சட்டவிரோத இணையவழி சூதாட்ட வலைத்தளங்கள் 24 ஐ முடக்கியது இலங்கை (முழுப் பட்டியல்)

உரிமம் இன்றி இயங்கி வந்த 24 சட்டவிரோத இணையவழி (online) சூதாட்ட வலைத்தளங்களுக்கான அணுகலை இலங்கை முடக்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் (TRCSL) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த வலைத்தளங்களை முடக்குமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபையின் கோரிக்கைக்கு இணங்க, 2025 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் கூற்றுப்படி, இச்சட்டத்தின் 15, 16, 18 ஆம் பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் உரிமம் இன்றி இலங்கையில் இணையவழி சூதாட்ட சேவைகளை நடத்துவது அல்லது விளம்பரப்படுத்துவது பிரிவு 44 இன் கீழ் குற்றமாகும்.

முடக்கப்பட்ட வலைத்தளங்கள் வருமாறு:
1xbet.com
betway.com/en-lk
22bet.com
melbet.com
unibet.com
betfair.com
dafabet.com
bet365.com
1win.com
spinbetter.com
10cric.com
bc.game
megapari.com
pin-up.bet
stake.com
mostbet.com
parimatch.com
betwinner.com
linebet.com
4rabet.com
rajabets.com
dbbet.com
coldbet.com
WinWin

இலங்கையின் சட்டக் கட்டமைப்புக்கு உட்படாமல் இயங்கும் அங்கீகரிக்கப்படாத இணையவழி சூதாட்ட தளங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அவற்றில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் என்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் TRCSL ஆகியவை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.

Related Articles

Latest Articles