மும்பையை வீழ்த்தி பஞ்சாப் முதலிடம்

ஐபிஎல் 2026 தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.

குயின்டன் டி காக் அடித்த சதம் வீணானது. இந்தத் தோல்வியின் மூலம் மும்பை அணி தனது 4-வது தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ரோஹித் சர்மா காயம் காரணமாக விளையாடாத நிலையில், தொடக்க வீரராகக் களம் இறங்கிய குயின்டன் டி காக் அதிரடியாக விளையாடி 60 பந்துகளில் 112 ரன்கள் (8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவருக்குத் துணையாக நமன் திர் 50 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தார்.

இருப்பினும், மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறியதால், மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

196 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணிக்கு, தொடக்க வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா (15) மற்றும் கூப்பர் கான்னொலி (17) ஏமாற்றம் அளித்தாலும், அதன்பின் ஜோடி சேர்ந்த பிரப்சிம்ரன் சிங் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை பந்துவீச்சைச் சிதறடித்தனர்.

பிரப்சிம்ரன் சிங் வெறும் 39 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு ஈடுகொடுத்து ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார்.

பஞ்சாப் அணி 16.3 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. மும்பை தரப்பில் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் ஏதுமின்றி 41 ரன்களை வாரி வழங்கினார்.

இம்பாக்ட் பிளேயராக வந்த அல்லாஹ் கஜன்பர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles