நாட்டை மீட்க ரணில் மீண்டும் வருவார்: ராஜித நம்பிக்கை!

“2029 ஆம் ஆண்டுக்கு முன்னரே ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதி ஆவார். நாட்டுக்காக அவர் சவாலை ஏற்பார். வலுக்கட்டாயமாகவேனும் நாம் அவரை அழைத்துவருவோம்.”

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“2ஆவது தடவையும் நாடு வங்குரோத்தடைந்தால் மீண்டெழுவது கடினம் என ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டி இருந்தார். எனவே, அவ்வாறானதொரு நிலை ஏற்படுவதற்கு முன்னர் ரணிலுக்கு ஆட்சி கிடைக்கப்பெற்றால் சர்வதேசத்துடன் பேச்சு நடத்தி, மீண்டெழக்கூடும்.

மக்களிடம் உண்மையைக்கூறியே ஆட்சியை பொறுப்பேற்க வேண்டும். தம்மால் முடியும் என்பதை செய்து காட்டிய தலைவரே ரணில் விக்கிரமசிங்க. ரணிலின் பொருளாதார மீட்சித் திட்டம் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள்கூட பாராட்டினார்கள்.

நாட்டை மீட்டெடுப்பதற்குரிய பயணத்தில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் இணைவார். அவரை பலவந்தமாகவேனும் கொண்டுவருவோம்.

நெருக்கடி நிலையை மக்களுக்கு தாங்க முடியாதவேளை புரட்சி வெடிக்கும். கிறிஸ் நாட்டில் நான்கு தடவைகள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டன. இலங்கையில் தற்போது புதிய அரசியல் கலாசாரமே உள்ளது. ரணில் விக்கிரமசிங்க 2029 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதியாகக்கூடும்.” – என்றார் ராஜித சேனாரத்ன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles