“மின்சார ரயில் சேவையை அடுத்த ஆண்டு ஆரம்பிக்கத் திட்டம்”

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கொழும்பு புறநகர் ரயில்வே திட்டம் (Colombo Suburban Railway Project) குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் களனிவெளி ரயில் பாதையில் மருதானையிலிருந்து மாகும்புர, பிரதான ரயில் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து ராகம, கரையோர ரயில் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை வரை முதலாவது கட்டமாக செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வது மற்றும் திட்ட அமுலாக்கத்தின் போது எதிர்நோக்கக்கூடிய சவால்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

தற்போதுள்ள ரயில் சேவைக்கு இணையாக மின்சார ரயில் சேவைகளை முன்னெடுப்பதுடன், தற்போதுள்ள அகலப் பாதைகளுக்கு (Broad Gauge) பதிலாக நியமப் பாதைகளாக (Standard Gauge) ரயில் தண்டவாளங்களை புனரமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் இதன் போது ஆலோசிக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க,போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும,போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார மற்றும் நிதி, போக்குவரத்து அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles