” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2020 மார்ச் முதலாம் திகதி முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்தது.
ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்று ஏழு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.
இவ்வாறு மக்களை ஏமாற்றும் அரசாங்கத்துக்கு ஆகஸ்ட் 5 ஆம் திகதி பொது மக்கள் தக்கபாடம் புகட்டவேண்டும்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.