கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்தார் சூர்யவன்ஷி!

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக சதத்தை வைபவ் சூர்யவன்ஷி எட்டுவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் நேற்று வெறும் 3 ஓட்டங்களால் சதத்தை தவறவிட்டார். எனினும், இந்த ஆட்டத்தில் பல்வேறு சாதனைகளை அவர் படைத்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற கிறிஸ் கெயிலின் (2013 சீசன் – 59 சிக்ஸர்கள்) சாதனையை வைபவ் சூர்யவன்ஷி தகர்த்துள்ளார்.

நடப்பு சீசனில் 65 சிக்ஸர்களை வைபவ் சூர்யவன்ஷி விளாசியுள்ளார். இந்த சீசனில் 15 இன்னிங்ஸில் 680 ஓட்டங்களை அவர் எடுத்துள்ளார்.

இதன் மூலம் ஒரே சீசனில் அதிக ஓட்டங்களை விளாசிய Uncapped (சர்வதேச கிரிக்கெட்டில் சீனியர் பிரிவில் விளையாடாத வீரர்) வீரர் ஆகியுள்ளார் அவர்.

Related Articles

Latest Articles