யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய (20) அகழ்வின் போது 08 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 38 ஆம் நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது.
இன்றைய அகழ்வின் போது புதிதாக 08 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 06 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 454 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 440 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
