், குருநாகல் மாவட்டத்தில் 91% வீதமானவர்களுக்கும், அநுராதபுர மாவட்டத்தில் 84% பயனாளிகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் 93% பயனாளிகளுக்கும் உதவித்தொகை விநியோகிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்தத்திற்குப் பின்னர் வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 25,000 ரூபா உதவித்தொகையை செலுத்துவதில் மொத்த முன்னேற்றம் 97% ஆகும்.

25 மாவட்டங்களில் 435,104 குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவைப் பெறத் தகுதி பெற்றிருந்ததுடன், அவற்றில் 422,900 குடும்பங்களுக்கு இதுவரை இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை, நுவரெலியா, காலி, ஹம்பாந்தோட்டை, கிளிநொச்சி, அம்பாறை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தகுதிபெற்ற அனைத்து குடும்பங்களுக்கும் கொடுப்பனவு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் 25,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதில் 99% முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் 95%, யாழ்ப்பாண மாவட்டத்தில் 88%, மன்னார் மாவட்டத்தில் 94%, வவுனியா மாவட்டத்தில் 99%, முல்லைத்தீவு மாவட்டத்தில் 98%, மட்டக்களப்பு மாவட்டத்தில் 98%, திருகோணமலை மாவட்டத்தில் 98%, குருநாகல் மாவட்டத்தில் 98%, புத்தளம் மாவட்டத்தில் 97%, அநுராதபுர மாவட்டத்தில் 98%, பொலன்னறுவை மாவட்டத்தில் 97%, இரத்தினபுரி மாவட்டத்தில் 99% மற்றும் கேகாலை மாவட்டத்தில் 90% ஆகிய பகுதிகளுக்கு 25000 ரூபா கொடுப்பனவு வழங்கி நிறைவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 15,000 ரூபா உதவித்தொகை கணக்கிடப்பட்ட எண்ணிக்கையில் 73% பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படம் 10,000 ரூபா கொடுப்பனவும் இந்நாட்களில் வழங்கப்படுகிறது.

நாட்டின் 25 மாவட்டங்களிலிருந்து 186,893 மாணவர்கள் 15,000 ரூபா உதவித்தொகையைப் பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் 136,994 மாணவர்கள் இதுவரை அந்த உதவித்தொகையைப் பெற்றுள்ளனர்.

அதன்படி, எஞ்சியுள்ளவர்களுக்கான குறித்த கொடுப்பனவுகளை விரைவாக வழங்கி முடிக்க அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருவதோடு, அதற்காக அரச பொறிமுறை பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்பட்ட “டித்வா” சூறாவளியால் பாதிக்கப்பட்ட 6370 தொழில்துறை உரிமையாளர்களின் தகவல்கள் இதுவரை சரிபார்க்கப்பட்டுள்ளதுடன், ஒரு முறை மாத்திரம் வழங்கப்படும் தலா 200,000 ரூபா கொடுப்பனவை 5034 விண்ணப்பதாரர்களுக்கு வழங்குவதற்காக 1,006,800,000 ரூபா நிதி ஒதுக்கீட்டை மாவட்ட செயலகங்களுக்கு அமைச்சு வழங்கியுள்ளது.

‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ், அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் PROJECT 5M வேலைத்திட்டம், கடந்த ஜனவரி 09 ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்பட்டது.

டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், அனர்த்தத்தால் முற்றிலுமாக வீடுகளை இழந்த, மீண்டும் அதே இடத்தில் தமது வீடுகளை நிர்மாணிக்க முடியுமான குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படுவதோடு, ஒவ்வொரு வீட்டிற்கும் 50 இலட்சம் ரூபா செலவிடப்படுகிறது.

அதே பகுதியில் மீள்குடியேற்றம் பொருத்தமானதல்ல என்று அறிவுறுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கத் தேவையான காணிகளை அடையாளம் காணும் பணியையும் அரசாங்கம் தொடங்கியுள்ளது.

அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,500 வீடுகள் உட்பட நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகள் நிர்மாணிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘தமெக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம், ஜனாதிபதியின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பயிர் சேதங்களுக்காக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதும் செயற்திறனுடன் தந்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அழிக்கப்பட்ட கால்நடை பண்ணைகள் குறித்த சரியான தரவு சேகரிக்கப்பட்டு, வழங்கப்பட வேண்டிய இழப்பீடு கணக்கிடப்படுகிறது.

அனர்த்தத்திற்குப் பின்னர் இயல்பு வாழ்வை மீட்டெடுப்பதில், முன்பு இருந்ததை விட, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த நிலைக்கு மேம்படுத்தும் வகையில் இந்தப் பணிக்ளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதன்படி, முறையான திட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்துடன், இந்நாட்டின் வரலாற்றில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிக இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 250 பேர் பலி: ஐ.நா. கண்டனம்

0
லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய தாக்குதல்களை ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் அவர் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், அங்கு நிலவும் சூழல் மிகவும் அபாயகரமானது...

கடைசி வரை நீடித்த பரபரப்பு: டெல்லியை வீழ்த்தியது குஜராத்!

0
ஐபிஎல் 2026 தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனின் தனது முதல் வெற்றியைப் பதிவு...

மரக்கறி விலைப்பட்டியல் (09.04.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...