கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் ஆகஸ்ட் 23 ஆம் திகதி தொடங்கவுள்ள இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 14 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வணி மாற்றத்தில் நிஷான் மதுஷ்க நீக்கப்பட்டுள்ள அதேவேளை, கமில் மிஷார மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் புதிதாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தனஞ்சய டி சில்வா தொடர்ந்து அணியின் தலைவராகச் செயல்படவுள்ளதுடன், கமிந்து மெண்டிஸ் உப தலைவராகப் பணியாற்றுவார்.
காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.











