இன்றும் மழை: 3 மாவட்டங்குளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் மற்றும் காலி மாவட்டத்திலும் சில இடங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகளவிலான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதன் காரணமாக, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, இடி, மின்னல் தாக்கங்களின் போது மரங்களின் கீழோ அல்லது திறந்தவெளிகளிலோ நிற்பதைத் தவிர்க்கவும். மின்னணு சாதனங்களை அணைத்து வைக்கவும்.

மழையுடன் கூடிய கடுமையான காற்று வீசக்கூடும் என்பதால், பலவீனமான மரங்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்கவும்.

அதேவேளை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று வெள்ளிக்கிழமை (22) அதிகாலை 3.00 மணி முதல் நாளை சனிக்கிழமை (23) அதிகாலை 3.00 மணி வரை செல்லுபடியாகும்.

அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் உள்ள அத்தனகல்ல பகுதிக்கும், இரத்தினபுர மாவட்டத்தில் உள்ள குருவிட்டா மற்றும் இரத்தினபுர பகுதிகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை மாவட்டத்தில் உள்ள புலத்சிங்கல பகுதிக்கும், இரத்தினபுர மாவட்டத்தில் உள்ள எஹெலியகொட பகுதிக்கும் முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles