IPL தொடரில் இன்று நடைபெறும் 69 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி ஆரம்பமாகும்.
IPL தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
நடப்பு சாம்பியனான ஆர்சிபி (நிகர ரன் விகிதம் 0.783), முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ் (0.695 ), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (0.524) ஆகிய அணிகள் தலா 18 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களை பிடித்து e play-off சுற்றுக்கு முன்னேறிவிட்டன.
மீதம் உள்ள ஓர் இடத்துக்கு பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
2007-ம் ஆண்டு சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 6 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
play-off சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது ராஜஸ்தான் அணி.
இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் எந்தவித சிக்கலும் இல்லாமல் கடைசி அணியாக Play off சுற்றில் கால்பதிக்கும்.
மாறாக இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தால் பஞ்சாப் (13 புள்ளிகள்), கொல்கத்தா (13 புள்ளி) அணிகளின் கடைசி ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க நேரிடும்.
அதேவேளை, இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் 70 ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.
