ஐக்கிய தேசியக் கட்சி தனது 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 06) கட்சி தலைமையகமான ‘சிறிகொத்த’வில் சிறப்பு நிகழ்வொன்றை நடத்தவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் காலை 09.00 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.
டி. எஸ். சேனாநாயக்கவினால் 1946ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி, பல தசாப்தங்களாக இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிரணி பிரமுகர்களுக்கு இந்நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.










