றோகண விஜேவீரவின் குடும்பத்தின் பராமரிப்புக்கு இதுவரை 26 மில்லியன் ருபா செலவு

ஜேவிபி நிறுவுநர் றோகண விஜேவீரவின் குடும்பத்தினரின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக, 1992 முதல் இன்று வரை அரசாங்கத்தினால் ரூ. 26,278,052.39 ( சுமார் 26 மில்லியன்) செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டார்.

றோகண விஜேவீரவின் மனைவியான, சித்ரங்கனி பெர்னாண்டோவும், அவர்களது ஆறு பிள்ளைகளும் ஆரம்பத்தில் 1992 ஜூன் 11 ஆம் நாள் முதல் 1999 ஓகஸ்ட் 22 ஆம் திகதி வரை திருகோணமலை கடற்படைத் தளத்தில் அரச பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.

1999 ஓகஸ்ட் 23 ஆம் திகதி முதல், அவர்கள் வெலிசற கடற்படைத் தள வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்தக் குடும்பத்தின் பராமரிப்புச் செலவுகளை எந்தவொரு தனிநபரோ அல்லது குழுவோ ஏற்கவில்லை.

கடற்படைத் தலைமையகத்தின் வெளித்தொடர்பு அலுவலகம் வழங்கிய தகவலின்படி, வெளிநாடுகளிடமிருந்தும் எந்த உதவியும் பெறப்படவில்லை.

அந்தக் குடும்பத்தில் முதலில் விஜேவீரவின் மனைவி, நான்கு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்தனர்.

தற்போது, ​​மனைவியும், சிறப்புத் தேவை கொண்ட ஒரு மகளும் மட்டுமே அரச பாதுகாப்பில் உள்ளனர்.

அரசாங்கம் தற்போது அவர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக மாதத்திற்கு ரூ.1,53,220.25 செலவிடுகிறது என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1960களில் ஜே.வி.பி.யை நிறுவி, 1971 இலும், 1987 முதல் 1989-க்கு இடைப்பட்ட காலத்திலும் அரசுக்கு எதிராக இரண்டு ஆயுத கிளர்ச்சிகளை வழிநடத்திய றோகண விஜேவீர, 1989 நொவம்பரில் அரச படைகளால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

அதன் பின்னர் அவரது குடும்பம் அரச பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு, மூன்று பத்தாண்டுகளுக்கு மேலாக அரசாங்கப் பராமரிப்பில் இருந்து வருகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles