Home Blog Page 98

நேட்டோ குறித்து சர்ச்சை கருத்து: ட்ரம்ப் மன்னிப்பு கோர வேண்டும் என்கிறார் பிரிட்டன் பிரதமர்!

நேட்டோ நாடுகள் தொடர்பில் தான் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மன்னிப்பு கோர வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

டென்மார்க் நாட்டின் அங்கமாக உள்ள கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றவில்லையென்றால் சீனா, ரஷ்யா கைப்பற்றிவிடும் எனவும் அவர் கூறி வருகிறார்.

மேலும், இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கவில்லையென்றால் கூடுதல் வரிவிதிப்பேன் என்று ஐரோப்பிய நாடுகளை டிரம்ப் மிரட்டி வருகிறார்.

டிரம்ப்பின் பேச்சுக்கு ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக வர்த்தக மன்ற மாநாட்டில் உரையாற்றி டிரம்ப், நேட்டோ அமைப்பில் அமெரிக்காவை தவிர பிறநாடுகளின் படைகள் முக்கிய பங்காற்றவில்லை என குறிப்பிட்டார்.

மேலும், ஆப்கானிஸ்தான் போரில் முன்களத்தில் அமெரிக்க படையினரே இருந்தனர், பிற நாடுகளின் படையினர் முன்களத்தில் இல்லை என்று கூறினார்.

நேட்டோ அமைப்பில் பிற நாடுகளை அமெரிக்கா சார்ந்திருக்கவில்லை. அவர்கள் எமக்கு தேவையுமில்லை. ஆப்கானிஸ்தானுக்கு படைகளை அனுப்பினோம் என்று அவர்கள் கூறுவார்கள். அவர்கள் அனுப்பினார்கள்…

ஆனால், அவர்களின் படைகள் போர் களத்தில் முன்களத்தில் இல்லை. அமெரிக்க படையினரே முன்களத்தில் இருந்தனர்’ என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

இந்நிலையில், டொனால்ட் டிரம்ப்பின் பேச்சு நேட்டோ மட்டுமின்றி தங்கள் நாட்டையும் அவமதிப்பதாக உள்ளதாகவும், இதற்கு டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிரிட்டனர் பிரதமர் கீர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை கடந்த 2001ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரில் நேட்டோ அமைப்பில் இருந்த பல்வேறு நாடுகள் பங்கேற்றன.

இங்கிலாந்து ராணுவ வீரர்கள் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்றனர். இந்த போரில் இங்கிலாந்து ராணுவ வீரர்கள் 457 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரை வெல்லுமா இலங்கை?

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று (24) நடைபெறவுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் RPS இலங்கை நேரப்படி போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும்.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ஆடவுள்ளது.

இதில் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் (22) ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இன்றைய ஆட்டத்திலும் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் இலங்கை அணி களமிறங்குகின்றது.

இந்திய அணி அபார வெற்றி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 208 ஓட்டங்கள் குவிந்தது.

இதையடுத்து, 209 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். சஞ்சு சாம்சன் 6 ரன்னில் வெளியேறினார்.அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி நியூசிலாந்து பந்து வீச்சை பதம் பார்த்தது. குறிப்பாக, இஷான் கிஷன் ருத்ர தாண்டவமாடி அரை சதம் கடந்தார்.

3வது விக்கெட்டுக்கு 122 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் இஷான் கிஷன் 32 பந்துகளில் 76 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் அரை சதம் கடந்தார்.

இறுதியில், இந்திய அணி 15.2 ஓவரில் 209 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

அரசமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் பிரதிநிதிகள் நியமனம்!

அரசமைப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் சில தினங்களுக்கு முன்னர் காலாவதியான நிலையில் அந்த இடத்துக்கு மூவர் நியமனம் பெற்றுள்ளனர்.

இது தொடர்பில் பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் இன்று நடைபெற்ற அரசமைப்புப் பேரவைக் கூட்டத்தில் இணக்கம் ஏற்பட்டது என்று தெரிகின்றது.

அதன்படி ஒஸ்ரின் பெர்னாண்டோ, ரஞ்சித் ஆரியரட்ன, பேராசிரியர் வசந்தா செனவிரட்ன ஆகியோர் சிவில் சமூகத்தின் சார்பில் புதிய உறுப்பினர்களாக அரசமைப்புப் பேரவைக்கு நியமனம் பெற்றுள்ளனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? சுவிஸிலிருந்து நாடு திரும்பியகையோடு பிரதமர் கேள்வி!

“எனக்கு எதிராக முன்வைக்கப்படும் எனக் கூறப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? ஆதனை எதிரணி மீளப்பெற்றுவிட்டதா?” என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சபையில் இன்று கேள்வி எழுப்பினார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் என்றுதானே சுவிஸில் இருந்து அவசரமாக வந்தேன், அந்த பிரேரணை எங்கே எனவும் அவர் சிரித்தப்படியே வினா தொடுத்தார்.

சுவிட்சர்லாந்தில் இருந்து இன்று பிற்பகல் நாடு திரும்பிய கையோடு நாடாளுமன்றம் வந்தார் பிரதமர்.

சபையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டு, எதிரணிக்கு உரிய பதிலடி கொடுத்தார்.

அதிகாரப் பகிர்வு அவசியம்: ராஜித வலியுறுத்து!

“மஹிந்த ஆட்சியின்போது அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்க போராடியவன் நான். எனவே, அதிகாரப் பகிர்வென்பது அவசியம். தமது பகுதியை தாமே ஆளக்கூடிய உரிமை தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டும்.”

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தினார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு இடித்துரைத்தார்.

“ போர் முடிவடைந்த கையோடு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்தேன்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்க அவரது அரசாங்கத்தில் இருந்தே போராடினேன்.

13 இல் கைவைத்தால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவேன் எனவும் அறிவித்திருந்தேன்.” என வும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

13 ஆவது திருத்தச்சட்டம் என்பதைவிட, தமிழ் மக்களுக்கு தமது பகுதிகளை ஆள்வதற்குரிய அதிகாரம் வேண்டும். இந்த நோக்கில்தானே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது.

நல்லாட்சியின்போது தீர்வைக் காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்பட்டது. எனினும், எமக்கு போதிய பெரும்பான்மை பலம் இருக்கவில்லை.

சமஷ்டி ஒரு பக்கம் இருக்கட்டும். 13 ஆவது திருத்தச்சட்டம் அரசமைப்பில் உள்ள ஓர் அங்கம். அதனை ஏன் அமுல்படுத்த முடியாமல் உள்ளது?” – என ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பினார்.

இந்த எதிரணியால் என்.பி.பி. அரசை அசைக்க முடியாது!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது. தற்போதைய எதிர்க்கட்சியால் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நெருக்கடி நிலையில் இருந்த நாட்டையே நாம் பொறுப்பேற்றோம். இதற்கிடையில் பேரிடரும் ஏற்பட்டது. எனினும், சவாலை நாம் எதிர்கொண்டோம்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

நாட்டில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது நாட்டுக்கு கிடைக்கப்பெற்ற உதவிகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஆனால் எமது ஆட்சியில் அவ்வாறு நடக்கவில்லை. மக்களுக்குரிய உதவித் திட்டங்கள் வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டன.

அதேவேளை, நாட்டுக்கு தேவையானதொரு எதிர்க்கட்சி எமது நாட்டில் இல்லை என்பதும் பேரிடராகும்.

நாட்டுக்காக இணைந்து செயல்படவேண்டிய தருணங்களில்கூட பொறுப்பை மறந்து, எதிரணிகள் அரசியல் நடத்தும் நிலை காணப்படுகின்றது.

பாதாள குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது சில எதிரணி அரசியல் பிரமுகர்களுக்கு நடுக்கம் ஏற்படுகின்றது. ஊழல், மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போதும் அவர்களுக்கு ஆட்டம் ஏற்படுகின்றது.

மிகவும் மோசமான முறையிலேயே பிரதான எதிரணி செயல்பட்டுவருகின்றது. இந்த எதிர்க்கட்சியால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. ஏனெனில் அரசாங்கம் சிறப்பாக செயல்படுகின்றது.”- என்றார்.

இலங்கைக்கு 100 மின்சார சொகுசு பேருந்துகளை வழங்குகிறது சீனா!

மின்சாரத்தால் இயங்கும் 100 நவீன சொகுசு பேருந்துகளை இலங்கைக்கு, சீனா விரைவில் வழங்கவுள்ளதாக, சீனத் தூதுவர் கி சென்ஹொங், தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழங்க திட்டமிடப்பட்டுள்ள பேருந்து ஒவ்வொன்றும் சுமார் 225,000 அமெரிக்க டொலர் பெறுமதியானவை என்றும், சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று, மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே சிறி சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட சிறி ஞானரதன தேரர் ஆகியோரைச் சந்தித்த போதே, கீ சென்ஹொங் இதனைக் கூறியுள்ளார்.

இன்றைய போட்டியில் வெல்லும் அணி எது?

இந்தியா, நியூசிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

இதையடுத்து, கடந்த 21ம்திகதிஇரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. மராட்டிய மாநிலம் நாக்பூரில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

ஆக்கிரமிப்பை அமெரிக்கா நிறுத்தினால் மட்டுமே ஹார்முஸ் நீரிணை திறக்கப்படும்!

0
ஈரானிய அமைச்சர் கதிப்ஸாதே , ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்வதற்கான பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விவாதித்துள்ளார். அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே இந்தப் பாதை மீண்டும் முழுமையாகத் திறக்கப்படும் என்று...

ஈரான்மீது பாரிய ராணுவத் தாக்குதல்: ட்ரம்ப் எச்சரிக்கை!

0
ஈரானுடனான ஒப்பந்தம் முழுமையாக பின்பற்றப்படும்வரை அமெரிக்கப் படைகள் அப்பகுதியிலேயே நிலைநிறுத்தப்படும் என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்த உடன்படிக்கையை மீறினால் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் தனது...

இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 250 பேர் பலி: ஐ.நா. கண்டனம்

0
லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய தாக்குதல்களை ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் அவர் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், அங்கு நிலவும் சூழல் மிகவும் அபாயகரமானது...