அடுத்த உலகக்கிண்ண தொடருக்கு 64 அணிகளை உள்ளீர்க்க திட்டம்

ஆண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரை 64 அணிகள் பங்கேற்கும் தொடராக விரிவுபடுத்துவது குறித்த திட்டங்கள் தற்போதைய 2026 தொடருக்குப் பிறகு பரிசீலிக்கப்பட உள்ளதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரானது முழு உலகிற்குமானதாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கான இந்த முன்மொழிவு கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்டது.

தற்போது 48 அணிகளுடன் நடத்தப்படும் உலகக் கோப்பை தொடரின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, 64 அணிகள் கொண்ட உலகக் கோப்பை தொடரை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது குறித்து FIF ஆராய வேண்டும் என்று இன்ஃபான்டினோ கூறியுள்ளார்.

“ஒரு உலகக் கோப்பையை ஏற்பாடு செய்யும்போது, அது ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவிற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகிற்குமானதாக அமைய வேண்டும் என்பது முக்கியம்.

ஒவ்வொரு நாடும் உலகக் கோப்பையில் பங்கேற்பதைக் கனவு காண அனுமதிக்கப்பட வேண்டும்.”எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles