IMFபின் செல்லப்பிள்ளையாக NPP அரசு

நாட்டிற்கு சுமையை ஏற்படுத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இணக்கப்பாடுகள் திருத்தப்படும் என கடந்த தேர்தல் காலத்தில் தற்போதைய அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், இன்று ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி (NPP) அவை அனைத்தையும் மறந்துவிட்டு, ரணில் விக்ரமசிங்கவின் இணக்கப்பாட்டையும் தாண்டி தீவிர வலதுசாரி நவதாராளவாத வேலைத்திட்டத்தை நோக்கிச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பன்னல, தலம்மெஹெர பதிரண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,

“தேர்தல் காலத்தில் எங்களைப் போன்றே தேசிய மக்கள் சக்தியும் IMF இணக்கப்பாட்டை மாற்றுவோம் என்றுதான் கூறியது. ஆனால் இன்று, IMF நிபந்தனைகளைத் திருத்தி, அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை விடவும் அதிக வரிகளை இந்த அரசாங்கம் மக்கள் மீது விதித்து வருகின்றது.

IMF இணக்கப்பாட்டின்படி முதன்மைக் கணக்கு (Primary Account) உபரி 2.3% ஆக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், தற்போதைய அரசாங்கம் அதனை 5.4% ஆகக் கொண்டு சென்றுள்ளது.

அரசாங்க வருமானம் IMF இலக்குகளின்படி 13.9% ஆக இருக்க வேண்டிய நிலையில், தற்போதைய அரசாங்கம் அதனை 15.4% ஆகப் பேணி வருகின்றது. மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்தும், அரசாங்கத்தின் மூலதனச் செலவினங்களைக் குறைத்துமே இவை அனைத்தையும் செய்துள்ளனர். ஆட்சியாளர்களுக்கு IMF-இன் செல்லப் பிள்ளையாக மாறி ‘கிண்ணத்தை’ வெல்ல வேண்டுமே தவிர, மக்களைப் பற்றி கவலையில்லை.

நீதித்துறைசஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.க்கு முறையற்ற அழுத்தம்

அரசாங்கம் எதிர்க்கட்சியின் வாயை மூடி, சுயாதீன நடுநிலையான நீதித்துறை மீது முறையற்ற செல்வாக்கைச் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றான நீதித்துறையைத் தங்களின் கைப்பாவையாக மாற்ற முயற்சிக்கின்றனர்.

உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பதவிகளில் வெற்றிடங்கள் காணப்பட்ட போதிலும் அவற்றை நிரப்பாமல் இருக்கவும், நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கவும் அரசாங்கம் முயற்சித்து வருகின்றது” என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles