சமரச முயற்சி: நாளை அமெரிக்கா செல்கிறார் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்!

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார் (Ishaq Dar) நாளை (29) வெள்ளிக்கிழமை வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொள்கின்றார்.

இதன்போது அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரானுடனான அமெரிக்க – இஸ்ரேலியப் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கு பாகிஸ்தான் ராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது.

பாகிஸ்தான் பிரதிநிதிகள் சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் வாஷிங்டன் பயணமாகின்றார்.

Related Articles

Latest Articles