தமிழக அமைச்சர் ராஜ்மோகனுடன் இலங்கை எம்.பி. அர்ச்சுனா சந்திப்பு

தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை தமிழக அரசின் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகனை, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது, கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சி சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, இலங்கைத் தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாடு மற்றும் தமிழ் மொழிச் சார்ந்த முன்னெடுப்புகள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுடன் அவரது கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் சந்திப்பு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles