கண்டி, நுவரெலியாவில் இன்று மழை

நாட்டின் சில பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

மழைப்பொழிவு: மேல் மற்றும் சபரகமுவா மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் பல தடவைகள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மாலை நேர மழை: அம்பாறை, மொணராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வறண்ட வானிலை: நாட்டின் ஏனைய பிரதேசங்களில் முக்கியமாக வறட்சியான வானிலை நிலவும்.

பலத்த காற்று: மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

எச்சரிக்கை: இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடற்பகுதிக்கான வானிலை முன்னறிவிப்பு

மழை: நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

காற்றின் வேகம்: தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசும். காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றராக காணப்படும். காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். ஏனைய கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

கடலின் நிலை: காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். தீவைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்.

அலைகளின் உயரம்: புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 – 2.5 மீற்றர் வரை உயரக்கூடும்.

எனவே, குறித்த கடற்பகுதிகளில் கடற்தொழிலில் ஈடுபடும் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles