களுத்துறை மாவட்ட சிறுபாண்மை மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளையும் பங்களிப்புகளையும் வழங்கிவரும் களுத்துறை மாவட்ட வெற்றி வேட்பாளர் பாலித்த தெவரப்பெருமவுடன் கைகோர்த்தார் சண்.பிரபா.
களுத்துறை மாவட்டத்தில் தமிழ்ப்பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்காக இத்தேர்தலில் வெற்றிபெறுவதற்காக தான் உதவி புரிவதாக பாலித்த தெவரப்பெரும தன்னிடம் உறுதியளிததுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் சண்.பிரபா தெரிவித்துள்ளார்.
நேற்று (04/07) அவரது காரியாலயத்திற்குச் சென்று சந்தித்த வேளையிலேயே தெவரப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சிறுபாண்மை மக்களிள் வாக்குகள் மாத்திரம் அலல பெரும்பாண்மை மக்களின் வாக்குகளையும் பெற்று தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உதவுவேன்.
இத்தேர்தலில் களுத்துறை மாவட்டத்திற்கு சிறுபாண்மை பிரதிநிதித்துவத்தை வெற்றிக் கொள்வதற்கு நிச்சயமாக உதவுவேன் என உறுதியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.